அந்தமும் ஆதியும்
இல்லாத பலதை இலக்காய்க் கொண்டு
கொண்டதை யெல்லாம் எளிதில் மறந்து
மறக்க வேண்டியதை மலையெனச் சுமந்து
சுமையாகிப் போனதை எண்ணி வருந்தி
வருத்தம் போக்க உறவைத் தேடி
தேடிய உறவோடு உள்ளம் திளைத்து
திளைப்பின் பயனாய் உறவும் வளர்த்து
வளர்ந்த பாதை திரும்பக் காண்கின்
காணாமற் போயிருந்தன காலடித் தடங்கள்
தடங்கள் நாடிப் பின்னோக்கிச் செல்வதா?
சென்றதைத் தொலைத்து முன்னே தொடர்வதா?
தொடரும் வினாக்கள் மிரளச் செய்தன
செய்வினைப் பயனும் நிழலாய்த் துரத்த
துரத்தும் துயருக்குத் துறவுதான் தீர்வா?
தீராத பற்றுகளுடன் மடிவது வாழ்வா?
வாழ்க்கைப் பயணம் விளக்கம் இல்லாதது.
- ரவிக்குமார்
மிக அருமை இரவி 🙂
வாழ்க்கை என்பதே ஒரு பயணம்தானே,
விளக்கம்தேட அது கோனார் உரையா???