2016 மினசோட்டாத் தமிழ்ச்சங்கக் கோடை மகிழுலா
மினசோட்டாத் தமிழ்ச்சங்கம் வருடா வருடம் ஒருங்கிணைத்து நடத்தும் கோடை மகிழுலா, இவ்வருடம் ஜூலை 9 ஆம் தேதியன்று ப்ளூமிங்க்டன் நகரில், ஹைலேண்ட் பார்க் ரிசர்வில் (Hyland Lake Park Reserve) நடந்தது. மினசோட்டாவில் வசிக்கும் தமிழ் மக்கள் பெரும்பாலோர், இதில் குடும்பத்துடன் ஆர்வமாக கலந்துக்கொண்டனர்.
ஏற்கனவே திட்டமிட்டப்படி, ஒவ்வொருவரும் விதவிதமான உணவுப்பொருட்களைக் கொண்டு வர, காலை பதினொரு மணிக்குத் தொடங்கிய மகிழுலா, குழந்தைகள், பெரியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளுடன் மாலை ஐந்து மணி வரை நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து வந்திருந்த பெற்றோர்கள் சிலர், இந்த மகிழுலாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துக்கொண்டு, நிகழ்வுகள் அனைத்தையும் மகிழ்வுடன் கண்டுகளித்தனர்.
வந்திருந்த அனைவரின் பங்களிப்புடன் நடைபெற்ற சிறப்பு மதிய உணவுக்குப் பிறகு, குழந்தைகளுக்கான சாக்குப்பை போட்டி, எழுமிச்சைப்பழப் போட்டி, கயிறு இழுத்தல் போட்டி போன்றவைகளும், பெரியோர்களுக்கான கபடி போட்டி, கோலப்போட்டி போன்றவைகளும் நல்ல ஆர்வமான பங்கேற்புடன் நடந்தன.
பிறகு, போட்டியில் வென்றவர்களுக்குக் கோப்பையும், பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன. நிகழ்வின் நினைவாகக் கூட்டுப் புகைப்படமும் எடுக்கப்பட்டு, 2016ஆம் ஆண்டின் மகிழுலா இனிதே முடிவுற்றது.
MNTS Summer Picnic 2016
– சரவணக்குமரன்