அன்பின் பெருமை
அன்பு என்பது நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்று போல அவசியமானது.
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது “
என்பது வள்ளுவர் வாக்கு.
இல்லறம் நல்லறம் ஆக அன்பு இன்றியமையாதது அன்பினால் கிடைக்கக்கூடிய பலன்கள் எண்ணிலடங்கா. நமது ஆற்றல், மன வலிமை, உடல் வலிமை, அறிவாக்கம் இவற்றுக்கு உறுதுணையாக நிற்பது அன்பே.
நமது வாழ்க்கை ஒரு கணித மேடை போன்றது.
நமது நண்பர்களையும், சுற்றத்தாரையும் கூட்ட வேண்டும் (+)
பகைவரை விலக்க வேண்டும் (-)
நமது சந்தோஷத்தைப் பெருக்கி கொள்ள வேண்டும் (X)
நம்முடைய துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் (%)
நம் வாழ்க்கை என்பது சக்கரம் போன்றது அதில் இறைவனை மையமாகக் வைத்து அன்பை ஆரமாக கொண்டு நாம் வாழ்க்கை பயணத்தை நடத்த வேண்டும்.
அன்பினால் தீய குணங்களான கோபம், பொறாமை, அகந்தை ஆகியவை அழிக்கப்படுகின்றன. அன்பு என்ற மூன்றெழுத்தினால் பாசம், பரிவு, உண்மை, பண்பு, கடமை ஆகிய நற்குணங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.
அன்பினால் சாதிக்க முடியாதது இவ்வுலகில் எதுவுமில்லை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
- பத்மினி உமாசங்கர்
சுருக்கமான ஆனால் தெளிவான கட்டுரை. வாழ்த்துக்கள்.