admin
admin's Latest Posts
மினசோட்டா வரலாற்றுச் சங்கக் கட்டடத்தின் ஒரு பகுதிக்கு இந்தியரின் பெயர்
வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாகாணத்தில் செயிண்ட்பால் நகரில் புகழ்பெற்ற ‘மினசோட்டா வரலாற்றுச் சங்கத்தின்’ கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடத்தில் மினசோட்டா மாநில வரலாறு குறித்த அனைத்து தகவலும் சேகரிக்கப்பட்டு கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை https://www.mnhs.org/ இணையதளத்தில் காணலாம். டாக்டர் எஸ். கே. டேஷ் (Dr.S.K Dash, Sita Kantha Dash – Scientist & Founder of Probiotics), அவர்கள் மினசோட்டா மட்டுமல்லாது, அமெரிக்காவில் உள்ள அனேகத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும், இந்தியாவில் செயல்படும் […]
உதிரும் இலைகள் கூறுவது என்ன?
மினசோட்டா மாநிலத்தில் வாழும் நீங்கள் வருடா வருடம் இலைகள் பசுமையான நிறத்திலிருந்து மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, ஊதா, மண்ணிறம் என மாறும் இலையுதிர்காலத்தை அவதானித்திருப்பீர்கள். ஏன் தான் இவ்விட இலைகள் நிறம் மாறி உதிர்கின்றன என்றும் மனதில் கேள்வி எழுந்திருக்கலாம். பிள்ளைகள் உங்களைக் கேட்டும் இருக்கலாம். மினசோட்டாவில் நீங்கள் வீட்டுக்குள் சிறு பூஞ்செடிகள் வளர்ப்பவராகவோ, கோடை காலத்தில் வெளியே காய்கறிகள், மற்றும் அலங்காரச் செடிகள் வளர்க்கும் சிறிய பூந்தோட்டக்காரர் ஆகவோ இருக்கலாம். தோட்டம் மற்றும் செடி வளர்ப்பில் […]
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 10 சாங்ஸ் (நவம்பர் 2022)
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வெளிவந்த பாடல்களின் தொகுப்பை, கடந்த மே மாத பகுதியில் பார்த்தோம். அதன் பின், வந்த படங்களில் உள்ள ஹிட் பாடல்களின் தொகுப்பை இப்பகுதியில் காணப் போகிறோம். படங்களின் எண்ணிக்கை, கடந்த சில மாதங்களில், உயர்ந்துள்ளதைக் காண முடிகிறது. அதனால், இப்பகுதியில் ஐந்து பாடல்களுக்குப் பதிலாகப் பத்துப் பாடல்களைப் பார்க்க போகிறோம். டான் – ப்ரைவேட் பார்ட்டி இந்த ஆண்டின் தொடக்கம் முதல் அனிருத்தின் பாடல்கள் மட்டுமல்ல, அவர் இசையமைத்த படங்களும் ஹிட் […]
கவரிமான் ராமாயி
உழைத்து உரமேறிய உடம்பு. நாவல்பழ நிறம். கண்களில் வைராக்கியம். அலங்காரமோ, நகைகளோ கிடையாது. பின்கொசுவம் வைத்துக் கட்டிய நூல் சேலை. அள்ளிச் செருகிய கொண்டை. கால்களில் ரப்பர் செருப்பு. ஆரம்பத்தில் அணிந்த தண்டட்டியால் வளர்ந்த காதுகள். இதுதான் ராமாயி. மானாமதுரையை அடுத்த கொம்புக்காரநேந்தல், அவள் பிறந்த ஊர். ஒரு தடவை, 1970 வாக்கில் அக்கரையில் இருக்கும் அம்மாவின் தோழி மதுரம் மாமி வீட்டுக் கொலுவிற்குப் போன போது அறிமுகம். நேர்த்தியாக அடுக்கப்பட்ட பொம்மைகள். சுத்தமாகத் துடைக்கப் பட்ட […]
டிவிட்டரின் (Twitter) வணிகம் ஏன் உடைகிறது?
புதிய உரிமையாளர் எலான் மஸ்க் (Elon Musk) விளம்பரத்தை வெறுக்கிறேன் என்று கூறுகிறார். இது ஒரு தலையாய பிரச்சனை. ஏனென்றால் விளம்பரம் சார்ந்த வருமானமே, கீச்சகம் எனப்படும் ‘டிவிட்டரின்’ சமூக ஊடகத் தளத்தின் வருவாயில் 90 சதவீதத்தை வழங்குகிறது. எலான் மஸ்க் டிவிட்டர் கீச்சகத்தினை வாங்குவதற்கான தனது ஒப்பந்தத்தை முடிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அவர் விளம்பரதாரர்களுக்கு ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டார். பெரு நிறுவனங்கள் பலவும், கீச்சகத் தளத்தில் உள்ளடக்க மிதவாதத்தின் (content moderation) […]
மருந்தாக்க நிறுவனங்களின் விளம்பர ஆதிக்கம்
ஐக்கிய அமெரிக்காவில், சராசரியாக ஒரு மணி நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் ஒருவர், குறைந்தபட்சம் ஒன்பது மருந்துகள் தொடர்பான விளம்பரங்களைக் காண நேர்கிறது. இவை பொதுவாக கடைகளில் கிடைக்கும் (Over the counter – OTC) மருந்துகளுக்கானவை அல்ல. இவை நோயாளிகளைப் பரிசோதிக்கும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும், மருந்துச் சீட்டு மூலமாக மட்டுமே பெறக்கூடிய மருந்துகளுக்கான விளம்பரங்கள். மருத்துவச் சோதனைகள், உபாதைகள், அவற்றின் மூல காரணங்கள் குறித்த போதுமான கல்வியும், அனுபவமும் இல்லாத சாமான்ய நுகர்வோருக்கு, நேரடியாக இவ்விளம்பரங்களைக் […]
IAMன் GOLF 2022
மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள IAM (Indian Association of Minnesota) என்ற தொண்டு நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் கால்ஃப் (GOLF) விளையாட்டுப் போட்டியைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டும் அதேபோல், அக்டோபர் ஒன்றாம் தேதி ஹேமல் (Hamel) நகரில் உள்ள ‘பேக்கர் நேஷனல் கால்ஃப் கோர்ஸ்’ இல் (Baker National Golf Course) போட்டி நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கென இரு பிரிவுகளில் இந்த விளையாட்டு இடம்பெற்றது. பலர் இந்தப் போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடினர். […]
IAMன் வன்முறை இல்லாத வாரம் 2022
வட அமெரிக்காவில் உள்ள மின்சோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள IAM (Indian Association of Minnesota) என்ற தொண்டு நிறுவனம் மற்றும் உள்ளூரில் உள்ள அமைந்துள்ள மற்ற தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து அக்டோபர் இரண்டாம் தேதியை அகிம்சை வாரத்தின் கடைசி நாளாகக் கொண்டாடியது. இந்த விழா மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள செயின்ட் பால் நகரில் அமைந்துள்ள மினசோட்டா வரலாற்று மையத்தில் (Minnesota History Center) நடைபெற்றது. அக்டோபர் இரண்டாம் தேதி என்றால் நினைவுக்கு வருவது மகாத்மா காந்தி அவர்களது […]
அமெரிக்க கொலு 2022
இந்தியாவில் இருந்து பல ஆயிரம் மைல்கள் தள்ளி இருந்தாலும், நமது கலாச்சாரம் நம்முடன் இன்றும் நெருக்கமாகத் தான் இருக்கிறது. கொரோனா என்ற காலகட்டத்தைத் தாண்டி இப்பொழுது வழக்கமான வாழ்க்கைக்கு வந்து கொண்டிருக்கையில், நவராத்திரி கொலு இந்த ஆண்டு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கொலு வைக்கும் வழக்கம் உள்ள குடும்பத்தினர், அந்த வழக்கத்தைக் கைவிடாமல் மினசோட்டாவிலும் மற்ற வட அமெரிக்க மாநிலங்களிலும் உள்ள குடும்பத்தினர், நண்பர்களுடன் இணைந்து கொலு வைத்து நவராத்திரியைக் கொண்டாடினர். தங்கள் வீட்டு கொலு பொம்மைகளின் […]