இங்கேயும் … இப்போதும் ….
"டேய்... உங்க பாண்டிச்சேரியில தெருவுக்கு நாலு ஆஸ்பிட்டல் கூட இருக்கலாம். ஆனா... அங்க எத்தன ஆஸ்பிட்டல் இருந்தாலும், பெரியப் பெரிய சர்ஜெரிக்கெல்லாம் அங்க இருந்து பெரும்பாலானவங்க சென்னைக்குத்தாண்டா வராங்க. மாஸ்டர் செக்-அப் செஞ்சிக்கப்போறேன்னு சொல்ற.... பேசாம கெளம்பி இங்க வாடா. ஒரே நாள் தான். எட்டு ரூவால இருந்து பத்து ரூவாக்குள்ள முடிஞ்சிடும். " குமரேசன், சந்தானத்திடம் வம்படித்தான்.
"குமரேசா... நீ சொல்றதெல்லாம் சரிதான். இங்கியே கூட எனக்கு தெரிஞ்ச நர்ஸ் ஒருத்தவங்க, சென்னைல போய் செய்துக்கிட்டா... ரிசல்ட் கொஞ்சம் நம்பகத்தன்மையா இருக்கும்னு சொன்னாங்க. எனக்கு தான்டா உங்க ஊருக்கு வரதுனாலே பயம். இதுவரைக்கும் என் வாழ்நாளுல ரெண்டு தடவையோ... மூணு தடவையோ தான் வந்திருக்கேன். ஒவ்வொரு தடவையும் ஒரு கசப்பான அனுபவம். உன்கிட்டதான் ஏற்கனவே சொல்லியிருக்கேனில்ல... பாரீஸ் கார்னர்ல பழைய பஸ்டாண்டு இருக்கும்போது, ஒரு பழக்கடக்காரன் ஏமாத்தனது... அப்புறம் ஒரு முற வந்து ஆட்டோக்காரன்கிட்ட ஏமாந்தது. ஐயையோ... சென்னைன்னாலே எனக்கு அலர்ஜிப்பா."
"அடப்போடா... இவுரு எப்பையோ ரெண்டு தடவ ஏமாந்துட்டாராம்.. அதனால இங்க வரமாட்டா...