வேற்றுமையில் ஒற்றுமை
“வேற்றுமையில்ஒற்றுமை”
“பிறப்பொக்கும்எல்லாஉயிர்க்கும்சிறப்பொவ்வா
செய்தொழில்வேற்றுமையான்” ( குறள் 972)
திருக்குறள்
முன்னுரை:
“தித்திக்கும் தெள்ளமுதாய்,
திகட்டாததேன்கனியாய்,
எத்திக்கும்நிறைந்திருக்கும்
செந்தமிழ் மாங்கனியின் சுவையினைத் தோண்டத் தோண்டச் சுரக்கும் நீரூற்றைப்போல வள்ளுவன் உரைத்த இரண்டடித் திருக்குறளின் சிறப்பினைப்பற்றிச் சிறிது காண்போம்.
பெருமை:
“யாமறிந்தமொழிகளிலேதமிழ்மொழி
போல்இனிதாவதுஎங்கும்காணோம்.”
-பாரதியார்
–
தமிழ்மொழியின் சிறப்பினைப் பற்றிக் கூறிட வார்த்தைகள் போதாது, வாழ்ந்து பார்த்தால் தான் உணர்ந்திட முடியும். அத்தகைய வாழ்வினை சிறப்பாக வாழ்ந்திடவும், வாழ்வின் பொருளுணர்ந்து செயல்படவும் வள்ளுவன் தனது நூலில் இயற்றிய குறள் பொருட்பாலில் பெருமை என்னும் அதிகாரத்தில் உள்ள
“பிறப்பொக்கும்எல்லாஉயிர்க்கும்சிறப்பொவ்வா
செய்தொழில்வேற்றுமையான்” (குறள் 972)
எனும்குறள்மானுடத்தைவிளக்குகிறது.
குறளின்சிறப்பு:
பிறப்பு என்பது எல்லா உயிர்களுக்கும் சமமான ஒன்று. எனவே அவரவர் செய்கின்ற தொழில் வேறுபட்டாலும்; ஏற்றத்தாழ்வுகளால் சிறப்பென்று கூறயியலாது.
உணர்த்தும்செய்தி:
மனித உடலில் பாயும் குருதியில் நிறமும், துன்பம் வருகின்றபோது விழிகளில் ஓடும் கண்ணீரின் சுவையும் யாவருக்கும் ஒன்றுதான்.
இதில் வேறுபாடு உள்ளதென்று எவரேனும் கூற இயலுமா?
இல்லை, ஏனெனில் இதனை மறுப்பதற்கான சான்று எவரிடத்தும் இல்லை.
இவ்வுண்மையை வள்ளுவன் தன் குறட்பா மூலமாக மனிதர்கள் தங்களது தொழிலால் வேற்றுமையடைந்து காணப்பட்டாலும், பிறப்பால் சமமானவர்கள் தான் தொழிற்காரணமாக சிறப்பியல் பினை அவர்கள் எய்திட முடியாது என்று கூறியுள்ளார்.
நானுணர்ந்தசெய்தி:
இத்தகைய பெருமை வாய்ந்த குறளில் மறைந்துள்ள கருத்து ஒன்று உள்ளது.
“பிறப்பு” என்னும் சொல்லினை ஒவ்வொரு எழுத்தாக பிரித்துப்பார்த்தால் அதிலுள்ள மெய்யெழுத்துக்களின் துணையின்றி சொல்; திரியாது.
அதனைப் போல “இறப்பு” என்னும் சொல்லில் முதலில் தொடங்கும் எழுத்தே உயிரெழுத்தை ஒன்றி அமைந்திருக்கும்.
இவ்விரு சொற்களின் ஒற்றுமை என்னவென்றால் உயிரன்றி மெய் யெழுத்தோ, மெய்யன்றி உயிரெழுத்தோ இயங்க இயலாது.
“உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”.
இதனை நம்வாழ்வோடு இணைத்துப்பார்ப்போம்.
மெய்யாகிய உடலின் சிறப்பை அஃதாவது பிறப்பின் நிலையில்லாச் சிறப்பினைப் போற்றுவதைவிட உயிராகிய இறப்பின் சிறப்பினை உணர்வதுமேல்.
ஏனெனில், நாம்வாழும் வாழ்க்கை எவ்வளவு சிறப்பினைப் பெற்றிருந்தாலும் அது நம் வாழ்நாட்களில் பெருமையை நிலை நாட்டாது. நாம் மறைந்த பின்பும் பெருமை ஓங்கிட வாழ்ந்திடவேண்டும்.
முடிவுரை:
நாம் பெற்றிருக்கும் பெருமையை வாழ்நாளில் கண்டு களிப்பது தற்பெருமையாகி விடும்.
நமது மறைவிற்கு பிறகும் நம் பெருமையை நிலை நாட்டுவதே நிலையான பெருமை.
“உயிர்களிடத்தில்அன்புகொள்வோம்
வேற்றுமைஇயல்பினைவேரறுப்போம்”
நாம்அனைவரும் “ஒன்றுபட்டால்உண்டுவாழ்வு”.
“வேற்றுமையில்ஒற்றுமைகாண்போம்
அனைவரும்ஒன்றாககைகோர்த்திடுவோம்”…
சு.நந்தினி I – B.A(English) ‘B’
உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்ற நன்னூல் விதியை அழகாக சொல்லியிருக்கிங்க. வாழ்த்துக்கள்.