\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அடைந்ததென்ன? இழந்ததென்ன?

Filed in இலக்கியம், கவிதை by on April 16, 2013 1 Comment

adainthathu_enna_520x624இலவசம் – அடைந்ததென்ன? இழந்ததென்ன?

 சந்தையிலே விற்பதற்கு – மண்ணெண்ணை இலவசம்

சாதிச்சலுகை பெயரில் – வேலையுமே இலவசம்

மின்னிணைப்பு இல்லை – தொலைக்காட்சி இலவசம்

மீளாத்தடங்கல் என்றும் – மின்சாரம் இலவசம்

உன்னுரிமை வாக்களிக்க – ஐநூறு இலவசம்

ஊன்வளர்க்க அரிசிகூட – மலிவுவிலை இலவசம்

எரிவாயு சமையலுக்கு – விலைக்குறைப்பு இலவசம்

ஏற்றம்காண நீகொடுக்கும் – லஞ்சம்கூட இலவசம்

ஒன்றொன்றாய்ப் பறிப்பதற்கு – இன்றிங்கே இலவசம்

ஓர்காலத்திலே நலிந்தவர்க்கு – ஊக்கம்தானே இலவசம்

மேலாண்மை தந்த – வணிகவிந்தை இலவசம்

வேளாண்மை நலிய – செய்ததிந்த அவலம்

பெற்றதொன்று கைநீட்டி – இலவசமாம் சன்மானம்

விற்றுவிட்டாய் சில்லறைக்கு – நீசேர்த்த தன்மானம்

அப்பிச்சையினை நீயும்பெற – கிடக்கின்றாய் நெடுந்தவம்

அந்நெரிசலிலே சிக்கியுருளும் – தலைகளங்கே ஒருபுறம்

அடைந்ததென்ன இழந்ததென்ன – நினைத்துப்பாரேன் ஒருகணம்

கவனத்தை உழைப்பிலிடு – அடைவாய்நீ பலநலம்

– சச்சிதானந்தன்  வெ.

 

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. A.Sethupathi says:

    ilavasthil ivvalauv ullatha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad