\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஏண்டியம்மா எங்க போற?

Filed in இலக்கியம், கவிதை by on August 28, 2016 2 Comments

Tamil-village-girl-withflowers_620x775

வயக்காட்டில  உழைச்சுக் களைச்ச

மாமன் மனசை விரசாப் போயி

முந்தானையில் அள்ளி முடிய

முந்திட்டுப் போறியோ….

 

ஏக்கங்களை நெஞ்சில் வச்சு

எட்டி நின்னு பார்த்த பொண்ணு

மாமன் கையில் தாலி வாங்க

துள்ளிக் குதிச்சு போறியோ

 

நாலு கால் பாய்ச்சலிலே நாலுதெரு

தாண்டி ஏற இறங்க மூச்சுவிட்டு

முன்னங்கால் எட்டு வைச்சு ஆசை

மச்சானை முத்தமிடப் போறியோ….

 

கருவண்டு கண்ணாலே காதல்கதை பேசி

மணிமுத்துச் சொல்லாலே கவியாயிரம் பாடி

மனம் கவர்ந்த மச்சானின் கைகோர்த்தபடி

மாடவீதியிலே பவனிவர பறந்து போறியோ

 

ஐந்து வயதில், அறியா மழலையில்

உனக்கு அவனும், அவனுக்கு நீயும்னு

குலசுவாமி முன்னே சொல்லி வச்ச

பெரியவங்க காலப் போக்கில மாறிப்போயிட

பணமுன்னு ஒரு காரணத்தால

முடியாது என முறைச்சு நிக்கயிலே ….

மாமன் தான் முக்கியமும்னு மாலையிடப் போறியா?

நீ நல்லா வாழனுண்டி ராசாத்தி !

  • உமையாள்

 

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. K.natarajan says:

    அருமையான பதிவுகள்
    நன்றியுடன் பகிர்ந்துள்ளேன் என சிலபதிவுகளை முகநூலில் பகிர்ந்துள்ளேன் ஒப்புதல் தானே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad