மனித வாழ்வின் தத்துவம்
“அன்னை” என்பதும் மூன்றெழுத்து
“தந்தை” என்பதும் மூன்றெழுத்து
ஆவர்களுக்கு பிறக்கும் “மகன்” அல்லது
“மகள்” என்பதும் மூன்றெழுத்து
ஆவர்கள் பேசும் மொழி
“மழலை” என்பதும் மூன்றெழுத்து பெற்றோர்
நமக்கு தரும் “கல்வி” என்பதும் மூன்றெழுத்து
கல்வியினால் கிடைக்கும் அறிவு என்பதும் மூன்றெழுத்து
அறிவை பயன்படுத்தி நாம் ரூடவ்ட்டும் “பணம்” என்பதும் மூன்றெழுத்து
நமக்கு முதலில் வரும் பருவம் “இளமை” என்பதும் மூன்றெழுத்து
அதன்பின் வரும் “முதுமை” என்பதும் மூன்றெழுத்து
நாம் செய்ய வேண்டிய “கடமை” என்பதும் மூன்றெழுத்து
நாம் வாழும் காலத்தில் கிடைக்கும் “புகழ்”; என்பதும் மூன்றெழுத்து
நமது வாழ்க்கை “முடிவு” என்ற நிலை
அடையும் இடம் “ஞாலம்” என்பதும் மூன்றெழுத்து
-பத்மினி உமாசங்கர்