அம்மாவின் அழுகை
அம்மாவின் அழுகுரல் எந்த மகனின், மகளின் காதுக்கும் எட்டவில்லை ; எட்டினாலும் எந்த மகனுக்கும் , மகளுக்கம் மெய்யறிவு இல்லாததனால் அம்மாவின் அழுகுரலுக்கு செவிமடுக்கும் திறன் இல்லாதவர்களாக பிள்ளைகள் இருந்தார்கள்.
பிள்ளைகளின் காது செவிடாக இருந்து , காது கேட்காமல் இருந்திருந்தாலாவது தாயின் மனம் அமைதி பெற்றிருக்கும் ; செவிட்டுப் பிள்ளைகளுக்குக் காது கேட்கவில்லை ........ பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் என்ற இரக்க உணர்வாவது தாயிற்கு மேலிட்டிருக்கும்.
சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு . (குறள்:27) என்கிறது திருக்குறள் .
பிரபஞ்சத்தில் வாழும் என் எல்லா குழந்தைகளுக்கும் கிட்டதட்ட காது மட்டுமல்ல ; கண்மட்டுமல்ல ஐம்புலன்களும் நன்றாக தான் வேலை செய்கிறது . சுவை , ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐந்தின் வகையையும் நன்றாக உணர்கிறார்கள். ஆனாலும் திருவள்ளுவர் திருக்குறள் 27ல் சொன்னுதுபோல் அவர்கள் வசம் உலகமும் இல்லை ; ஐம்புலன்களும் இல்லை.
ஐம்புலன்களை அதன் போக்கில் செல்லவிடாமல் , தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும் என்கிறது திருக்குறள். ...