சொற்சதுக்கம் 6
கீழே கட்டத்துக்குள் இருக்கும் ஒன்பது எழுத்துக்களைக் கொண்டு சொற்களை உருவாக்குங்கள். சொற்கள் இரண்டெழுத்தாகவோ அல்லது அதற்கு மேற்பட்டதாகவோ இருக்கலாம். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். இருபது சொற்களுக்கு மேல் உருவாக்கினால் நீங்களே உங்களுக்கு தமிழ்ப் புலி என்ற பட்டமளித்துக் கொள்ளலாம்
பெரிய வார்த்தைகளாக, புதிய வார்த்தைகளாக அமைக்க வேண்டுமென்ற ஆசை… இன்னும் வார்த்தைகளை அமைக்கலாமென நினைக்கிறேன். விடைகளில் மேலும் புதிய வார்த்தைகளும் இருக்கலாம்.
தங்குமிடம்
தடகளம்
தம்மிடம்
குங்குமம்
மிகுமிடம்
மிகுங்குளம் (தண்ணீர் மிகும் குளம் = தண்ணீர் மிகுங்குளம்)
மங்களம்
களங்கம்
மகுடம்
மடங்கு
மகதம் (நாடு – இது போன்ற பெயற்சொற்களுக்கு அனுமதியுண்டா?)
மதகம் (யானையின் மத்தகத்தை மதகம் என்றும் குறிப்புடுவதுண்டு)
மங்கும் (மங்கிப் போகும் என்ற பொருளில்)
மதகும் (மதகு – மடை – மதகும் தண்ணீரும் என்பது போல)
தங்கம்
மடம்
மதகு
மதம்
மகம் (ராசி)
மங்கு
மிளகு
மிதம்
குடம்
குளம்
குதம்
கும்மி
தளம்
தடம்
தங்கு
தகும்
தகுதி
கங்கு (எரிந்த நிலக்கரி என்று பொருள்பட)
களம்
கடம்