வன்முறை மறுப்பு நாள் – NON VIOLENCE DAY
இந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி இந்தியாவின் தேசத் தந்தை ஆன காந்தியின் 147 ஆவது பிறந்த நாளை “வன்முறை மறுப்பு நாள்” (NON-VIOLENCE DAY) முதன் முறையாக மினசோட்டா மாநிலத்தின் தலைநகரக் கட்டிட அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவை இந்திய மினசோட்டா அசோசியேஷன் மற்றும் மினசோட்டா இந்துக் கோவில்இரண்டும் இணைந்து ஏற்பாடு செய்து இருந்தனர்.
புருஷ் கோரி இந்திய மினசோட்டா அசோசியேஷன் சார்பில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழக்கினார். மினசோட்டா மாநில அமைப்பு சார்பில் மாநில உறுப்பினர்கள் மற்றும் பல அமைப்பு தொடர்பான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கு கொண்ட அனைவரும் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். விழாவில் மற்ற அமைப்புகளில் சிறந்த சேவை செய்த உறுப்பினர்களுக்குக் கேடயம் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டது.
மினசோட்டா மாநில சார்பில் “வன்முறை மறுப்பு நாள் – NON-VIOLENCE DAY ” சாற்றுதல் வழங்கப்பட்டது. அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வாசகர்களின் பார்வைக்காக !
NON-VIOLENCE DAY
புகைப்படங்கள்: இராஜேஷ் கோவிந்தராஜன்.