\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மினசோட்டாவில் கர்நாடக சங்கீதம்

கர்நாடக சங்கீதம் என்னும் சாகரத்தில் கல்பித சங்கீதம், கல்பனா சங்கீதம் என்று இரு வேறு சாகரங்கள் உண்டு. இதில் ஒரு சாகரத்தைக் கடப்பதற்கே ஒரு ஆயுட்காலம் போதாது. இதில் இரண்டு சாகரங்களையும் கற்று, முறையாகப் பயிற்சி செய்து, அதில் தேர்ந்து, வெற்றி பெறுவதென்பது அசாத்தியமான காரியம்.

குருவருளும் , திருவருளும் கூட இணைந்து செல்வி.நந்தினி ஸ்ரீதர் மாதிரி சிறிய வயதிலேயே சங்கீதத்தில் தலை சிறந்த பாடகர்களாக வருவது மிகப் பாராட்டத் தக்க விஷயம். செல்வி. நந்தினி ஸ்ரீதர்  சங்கீத கலாநிதி சித்ர வீணா திரு. ரவிக்கிரன் அவர்களிடம் சங்கீதம் பயில்கிற மாணவி.  டிசம்பர் 24 ஞாயிறு இரவு ஹிந்து சொசைட்டி ஆஃப் மினசோட்டா நடத்திய ” An evening of carnatic musical enchantment ” நிகழ்ச்சியில் இம்முறை, பாடகர் செல்வி. நந்தினி ஸ்ரீதர், வயலினில் திருமதி. அபர்ணா ஸ்ரீவத்சன் , மிருதங்கத்தில் திரு ஸ்ரீராம் நடராஜன், கடத்தில் திரு பாலாஜி சந்திரன் ஆகிய நால்வர் கூடிய இசை  நிகழ்ச்சி மிகுந்த சுவையோடு நிகழ்ந்தது.

“சரசூட நின்னே கோரி” என்ற வர்ணத்தோடு கருணா ரசத்தில் தொடங்கியது கச்சேரி.

அதைத் தொடர்ந்து, “மகா கணபதிம் மனசாஸ்மராமி” என்று நாட்டையில் கம்பீரமாகத் தொடங்கினார். பூர்வி கல்யாணியில் ராக ஆலாபனை மனதைச் சாந்தமாக்கியது.  “பத்மாவதி ரமணம் ஜெயதேவ கவிராஜா” என்று தொடங்கி கீர்த்தனையில் “யத் கோபி வதநேன்து” என்று அனுபல்லவியில் நெரவலுடன் கூடிய கல்பனா ஸ்வரம் பாடி அசத்தினார். சரளமாக வந்த ஸ்வரங்கள் அவர் சங்கீத ஞானத்தைப் பறை சாற்றியது.

கச்சேரியின் முக்கியப் பகுதியாக ” கரஹரப்ரியாவில்” சஞ்சாரம் செய்த செல்வி.நந்தினியும் அதற்கு இணையாக திருமதி.அபர்ணாவின் வயலினும் மீண்டும் நம் மனதைக்  கருணா ரசத்தில் திளைக்கச் செய்தனர்.

“ராசகேலி விலாச” என்று கீர்த்தனையில் செல்வி.நந்தினி கல்பனா ஸ்வரம் கோர்வையை  மிக அழகாக அமைத்தார்.  மிருதங்கமும், கடமும்  தனி ஆவர்தனையில் அசத்தினார்கள்.

இடையில் பாடிய கீர்த்தனைகளிலும் சங்கீத ஞானம் மிளிரும்படிப் பாடினார்.

இறுதியில் “அஷ்ட லட்சுமி நமோஸ்துதே ” என்று ராகமாலிகையும், த்விஜாவந்தியின் தில்லானாவும் தன் குருவான திரு ரவி கிரண் அவர்களின் கீர்த்தனைகளாகவே பாடி அசத்தினார்.

பழமை பெரும் நம் கலாச்சாரத்தைப் பறை சாற்றும் கலைகளை இளையோர்  அழகாகப் பயின்று தேர்வது மிகப் பெருமையாக உள்ளது. இதற்காகவே பொருள் ஒதுக்கீடு செய்து, இக்கச்சேரிகளை முழுவதும் பார்வையாளர்களுக்கு இலவசமாகவே  இருக்கும்படி ஒருங்கிணைக்கும் ஹிந்து சொசைட்டி ஆஃப் மினசோட்டா விற்கு மனமார்ந்த நன்றிகள்.

பாடகர் நந்தினி ஸ்ரீதர் மென் மேலும் சங்கீதத்தில் பெரும் புகழும், ஞானமும் பெற்று வளர வாழ்த்துக்கள்.

– லட்சுமி சுப்பு

Comments (4)

Trackback URL | Comments RSS Feed

  1. T.S. Ramaswany says:

    Our dearest Nandini
    We are very very happy to know that your music performance at MN went off extremly well
    We heartily congratulate you for this
    Keep it up Nandini
    Thatta Patti
    Thrissur

  2. Raman says:

    Dear Nandini
    Congratulations. Read the review of your program.
    Very happy to see your achievements.
    Keep it up.
    Best wishes
    Raman and Uma

  3. Lakshmanan SR says:

    Congratulations Nandini! Wish you all the success in your future programs.

    Regards,
    Lakshmanan

  4. Kalyani and Subash says:

    Congratulations, Nandini. It was great to hear you in person and then seeing such a deep review as well.

    You have loads of talent and we wish you all success.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad