\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

ஐ.ஏ.எம் நன்றி நவில்தல் விழா 2022 (IAM Thanksgiving 2022)

ஐ.ஏ.எம் நன்றி நவில்தல் விழா 2022 (IAM Thanksgiving 2022)

வட அமெரிக்காவின், மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள ‘இந்தியன் அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா’ (Indian Association of Minnesota) அமைப்பின் சார்பில் 2022 ஆம் ஆண்டு ஆண்டில் உதவி அனைத்து தன்னார்வலர்கள், வர்த்தக ரீதியாக உதவியவர்கள் மற்றும்  தன்னார்வ  நிறுவனங்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக நன்றி நவில்தல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழா  மேப்பில் குரோவில்  அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் சென்ற மாதம் நடைபெற்றது. விழாவின் சிறப்பம்சமாக அனைவருக்கும்  இரவு உணவு வழங்கப்பட்டது. பின்பு புதிதாக பதவியேற்றுள்ள […]

Continue Reading »

உலகை விட்டுப் பறந்த இசைக்குயில்

உலகை விட்டுப் பறந்த இசைக்குயில்

இந்தியத் திரையிசை உலகில், கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இசை விருந்து படைத்த இசைக்குயிலொன்று வாழ்வின் கிளைகளிலிருந்து பறந்து விண்ணுலகம் நோக்கிச் சென்றுவிட்டது.  நாடு, பிராந்தியம், இனம், குலம், மொழி என எல்லைகளைக் கடந்த இசைக் கலைஞர்களில் தனியிடம் பிடித்த ‘கலைவாணி’ எனும் வாணி ஜெயராம் மறைந்து விட்டார். 19 மொழிகளில், ஆயிரக்கணக்கான திரைப்படங்களில், 10,000க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருந்தாலும், தானொரு மாபெரும் பாடகியென்ற தற்பெருமை ஒருபோதுமில்லாமல், அமைதி, எளிமை என பல அருங்குணங்கள் நிரம்பியவர். எப்பேர்ப்பட்ட மேடையானாலும், ஸ்டுடியோவானாலும், […]

Continue Reading »

அதானி குழுமத்தின் மீதான “ஹிண்டன்பர்க்” ஆய்வறிக்கை

அதானி குழுமத்தின் மீதான “ஹிண்டன்பர்க்” ஆய்வறிக்கை

சமீப நாட்களில் செய்திகளிலும், சமூக ஊடகங்களிலும் அதிகமாக உச்சரிக்கப்படும், எழுதப்படும் பெயர் – ஹிண்டர்பர்க். பொதுவாக பங்குச் சந்தை வர்த்தகத்தின் பக்கம் தலை வைத்து படுக்காதவர்களின் கவனத்தைக் கூட ‘ஹிண்டர்பர்க்’  ஈர்த்துள்ளது. காரணம் – ஹிண்டர்பர்க் ஆய்வின் தாக்கம். நியுயார்க் நகரில் இயங்கும், ஐந்து நிரந்தர ஊழியர் மட்டுமே கொண்ட மிகச்சிறிய நிறுவனம், உலகின் பணக்காரர்கள் தர வரிசைப் பட்டியலில் இரண்டாம் அல்லது மூன்றாம் இடத்துக்கு முட்டி மோதும் ஒருவரின் பிம்பத்தை, இந்தியாவின் மாபெரும் கூட்டு வர்த்தக […]

Continue Reading »

சாட்ஜிபிடி ChatGPT தொழிலாளர் வேலையை சீர்குலைக்குமா?

சாட்ஜிபிடி ChatGPT தொழிலாளர் வேலையை சீர்குலைக்குமா?

வராலாற்று ரீதியில் தொழிநுட்பத்தை எடுத்துப் பார்த்தால், எந்த தொழில்நுட்பமும் ஓரளவுக்குப் படித்த தொழிலாளர்களிடையே பெருமளவிலான வேலை இழப்பை ஏற்படுத்தவில்லை என்பது புரியும். ஆயினும் ‘உருவாக்க செயற்கை நுண்ணறிவு’ (Generative AI) இதற்கு விதிவிலக்காக இருக்குமா என்பதே எமது கேள்வி. சாட்ஜிபிடி(ChatGPT) என்றால் தமிழில் நாம் ‘பயிற்றுவிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மொழி செயலாக்கக் கருவி’ என்று கூறிக்கொள்ளலாம். இந்த செயற்கை நுண்ணறிவு கருவி இரண்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் மிகவும் செல்வாக்கு மிக்க செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகங்களில் […]

Continue Reading »

பனி ஏரியில் மீன் பிடிக்கலாமா?

பனி ஏரியில் மீன் பிடிக்கலாமா?

மினசோட்டாவின் நிலப்பரப்பெங்கும் ஏரிகள் நிறைந்து இருக்கின்றன. இந்த நிலப்பரப்பிற்கேற்றாற்போல் இங்குள்ள மக்களின் முக்கியப் பொழுதுபோக்காக மீன் பிடித்தல் உள்ளது. மீன் பிடித்தல் என்றால் கோடைக்காலத்தில் நீர்நிலைகள் நிரம்பியிருக்கும் போது மட்டுமில்லாமல், குளிர்காலத்தில் நீர்நிலைகள் பனியாக உறைந்திருக்கும் போதும் அதைத் தொடர்வது தான் இங்குள்ள சிறப்பு. வெப்பமான நிலப்பரப்பிலிருந்து வந்திருக்கும் இந்தியர்களுக்கு, குளிர்காலத்தில் கடைகளுக்குச் சென்று வருவதே பெரிய சாகசமாக இருக்கும். அதுவே மினசோட்டாவின் கடுங்குளிருக்குப் பழகிய உள்ளூர்காரர்கள், பொழுது போகவில்லை என்று குளிரில் உறைந்திருக்கும் ஏரியில் மீன் […]

Continue Reading »

2022 கைப்பந்து விளையாட்டு

2022 கைப்பந்து விளையாட்டு

மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள ப்ளூமிங்டன் நகரில் அமைந்துள்ள கென்னடி ஆக்டிவிட்டீஸ் சென்டர் என்ற பள்ளி மைதானத்தில் டிசம்பர் 10ஆம் தேதி இந்த கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் ஆடவர், மகளிர் அணி இரு குழுவாக பிரித்து ஆடவர்க்கும், மகளிர்க்கும்  தனித்தனி  பிரிவுகளில், போட்டிச் சுற்றுகள் நடைபெற்றன. தகுதிச் சுற்றுகளில் வெற்றி பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் பங்கேற்றன. மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட பக்கத்திற்கு சென்று பார்க்கவும் https://www.facebook.com/mdvtvolleyball அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில உங்களுக்காக!!!   […]

Continue Reading »

மினசோட்டா மலையாளி சங்கத்தின் கிறிஸ்துமஸ் விழா 2022

மினசோட்டா மலையாளி சங்கத்தின் கிறிஸ்துமஸ் விழா 2022

மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள மினசோட்டா மலையாளி  அமைப்பு (Minnesota Malayalee Association) ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவை அவர்கள் அமைப்பின் சார்பில்  மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் இதே போல் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அன்று மினசோட்டாவில் அமைந்துள்ள ஹாப்கின்ஸ் சமுதாயக்  கூடத்தில் (Hopkins Community Center) கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. மினசோட்டாவில் உள்ள  கேரள மக்களும், இன்னும் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர் சிறப்பு விருந்தினராக ஜேம்ஸ் சீட்டேத் (James Chitteth) (Pastor St. […]

Continue Reading »

புத்தாண்டு சங்கற்பங்கள்

Filed in தலையங்கம் by on January 21, 2023 0 Comments
புத்தாண்டு சங்கற்பங்கள்

புது ஆண்டு பிறந்துவிட்டது. தனிமனித அபிலாஷைகள், கனவுகள் நிறைவேறக் காத்திராமல் காலம் நகர்ந்து செல்கிறது. அடுத்து என்ன வரப்போகிறது என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஒவ்வொரு புத்தாண்டு துவக்கத்திலும் அறியாத எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்குகிறோம்.  புதிய ஆண்டு எல்லா வளங்களையும், நலத்தையும் நல்கும் என்ற நம்பிக்கையோடு அடியெடுத்து வைக்கிறோம்.  முந்தைய இரண்டாண்டுகளை விட 2022 மேலானதாகயிருந்தது என கருதினாலும், உலக அமைதி, பொருளாதாரம், சூழலியல் கோணங்களில், கடந்தாண்டு சிக்கலானதாகவேயிருந்தது. புத்தாண்டில், பெருந்தொற்றின் பதட்டம் சற்றே தனிந்துள்ள […]

Continue Reading »

சிப்போட்லே

சிப்போட்லே

சில மெக்சிகன் படங்களைக் காணும்போது, அவர்களின் கலாச்சாரத்திற்கும் நமது கலாச்சாரத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறதே என்று தோன்றுவதுண்டு. உதாரணத்திற்கு, அனிமேஷன் படமான கோகோ (Coco) படத்தில் வரும் மூதாதையர் வழிபாட்டைக் குறிப்பிடலாம். அதேபோல், உணவிலும் நிறைய ஒற்றுமைகளைக் காணலாம். மல்லி, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, எள்ளு, மிளகாய் வற்றல், பூண்டு, வெங்காயம், தக்காளி, பீன்ஸ், அரிசி என நமது சமையலறையில் பயன்படுத்தும் பல உணவு பொருட்களை, மெக்சிகன் உணவுத் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள். அதனால், அமெரிக்காவில் வெளியே […]

Continue Reading »

இயந்திரங்களின் எழுச்சி: 2023 செயற்கை நுண்ணறிவு (AI) ஆண்டாக இருக்கலாம்

இயந்திரங்களின் எழுச்சி: 2023 செயற்கை நுண்ணறிவு (AI) ஆண்டாக இருக்கலாம்

அமெரிக்கா உட்பட உலகளாவிய நாடுகள் சென்ற மூன்றாண்டுகள் பலவீன பொருளாதாரச் சூழலில் இருந்து 2023ஆம் ஆண்டிற்கு நகர்கின்றன. பலவீனமான பொருளாதார நிலைமைகள் எப்பொழுதும் செலவுகளைக் குறைப்பதற்கும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதால், ஏற்கனவே வளர்ந்து வரும் பொருளாதார மந்தநிலை செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence AI) வர்த்தகங்கள், உற்பத்திச்சாலைகள் ஏற்றுக்கொள்வதில் பெரும் உந்துதலை அளிக்கலாம்.  2023 ஆம் ஆண்டைத் தொடங்குவதற்கு நாங்கள் தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில், நிறுவனங்கள் இன்னும் அதிகச் செலவுகளால் நசுக்கப்படுகையில், உலகப் பொருளாதாரம் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad