சாபம் பொய்யாகட்டும் ….
Podcast: Play in new window | Download
Subscribe: Apple Podcasts | Spotify | Email | RSS
மகா அசுரன்
கொரோனாவின் கோரத்தாண்டவத்திலும்
இனிய பல சம்பவங்கள்
நிஜமாய் நிகழும்போது,,,,
கல்மனம் கொண்ட மனிதனே
உதவும் உள்ளங்களாக
உலவும் போது,,,,
கடவுளே
கதவைச் சாத்திக்கொண்டபோதும்,
எமனே அஞ்சி ஒதுங்கிட,
மருத்துவர்களோ….
கொரோனாவையும்
நோயாளியையும்
சவாலோடு சந்திக்கும்போது….
(சில )மனிதனே
உன் இதயத்தில் இன்னுமா இரக்கம்
பிறக்கவில்லை???
நீ
காட்டுவாசியானதேனோ?
மிருகத்தனமாய்
தாக்குதல் தொடுத்து
மருத்துவரின் மரண உடலையே
கதறவைத்தாயே…
சர்வ வல்லமையும் கொண்ட சமூகமே
அதிர்ந்து போனதே…
நீ ,
கொரோனாவை வென்றுவிட்டதாக
இறுமாப்பு கொள்ளாதே….
அது எந்த நேரமும்
உன்னையும் என்னையும் தாக்கலாம்.
உனக்கான புதைகுழியை
எங்கே எப்படி தோண்டப்போகிறாய் ?
உன்னுடன் கல்லெறிய வந்தவர்கள் நாளை
உனக்காக வருவார்களா என்ன?
அந்த கணத்தில்
ஆம்புலன்ஸ் ஓட்டுநரும்
மருத்துவரும்
உன்னை உதாசீனம் செய்தால்,
ஒரு நிமிடம் கூட
உயிர் தாங்கமாட்டாய் ..
.
ஆம்
நீ
“”உடனே கொல்லப்படுவாய்
கொரோனாவால் அல்ல… “”
உன் வினையால்
இன்று நீ செய்த வினையால் மட்டுமே…
ஆனால் இந்த
சாபம் பொய்யாகட்டும் …
மனிதன் அழகானவன்
மருத்துவன் மிக மிக
அற்புதமானவன் ..,
- பண்ணை பாலா
Super o super thalaiva
அருமை super awesome