MNTS வாழையிலை விருந்து 2016
வாழையிலை விருந்து என்றால் பெரியவர் முதல் சிறுவர் வரை அனைவருக்கும் ஆனந்தமே
பல வகையான உணவுகள், அதுவும் வாழை இலையில் பரிமாறுவதற்கென்றே நம் முன்னோர்கள் எந்த வரிசையில் உண்பது என்ற வரைமுறை வகுத்து அதற்கான முறையில் இலையின் எந்தப் பகுதியில் என்ன உணவு இருக்க வேண்டும் என்று கூட வரையறுத்துள்ளனர். உணவிற்குத் திருவிழா எடுப்பது, பருவகாலத்திற்கு ஏற்றாற்போல் உணவை உண்பது, உணவே மருந்து என்று வாழ்ந்து, உணவைக் கொண்டாடியது போன்ற சிறப்பம்சம் கொண்ட சமூகம் நம் தமிழ்ச் சமூகம்,
இந்த ஆசையை நிவர்த்தி செய்ய மினசோட்டா தமிழ்ச் சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு வாழையிலையில் அறுசுவை விருந்து ஏப்ரல் 30ம் தேதி 2016 அன்று ஹாப்கின்ஸ் கம்யூனிட்டி அரங்கில் நடைபெற்றது.
இந்த ஆண்டு விருந்தில் தன்னார்வலர் பலர் முன்வந்து, கீழ்க்கண்ட உணவு வகைகளைத் தயார் செய்து கொடுத்தனர். சாதம் (சோறு), சாம்பார், பருப்பு, நெய், பாகற்காய் புளிக்குழம்பு, வேப்பம்பூ இரசம் , உருளை வறுவல், தாளித்த மோர், மோர் மிளகாய், தயிர் பச்சடி, அவியல், நாரத்தங்காய் ஊறுகாய் , பச்சைப் பயிறு சுண்டல் (முளைகட்டிய சிறுதானியம்), கொத்தவரங்காய்க் கூட்டு, கீரைக் கடைசல், மாங்காய்ப் பச்சடி, புடலங்காய்ப் பொரியல், அப்பளம், தினைப் பாயசம், லட்டு, வடை.
இந்த விருந்தில் நாநூற்றுக்கும் மேற்பட்ட இலைகளுக்குத் தேவையான உணவு பறிமாறப்பட்டது.
பெட்டிக்கடை
உணவு மட்டுமில்லாமல், நம்மூரில் இருப்பது போன்ற ஒரு சிறிய பெட்டிக் கடை போட்டு, ஊரில் மட்டுமே கிடைக்கும் பல பொருட்களை விற்பனை செய்தனர். மதுரையிலிருந்தும் தஞ்சையிலிருந்தும் கொணர்ந்த
வாழையிலை, மாவிலை, மதுரை மல்லி, கடலை மிட்டாய், வேறு பல வகை மிட்டாய்கள் பனங்கற்கண்டு மற்றும் பால் ஆகியவற்றை விற்பனை செய்தனர்.
அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில உங்களின் பார்வைக்காக: