\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அமெரிக்காவில் 140 மில்லியன் மக்கள் ஏழ்மை பிடியில்

என்ன இவ்வளவு பெரியதா, அது எப்படி? அமெரிக்க நாட்டின் மொத்த  சனத்தொகையே 328.24 மில்லியன் தானே, அமெரிக்கா செல்வந்த நாடாச்சே, அதில் எப்படி சுமார் பாதி மக்கள் ஏழைகள் என்று நீங்கள் வினவலாம். 

இந்நாட்டில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் தமது கல்வி, வேலைத்துறை காரணமாக. அமெரிக்க வறுமைக்கோட்டிற்கு மிகவும் அப்பால்,   நல்ல வாழ்வை  அமைத்துக் கொண்டுள்ளனர். ஆயினும் அடுத்த தலைமுறையில், எமது பிள்ளைகளின் வாழ்க்கை  அடுத்த 20-30-50 வருடங்களில் எவ்வாறு அமையும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவுள்ளது. எனவே நாட்டின் நலனிற்காகவும், எமது பிள்ளைகளின் எதிர்கால நலனிற்காகவும் அமெரிக்க ஏழ்மை பற்றி அறிந்து கொள்வது நலம்.

இந்த 140 மில்லியன் ஏழை  மக்கள் என்பது அமெரிக்க அரசாங்கத் தரவுத் தகவல்களிலிருந்து பெறப்பட்ட புள்ளிவிபரமாகும். அமெரிக்க சனத்தொகை கணக்கெடுப்பு இலாகா, நாட்டின் வறுமை கணக்கெடுப்பை இருவகையில் தருகிறது. 

அதிகாரப்பூர்வ ‘வறுமை அளவீட்டு முறைமை’ (Official Poverty Measure (OPM)) மத்திய அரசு கணக்கெடுப்பில் 12.3% சதவீதமானோர் ஏழைகள் என்கிறது. இந்தக் கணக்கெடுப்பு முறை பழமையானது, இந்த அளவீடுகள்  தற்போதைய சூழலில் சரியற்றது எனக் கருதப்படுகிறது. 

எனவே சமூகவியலாளர்கள் மற்றும் பொருளாதாரவியலாளர்களால், ‘துணை வறுமை அளவீட்டு முறைமை’ (Supplemental Poverty Measure (SPM)) எனும் முறையை உருவாக்கினர். இதன் படி 13.9% சதவீத மக்கள் எழ்மையானோர் என்று கணிக்கப்பட்டது. இந்தக் கணிப்புக்கள் நிஜமான வறுமை எண்ணிக்கையை ஒரு பெட்டியில் போட்டு மறைத்துவிட  முனைந்தது.

ஆயினும்  பொதுநல தாபனங்கள், அறிவகங்கள் ( Kairos Center for Religion, Rights, and Social Justice and the Poor People’s campaign, Institute of Policy Studies, the Center on Poverty and Social Policy) ஒன்றிணைந்து,  மேலே சொல்லப்பட்ட அளவீட்டு முறைமைகளையும், அவற்றின்   கணிப்புக்களையும் பலவருடங்களாக ஆராய்ந்து, உண்மையான  ஏழ்மைக் கணிப்புக்களை வெளிகொணர்ந்தனர். இதன் படி அமெரிக்காவின் வறுமைக் கணிப்பு SPM முறையில் பெறப்பட்டதை விட  200% சதவீதம் அதிகமென  கணிக்கப்பட்டது. 

அமெரிக்காவில்  வறுமையானவர்கள், குறைந்த வருமானம் உள்ளவர்கள் என்றெல்லாம் வகுத்து  நிவராணங்கள் வழங்க அரசியல் தலைவர்கள் திட்டம்  வகுத்தவாறு உள்ளனர். ஆயினும் நாம் வெறும் எண்ணிக்கை  இலக்கங்களுக்குப் பின்னே பதுங்கினால் மக்களின் உண்மை வாழ்வு நிலையைக் கண்டும் காணாமல் கடந்து போய்விடுவோம்.

 காரணம் இந்த வறுமைக்கோடு நிர்ணயம் வாழ்வை அச்சுறுத்தும்; பல பின் விளைவுகளுக்கு அப்பாவி அமெரிக்கப் பிரசைகளைத் தள்ளும். இதுவரை அரசியல் வறுமை நிர்ணயிப்புக்கள் நேரடியாக 300,000 பிள்ளைகளையும், 250,000 வயதுக்கு வந்தவரையும், அவர்கள் பெறவிருந்த  பொதுநலச் சுகாதாரச் சேவைகளை இழக்க செய்துள்ளது. இந்த ஒவ்வொரு அமெரிக்கப் பிரசைக்கும் சுதந்திர  வாழ்வில் நிறைவைப்  பெறுவதற்கான உரிமை உண்டு. இந்த 140 மில்லியன் மக்களும் மதிப்புடைய வாழ்வுதனைப் பேணிக்கொள்ள உரிமையுள்ளவர்கள். ஆயினும் இது மறுக்கப்பட்டவாறுள்ளது.

அமெரிக்க வறுமையை அளவிடுதல்

நாட்டின் மக்கட்தொகை அளவீட்டுத் துறை (The U.S. Census Bureau) மேலே சொல்லப்பட்ட  OPM மற்றும் SPM இரண்டையும் பாவிக்கிறது.

அதிகாரப்பூர்வ வறுமை அளவீட்டு முறைமை (OPM) 1963இல் உருவாக்கப்பட்டது. அது 1955ஆம் ஆண்டில் மக்கள் எவ்வளவு வருமானம் பெறுகிறார்கள், அதே சமயம் எவ்வளவு தமது உணவிற்குச் செலவழிக்கிறார்கள் என்பதை வைத்துக் கணிக்கப்பட்டது. எனவே இதன்படி  3 நபர்கொண்ட  குடும்பம், தங்கள் வருமானத்தில் 1/3 பகுதியை அன்றாட அவசிய உணவிற்கு செலவழிப்பவர்கள் என்று கணிக்கப்பட்டது.

பின்னர் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (Consumer Price Index), பணவீக்கம் (Inflation) ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டன. ஆயினும் மக்களின்  வீட்டு வாடகை, சுகாதாரச் செலவு, எரிபொருள் செலவு, மற்றும் இதர வீட்டுச் செலவுகள் போன்றவை இதுவரையில் இந்தக் கணிப்பில் சேர்க்கவில்லை.

இதனால் 1995இல் அமெரிக்க விஞ்ஞான சம்மேளனம் (The National Academy of Sciences) புதிய அளவீட்டு முறையை மத்திய அரசிற்கு பரிந்துரைத்தது. இதனை அமெரிக்க கணக்கெடுப்பு இலாக்காவின் ‘துணை வறுமை அளவீட்டு முறைமை’ (SPM). 2011இல் இருந்து நடைமுறைக்கு கொண்டுவந்தது. SPM கணிப்பு வருமான வரிக்குப் பின்னர் குடும்ப வருமானம், அத்துடன் அரசின் ஏழ்மைக்கு எதிரான திட்டங்கள் (Supplemental Nutrition Assistance Program (food stamps/SNAP)), வருமான வரி சேமிப்பு ‘Earned Income Tax Credit (EITC)  ஆகியவற்றைக் கணக்கில் கொணர்ந்தது . அத்துடன் அது முடிந்தளவு உணவு, உடை, வீட்டு வாடகை, வீட்டு கட்டுப்பணம், மற்றும் இதர வீட்டுப் பயன்பாட்டுக் கட்டணம் கைச்செலவுகள் போன்றவற்றையும் கணித்தது. அத்துடன் நாட்டின் எங்கு மக்கள் வாழுகின்றனர் (சொந்த வீடா / வாடகை வீடா) அதன் பொருட்டு ஏற்படும் வாடகை, வீட்டு கட்டுப்பண தொகைகளையும் எடுத்துக் கொண்டது.

OPM, SPM நடைமுறை கணிப்பு உதாரணங்கள்

  • 2017இல் 4 அங்கத்தவர் கொண்ட குடும்ப OPM வறுமைக் கோட்டு அளவீடு  $24,858
  • 2017இல் 4 அங்கத்தவர் கொண்ட குடும்ப SPM வறுமைக் கோட்டு அளவீடு $23,261 இலிருந்து $27,085 வரை. 

SPM முறையில் குடும்பத்தினர் வாடகை வீட்டில் இருப்பவர்களா இல்லை வீட்டு உரிமையாளராக வங்கிக்கு கட்டுப்பணம் செலுத்துகிறார்களா என்பதைப் பொறுத்தது

ஆயினும் இந்த மதிப்பீடுகளில் பல பெரும்பாலும் வருமானம் ஈட்டும் ஏழை மக்களால் கவனிக்கப்படாமல் போகின்றன. இருப்பினும், 2019 ஆம் ஆண்டில் அமெரிக்க விஞ்ஞான ஒன்றிய அறிக்கை, நாட்டின் ஏழ்மையான குழந்தைகளின் நிலைமையை மேம்படுத்த SPM அமைப்பு ஒப்பீட்டளவில் உதவியது என்று கூறுகிறது.

ஏழைகளுக்கும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடு.

பல வழிகளில், துணை வறுமை நடவடிக்கை (SPM) இன்னும் வறுமையின் ஒரு சிறிய மதிப்பீடாகவே காணப்படுகிறது. உதாரணமாக அமெரிக்காவில் இன்று நான்கு அங்கத்துவ குடும்பம் $30,000 வருமானம் ஈட்டினால் அவர்கள் ஏழை இல்லை என்கிறது நேரடிக் கணிப்பு.

மாறாக, வறுமைக் கோட்டின் 100-199% க்கும் குறைவானவர்கள் குறைந்த வருமானம் உடையவர்கள் என்று அரசாங்கம் தீர்மானிக்கிறது. ஆனால் உண்மையில்  இவர்கள் வாழ்வில் ஏற்படும் சில மாற்றங்கள்  (அவசரநிலை, மருத்துவச் செலவு, குற்றச் செயல்கள்  போன்றவை) நிச்சயமாக இந்த மக்களை அதே ஆண்டில் வறுமைக் கோட்டிற்குள் தள்ளும். இதனால்தான் அமெரிக்க அறிவியல் சங்கம், தனது 2019 அறிக்கையில், 200% அமெரிக்க குடும்பங்களுக்கு பொருளாதார வறுமை நடவடிக்கை மதிப்பீட்டிலிருந்து பொருளாதார பாதுகாப்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. எனவே வறுமை விகிதம் தற்போதைய மதிப்பீட்டை விட அதிகமாக உள்ளது – வருமான இடைவெளி 140 மில்லியன் அமெரிக்கர்களை இந்த நிலையில் வைத்திருக்கிறது.

இதன்படி சந்தர்ப்பம் சூழல்களால் எண்ணிக்கை, அமெரிக்க மக்கள் தொகைப்படி கீழுள்ளவாறு பிரித்துக் கொள்ளலாம்.

  • 52.1% or 38.5 மில்லியன் சிறுவர்கள் (18 வயதிலும் குறைவு)
  • 42.0% or 21 மில்லியன் வயோதிபர் (64 வயதிலும் மேல்)
  • 41.6% or 65.8 மில்லியன் ஆண்கள்
  • 45% or 74.2 மில்லியன் பெண்கள்
  • 59.7% or 23.7 மில்லியன் ஹிஸ்பானிக் அல்லாத கறுப்பின மக்கள்
  • 64.1% or 38 மில்லியன் இலத்தீன் மக்கள்
  • 40.8 or 8 மில்லியன் ஆசிய மக்கள்
  • 58.9% or 2.14 மில்லியன் பூர்வீகவாசிக மக்கள்
  • 33.5% or 65.6 மில்லியன் ஹிஸ்பானிக் அல்லாத வெள்ளையின மக்கள்

இதேபோல், 2018 ஆம் ஆண்டில் வெளியான அமெரிக்க பெடரல் ரிசர்வ் அறிக்கை, அமெரிக்க பொருளாதாரத்தின் ஒப்பீட்டில் 40% சதவித மக்கள் அவசரத் தேவைக்கு  400 டாலர் கூட செலவழிக்க முடியாத நிலையில் உள்ளது  என்று கூறுகிறது.

இவை அனைத்தும் அனைத்து மக்களின் வாழ்க்கையையும் மேம்படுத்த ஒரு திறமையான அனுமானத்தின் அவசியத்தை சுட்டிக்காட்டுகின்றன. சரியான தகவல்கள் மற்றும் கணிப்புகள் பொருத்தமான தீர்வுக்கு வழிவகுக்கும்.

    யோகி

உச்சாந்துணை

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. PN Badri says:

    Every nation lopsided economy. But USA rulers spending enormous amount on defence exercises in other countries.Most unfortunate and unwarranted.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad