\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

முத்தம் தாராயோ

Filed in கவிதை, வார வெளியீடு by on October 30, 2017 1 Comment

மாயக் கவிக்கு முத்தமொன்று தாராயோ
என் மனதினுள் நுழைந்து
என்னைக் கலைந்தவளே
என் பொன் மானே

மாயச் சாவி கொண்டு
என் மனதினைக் கொள்ளை கொண்டவளே
வண்ண மலர்களால் எனைக் கொய்தவளே
என் பெண் மானே

இலையுதிர் காலத்தின் சுகத்தை
தன் இதழால் வருடிக் கொடுத்தவளே
காந்தப் பார்வையால் எனை நெய்தவளே
என் பெண்ணழகே

பனிக்காலக் குளிரின் இதத்தை
தன் அழகின் அணைப்பால் அணைத்தவளே
கள்ளப் பார்வையால் எனைக் கட்டி இழுத்தவளே
என் அழகே ! அழகின் அழகே !!

சற்றே இளைப்பாற முத்தம் ஒன்று தாராயோ…

-உமையாள்-

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. எம்.சக்திவேல் says:

    முத்தக்கவிதை மிக அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad