\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மினசோட்டாவில் ஆன்மீகம் – பாகம் 2

பாகம் 1

Aanmeekam_2_620x496இந்தியாவில் தோன்றிய மதங்களில் பலரால் பின்பற்றப் பட்டுவரும் மதங்களில் இந்து மதத்தை அடுத்து புத்த மதத்தை சொல்லலாம். மத்திய, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் புத்த மதத்தை பெரும்பான்மையோர் பின்பற்றி வருகிறார்கள். சீனாவில் ஜென் (Zen) புத்த வழியைப் பின்பற்றுகின்றனர். இந்துக்களும் புத்த பகவானை விஷ்ணுவின் அவதாரமாக கொண்டு வணங்கி வருகின்றனர். மிகப்பெரிய புத்த சிலைகள் கொண்ட கோயில் எல்லாப் பெரிய நகரங்களிலும் உள்ளது. புத்த மதத்தின் ஈர்ப்பு உலகம் முழுவதும் காணப்படுகிறது. மினசோட்டா மாகாணமும் அதற்கு விதிவிலக்கல்ல.

சுமார் இரண்டாயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு முன் இளவரசர் சித்தார்த்த கௌதமா வாழ்ந்து கொண்டிருந்தார்.  அவர் வழக்கமாக நகர் வலம் வருகையில், வருமையில் மக்கள் படும் பல துயர்களையும் கண்ணுற்றார். அவர்கள் படும் அவதிகளைப் பார்த்துப் பொறுக்கமுடியாமல், அதனை நிவர்த்தி செய்ய ஏதேனும் ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும் என்று Aanmeekam_6_620x413மனதில் உறுதி பூண்டார். இதற்கு விடை தேடும் முயற்சியில் பல துறவிகளின் சிஷ்யனாக சேர்ந்து அவர்கள் வழியை பின்பற்றிப் பார்த்தார். அவற்றால் விடை கிட்டாது என நினைந்து, மேலும் முனைந்து, அதன்பின் தியானம் மட்டுமே சரியான வழி என்பதை உணர்ந்தார். அந்த வழியை பின்பற்றி பல வருடங்கள் தியானம் செய்து உண்மை உணர்ந்து கௌதம புத்தராக மாறினார்.

Aanmeekam_3_620x496மக்களின் பெரும்பாலான துயரங்களுக்கு அவர்களின் ஆசைகளும் பந்தங்களும் தான் காரணம். அலைகள் இருக்கும் குளத்தில் தரையைப் பார்க்க இயலாது, அதே போல் சஞ்சலம் இருக்கும் மனதில் அமைதி கிடைக்காது என்று உணர்ந்தார். மனதை அமைதிப்படுத்த தியானம் தான் சரியான வழி என்பதை முழுவதுமாக நம்பிய கௌதம புத்தர் அந்த வழியைப் போதிக்க சங்கம் அமைத்து இந்திய முழுவதும் பயணம் மேற்கொண்டார்.

அவர் போதனைகள் ஆசிய நாடுகளில் உள்ள மக்களை வெகுவாக கவர்ந்தது. கம்போதிய நாட்டில் இன்று 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் புத்த மதத்தை பின்பற்றுகின்றனர் என்பதே இதற்குச் சான்றாகும். இவர்கள் தேரவாடா என்ற புத்த மதத்தின் கிளையைப் பின்பற்றி வருகின்றனர். இவர்களில் பலர் அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் புத்தர் போதனைப்படி தியானம் செய்ய ஒரு கோவில் கட்டி அதில் கூடுகின்றனர். மினசோட்டாவில் இந்தக் கோவில் ஹாம்ப்டன் (Hampton) எனும் ஊரில் அமைந்திருக்கிறது. கோவில் வெளியிலிருந்து பார்த்தால் பிரமிப்பூட்டுகிறது. நுழை வாயிலில் இருபுறமும் பல தலை கொண்ட நாகத்தின் சிலையும், மற்றும் சிங்கத்தின் சிலையும் அமர்ந்து வருபவர்களை கம்பீரமாக வரவேற்கின்றன. கோவில் தூண்களில் உள்ள வேலைப்பாட்டை ரசிக்கக் கலைக் கண்கள் அவசியம்.

Aanmeekam_7_620x496சாதாரணமாக எங்கும் காணப்படும் கலை நயங்களை மட்டும் மனதில் நினைத்துக் கொண்டு இந்தக் கோயிலுக்குள் சென்றால், எதோ வேறு ஒரு உலகத்திற்குள் பிரவேசித்தது போன்ற பிரமை  உண்டாகிறது. அமைதியான தியான அறையின் ஒரு பகுதியில், பிரம்மாண்டமான புத்தர் விக்ரகம் அமைக்கப்பட்டுள்ளது. அவர் முகத்தில் வியக்கத்தக்க அமைதி. அது போன்ற அமைதி நமக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஏக்கம் நம் மனத்தை ஆக்கிரகிக்கிறது. நம் மனதில் பலவித எண்ணங்கள் மாறி மாறித் தோன்றுகிறது.

கௌதம புத்தர் மனிதர்கள் அமைதி பெற எட்டுக் கோட்பாடுகள் உள்ளன எனப் போதித்தார். அவை அனைத்தையும் கடைப் பிடித்தால் மனிதன் அமைதி எய்துவது மிகவும் எளியது ஆகும் என்பதே அவரின் போதனை. நல்ல நோக்கம், நல்ல சிந்தனை, நற்பேச்சு, நற்செயல், நல்ல வேலை, நன்முயற்சி, நன்நெறி, நல்ல கவனம் ஆகியவையே அந்த எட்டுக் கோட்பாடுகள் ஆகும்.. எட்டுக் கம்பிகள் கொண்ட சக்கரம் இந்த எட்டுக் கோட்பாடுகளை குறிக்கும் சின்னம் ஆகும். அந்த சக்கரச் சின்னத்தை இந்தக் கோவில் வேலைப்பாடுகளில் எங்கும் காணலாம்.

இந்தக் கோவிலில் ஆறு புத்த பிக்ஷுக்கள் இருக்கிறார்கள். இவர்கள் பக்தர்களை ஆசிர்வதித்து நல்ல கர்ம பயன் உண்டாகுமாறு வாழ்த்துகின்றனர். புத்த பிக்ஷுக்கள் கூட்டுப் பிரார்த்தனை நடத்தி நமக்கு நன்மை கிடைத்திட வழிகாட்டுகிறார்கள். தியானம் ஒன்று தான் ஞானம் அடைய சரியான வழி என்ற போதனைக்கேற்ப தினமும் தியானம் செய்கிறார்கள். இவர்களிடம் சிலநிமிடம் பேசினாலே புத்த மதத்தின் பெருமைகளை அறிய முடியும். அதனாலே தான் இங்கே பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகிறார்கள். ஏன், இங்கே உள்ள பல்வேறு ஏசு திருவாலயங்களில் இருந்தும் மக்கள் வந்து பார்க்கிறார்கள். இங்கு வசிக்கும் புத்த பீக்ஷுக்களுக்குப் பக்தர்கள் பூ, பழம், உணவு எனத் தானம் செய்கின்றனர். அதுமட்டும் அன்றி பக்தர்கள் கோவில் பராமரிப்பு அனைத்துக்கும் உதவி செய்கின்றனர்.

Aanmeekam_5_620x496இங்கே கம்போதிய உணவான சூப்பு, ப்ரஹ, ககோவ், ஸ்ன ந்யோம், அங் ஆகியவைகளை செய்து மற்ற பக்தர்களுடன் பகிர்ந்துண்ணுகிறார்கள். இங்கே கம்போதியப் புத்தாண்டு மிக விமர்சியாகக் கொண்டாடப்படுகிறது.  இந்த விழாவில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு கோலாகலமாகக் கொண்டாடுவர். பிரார்த்தனைக் கூடத்தில் பல புத்த சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவைகளின் வேலைப்பாடு நம்மை மெய்மறக்கச் செய்கிறது. விசாகப் பண்டிகை அன்று பக்தர்கள் பிக்ஷுகளுக்கு உணவு மற்றும் கைரினை காணிக்கையாக கொடுக்கின்றனர். Aanmeekam_4-2_620x496இவ்வளவு அருமையான வேலைப்பாட்டின் மத்தியில் உட்கார்ந்து புத்தரின் முகத்தில் தெரியும் அமைதியைப் பார்த்துக் கண் மூடித் தியானம் செய்தால் மனதில் சஞ்சலங்கள் குறைந்து அமைதி ஏற்படும். உலகம் அமைதி பெற, உன்னத எண்ணங்கள் உலவிட, உயர்வுதாழ்வுகளில் சஞ்சலம் அடையாமல் இருந்திட நாமும் புத்த பக்தர்களுடன் வழிபடுவோம்.

புத்தம் சரணம் கச்சாமி!   – புத்தரை சரணமாக அடைந்தனர்

தர்மம் சரணம் கச்சாமி    – புத்தரின் போதனைகளான தர்ம நெறிகளைச் சரணமாக அடைந்தனர்.

சங்கம் சரணம் கச்சாமி    – புத்தரின் கொள்கைகளைக் கடைப்பிடிப்போரின் சங்கத்தைச் சரணமாக அடைந்தனர்.

ஓம் ஷாந்தி,ஷாந்தி, ஷாந்திஹி!

-பிரபு

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. krishnamurthy says:

    Very useful information…and nice…thanks for sharing it Prabu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad