உலகம் செழிக்கும்
நதி!
நம் உறவுகளின் பாலம்,
ஊற்றாய்ப் பிறந்து!
விதம் விதமாய்ப் பெயர் கொண்டு
பெருக்கெடுத்து ஓடும்.
ஊருக்கு ஊர், மாநிலத்துக்கு
மாநிலம் ! நாட்டுக்கு நாடு
சிற்றாறாய், கால்வாயாய்,
உறவுகளாய் இணைத்திருக்கும்,
சரம்!
இயற்கை அளித்த மலர்களால்,
இயற்கையே கோர்த்த சரம் !
எடுத்துக் கழுத்தில் போட்டுக்
கொள்ள யாருக்கும் சொந்தமில்லை.
இயற்கை அளித்த கொடை
இயற்கைக்கு மட்டுமே சொந்தம்.
எல்லைக்கோடுகளைப் போட்டுக்கொண்டு
ஊருக்கு ஊர், மாநிலத்துக்கு மாநிலம்,
நாட்டுக்கு நாடு, சொந்தமென்று
போராடாமல், பகிர்ந்து செலவுகள்
செய்தால் இயற்கை நமக்களித்த
இந்தச் செல்வத்தால் உலகம் செழிக்குமே!.
தாமோதரன்