கணவரை இழந்த பெண்ணே
வெள்ளைப் புடவையில் வீட்டுக்குள்
வதங்கிக் கிடக்கிறாயே!
வண்ணப் புடைவையில் வானத்தில் நீ
வட்டமிட வேண்டாமா?
அந்நியமாய் வந்தவன்
ஐயோ எனப் போய்விட்டான்
அதற்காக
ஏன் அழிக்கிறாய் உன் பொட்டை?
ஏன் துறக்கிறாய் உன் பூவை?
ஏன் இழக்கிறாய் உன் சுதந்திரத்தை?
நேற்று வந்தவனால்
உன் நெற்றிப் பொட்டையே
இழக்கிறாய் நீ
தப்பித்தவறியும் – உன்
தன்மானத்தை, ஆளுமையை – ஏன்
உன்னையே இழந்து விடாதே!
ந.சிந்து I – B.A(English) ‘B’. வள்ளுவர் கல்லூரி
மிக அருமை சிந்து.நல்ல கருத்து.
மிக அருமையான கருத்து… வாழ்த்துக்கள்… சிந்து…