கற்கை நன்றே !!
பொட்டல் காடெல்லாம் புழுதியாப் பறக்குது
நட்டநடு வீட்டடுப்பில் நாய்பூனை தூங்குது
கட்டடம் கழனியெல்லாம் கனவுபோல மறையுது
பட்டமரம் போலவெங்கும் பஞ்சமாத் தெரியுது…..
காட்டெருமை வெள்ளத்தோட காணமப் போனது
மாட்டோட நம்பிக்கையும் மண்ணோட புதைஞ்சுது
வாட்டசாட்ட தேகமது வலுவிழந்து மெலிஞ்சுது
நாட்டமில்லா ஒருமனமும் நாள்முழுக்கக் கலங்குது
சுட்டசோறு பார்ப்பதற்கு சோகமனம் ஏங்குது
பட்டமிளகாயும் பாழுங்கஞ்சியுமே பசிக்குக் கிடைச்சுது
எட்டநின்னு பாத்தவனின் ஏளனமும் புரியுது
வட்டமான வாழ்க்கையிது மாறுமுன்னு தோணுது
சட்டம்போட்டுத் தடுத்தாலும் சாதியது துரத்துது
திட்டம்போடத் திறமையில்ல, தெருவோரம் ஒதுங்குது
மட்டமான நிலையிதனை மகத்தானதா ஆக்குவது
பட்டம்பல படிச்சுவந்து பசிக்கொடுமை ஒழிப்பது …
ஓட்டமா ஓடியாடும் விளையாட்டு வாழ்க்கையிது
பாட்டன்பூட்டன் செய்யாததை சாதிக்கணும்னு மருகுது
ஓட்டெடுக்க வந்தபய உதவமாட்டான் விளங்குது
ஏட்டெடுத்துப் படிச்சாமட்டுமே எழுச்சியின்னு தெளியுது !!
- மதுசூதனன் வெ.
ஏட்டெடுத்துப் படிச்சாமட்டுமே எழுச்சியின்னு தெளியுது !!- Its ture… Nice one Madhu…