காமம்!!
சந்திர மண்டலம் சடுதியில் செல்பவரும்
இந்திரிய இன்பத்திற்காகத் திரும்ப வந்திடுவர்!
மந்திரம் மாயமென கபடம் பேசுபவரும்
தந்திரம் செய்தாவது திரைமறை சுகித்திடுவர்!
இயந்திர கதியில் இல்வாழ்வு நடத்துபவரும்
இதந்தர வேண்டி இரவினில் கூடிடுவர்!
மதந்தரு போதனைகள் மாண்புடன் கற்றவரோ
பயன்தரு வகையினிலே பண்புடனே கடன்புரிவர்!
இச்சையாய்ச் சேருவதே இறைவனின் படைப்பென்றால்
கொச்சையாய் அதனையும் கூவிடுவது எதனால்?
சர்ச்சையாய் ஒருவரின் இணக்கமும் இன்றியே
பச்சையாய்ப் புணர்ந்திட முயல்வதொன்றே பாவம்!
இருவரும் வளர்ந்து வயதிற்கு வந்தவரெனின்
இருவரின் ஒப்புதலும் இனிதே இருக்குமாயின்
பின்னொருவர் எவருக்கும் பிழையால் இடரிலையெனில்
இன்னொருவர் எவரின் இயைதலும் தேவையில்லை!
நீதியையும் நேர்மையையும் நினைவிலே கொள்ளும்வரை
ஆதியிலே உருவான காமமதும் நல்லுணர்வே !!!
– வெ. மதுசூதனன்.
இந்த பூகோள மேடையில்
பாத்திரத்தில் ஒன்றிய மனிதா
இந்திரிய சுகங்களில்
பற்றுண்டு இருப்பது சரியா?
ஞானிகள் ஆயிரம் வந்து
சரியல்ல அளவில்லாகாமம் உணர்த்தியும்
பரிணாம தருமம் சொல்லி
சுவர்பின் இருப்பதை ஊருக்கு உரைப்பதா?