\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சர்வம் தண்ணீர் ம(மா)யம்

sarvam-thanneer-mayamv2_620x400இந்தத் தலைப்பைப் பார்த்துட்டு நான் ஏதோ பஞ்சபூத தலங்களில் நீருக்கு உரிய தலமான திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஜம்பு லிங்கம் என்கின்ற அப்புலிங்க சுவாமியைப் பற்றி எழுதப்போறேன்னு நெனச்சா அது என் தவறல்ல. நான் சொல்லப்போவது ஒன்றும் புதிதல்ல. இது எங்க பாட்டன் G.T நாயுடு காலத்திலேயே கண்டுப்பிடிக்கப் பட்டதுதான். ஆனா இப்ப சமீப காலமாப் பார்த்தீங்கன்னா, ஜப்பான்ல அடுப்பில்லாமல் போண்டா சுட்டதாகவும் ,பாக்கிஸ்தான்ல பருப்பில்லாமல் சாம்பார் வச்சதாகவும் பீத்திக்கிறாங்க. அதாங்க தண்ணீர்ல தேர் (CAR) ஓட்டுறாங்க. இந்த சின்னக்கட்டுரையில தண்ணியில எப்படி கார் ஓட்டுராங்கன்னு பார்ப்போம்.

 

தண்ணிய அறிவியல் குறியீட்டில் ஹைட்றஜன் 2 ஆக்சிஜன்   (H2O) என்று குறிப்பிடுகின்றோம். அதாவது இரண்டு பங்கு ஹைட்ரஜனும் ஒரு பங்கு ஆக்சிஜனும் ஒன்றாக இருப்பது தான் தண்ணீர். இந்தத் தண்ணீர்ல இருக்கின்ற ஆக்சிஜனையும் ஹைட்ரஜனையும் பிரித்தால் அது திரவ நிலையில் இருந்து வாயு நிலைக்கு (ஹைட்ரஜன் – ஹைட்ரஜன் -ஆக்சிஜன், HHO) மாறிவிடும். இந்த வாயுவில் உள்ள ஹைட்ரஜனின் வெடிப்புத்திறன் மிக அதிகம். இந்த ஹைட்ரஜனைத்தான் தேர் ஓட்டுவதற்கும், இன்னும் பல மோட்டார்களை இயக்குவதற்கும் பயன்படுத்துறாங்க. இந்த ஹைட்ரஜனை பழுப்பு நிறவாயு (brown gas) என்று அழைக்கிறார்கள்.

 

இந்தப் பழுப்பு நிற வாயு பெட்ரோலுக்கோ டீசலுக்கோ மாற்றுக் கிடையாது, மாறாக இந்த வாயு அதனுடன் சேர்ந்து இயங்கும் தன்மைக் கொண்டது (additive). இந்தக் காலத்தில் இருக்கின்ற பெட்ரோல் டீசல் மோட்டார்கள் அல்லது இஞ்சின்கள் அதற்கு உள்ளீடாகக் கொடுக்கப்படுகின்ற முழுவாயுவையும் பயன்படுத்துகின்ற திறன் பெற்றவையல்ல. அவை 18% முதல் 20% வாயுவை மட்டுமே பயன்படுத்துகின்ற திறன் பெற்றவை . அந்த இஞ்சின்களில் பெட்ரோல் அல்லது டீசலை முழுமையாக வெடிக்க வைத்துத் திறனை 80% மேம்படுத்தப் பலவழிகளில் வாய்ப்பிருகின்றது.

 

ஹைட்ரஜனானது பெட்ரோல் டீசலில் கிடைக்கின்ற எரிவாயுவைவிட மிகுந்த வெடிப்புத்திறன் கொண்டது. மிகச் சுத்தமானது, குறைந்த கழிவுகளையே வெளியேற்றி இயங்க வல்லது. ஹைட்ரஜனின் எரியும் வேகம்  ஒரு நிமிடத்தில் 0.098 முதல் 0.197அடிகள் வரை, பெட்ரோல் மற்றும் டீசலின் எரியும் வேகம்  ஒரு நிமிடத்திற்கு 0.00656 முதல் 0.0295 அடிகள் வரை. அதாவது ஹைட்ரஜனின் எரியும் வேகம் பெட்ரோல் மற்றும் டீசலின் எரியும் வேகத்தைவிட சுமார் மூன்று மடங்கு அதிகம். ஹைட்ரஜன் சுமார் மூன்று மடங்கு வேகத்தில் கார் இஞ்சினில் உள்ள எரியும் கொள்கலத்திற்குள் நிரம்பிப் பின்னர் வெடித்து எரிகின்றது. இது எரிகின்ற தீயில் பெட்ரோல் ஊத்துவதற்குச் சமம்.சாதாரணமாகப் பெட்ரோல் டீசல் வாயுக்கள் நிரம்பிய எரியும்  கொள்கலன்கள் ஒரு பக்கத்திலிருந்து பற்ற வைப்பதற்குச் சமமாக மட்டுமே எரியும் திறன் படைத்தவை. எரியாத மீதங்கள் கழிவுகளாக மட்டுமே வெளியேறி கார்புரேட்டரையும் சுற்றுப் புறத்தையும் சீரளிக்கும்.

 

நீரில் இருந்து ஹச்-ஹச்-ஒ (HHO) வாயு தயாரிப்பதற்கு மின்னாற் பகுப்பு (electrolysis) என்னும் முறை பயன்படுகின்றது.தண்ணீருக்கிடையே மின்சாரத்தைப் பாய்ச்சி ஹைட்ரஜனையும் ஆக்சிஜனையும் பிரிப்பது மின்னாற்பகுப்பு முறை எனப்படும். இவ்வாரு கிடைக்கும் வாயுவை பெட்ரோல் டீசல் வாயுவாகச் செல்லும் குழாயோடு இணைத்து விட்டால் இஞ்சினின் தகுதிக்கு ஏற்பவும் கொடுக்கப்படுகின்ற ஹைட்ரஜன் அளவிற்கு ஏற்பவும் இஞ்சினின் செயல் திறன் அதிகரிக்கிறது. சில வேளைகளில் இது 100% கூட அதிகரித்துக் காணப்படும்.

இன்னும் சிலகாலங்களில் ஒரு காலன் கேஸோலினையும் (Galon Gasoline) 40 காலன் தண்ணீரையும் சேர்த்து எரிபொருளாக நிறைத்துக் கார் ஓட்டும் நிலை வர வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது. அப்போது தண்ணீர் தேசங்களின் ஆட்சி ஓங்கும்.

 

-சத்யா-

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. vinod says:

    great article. it will be better if the sources of the scientific facts are acknowledged and quoted. thanks.

  2. Rini jose says:

    yes, practically possible, even without the petrol…v can run and produce energy from the H2O

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad