\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

எது பிரதானம்?

Filed in இலக்கியம், கவிதை by on July 31, 2016 0 Comments

People 0190

எண் சாண் வயிறுக்கு சிரசே பிரதானம் !!

சொல்லக் கேட்டிருப்பீர், ஆழ்ந்து சிந்தித்ததுண்டோ?
சிரசே பிரதானமோ, சீரிய பேச்சிதுவோ?

சுட்டெரிக்கும் வெய்யிலிலே, சுகம் கருதா வாழ்வினிலே
பட்ட துயரனைத்தும் பாழும் வயிற்றினாலிலையோ?

தற்குறிப் பாமரர்களையும் தானேற்ற பதவிகளால்
திறமைமிகு பண்டிதரும் துதிபாட வைத்திலையோ?

லஞ்சத்திலே உழலும் லட்சியமற்ற அதிகாரிகளையும்
பஞ்சமில்லா வாழ்வுவேண்டி முகந்துதிக்கச் செய்திலையோ?

பூமிதனில் சுகமுடனே பூரிப்பாய் வாழ்ந்திடவே
புரிந்திடுக பல்வேறு நேர்மையிலா இழிசெயலென

சகல மானுடர்க்கும் சளைக்காமல் உத்தரவிடும்
சாண்வயிறொன்றே எண்சாண் உடலுக்குப் பிரதானமன்றோ?

வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad