\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கொரோனா

மென்மை எனும் இப்பூவுலகின்  

உண்மை நிறம் தன்மை மாற

வன்மை கொண்ட மண்ணை ஆள்பவன்

திண்மை நிரம்பி அதனை மாற்ற 

 

வந்ததோர் பிணி உலகில்

மரித் தோர் பிண லட்சம்

தரித் தோர் நுனி உயிரில்

காத் தோர் எனக் கடவுள் 

 

நெஞ்ச மது பதைப தைக்க

அச்ச மது அதைச்சி தைக்க

தஞ்ச மது தனிமை யிருக்க

மிஞ்சி யது மனிதம் காக்க

 

காப் பாய் மனித சேனா

வாழ்! தீய மாமிச உண்ணா

உலகு காக்க உதவு கண்ணா 

சுத்தம் கொண்டு துரத்து கொரோனா!

 

-ஜாஃபர்நூரி

Tags: ,

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Naseem khadeeja says:

    Classic Tamil poem sol ilakanam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad