admin
admin's Latest Posts
கங்கா
“ஸாரிம்மா தீபிகா” என்றேன் உண்மையான மன வருத்தத்துடன். “இன்னும் ரெண்டே நாளில் அவளுக்கு பரிட்சை. கோபிச்சுண்டு அவள் “மூடை” அவுட்டாகிக்கியாச்சு. ஸாரி என்ன வேண்டிக்கிடக்கு? ஸாரியாம் ஸாரி…” என்று மனைவி உஷா படபடவென்று வெடித்தாள். பிறகு சுமுகமான சூழல் வரவேண்டுமே என்று எண்ணினாளோ என்னவோ, “எனக்கு வேணுமானால் வீட்டில் கட்டிக்க ரெண்டு ஸாரி வாங்கிக் கொடுங்கள்! ஸல்வார் நிறைய இருக்கு” என்றாள். என் தவற்றை உணர்ந்தேன். மேலும் ஏதாவது பதிலுக்குப் பேசினால் அது வீண் விவாதத்தில்தான் முடியும் […]
புலால் வேற்றுமை தேசியம்
தற்காலிக இறைச்சி வியாபாரத் தடைகள் இந்திய முஸ்லிம்களுக்கு அடையாள நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இது 2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் குருகிராமில் (Gurugram) அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவில் மூடப்பட்ட இறைச்சிக் கடைகள் விவகாரம் புலால் வேற்றுமை மனப்போக்கை எவ்வாறு இந்தியப் பொதுமக்கள் எதிர்கொள்வது என்ற நீண்ட கால கேள்வியை எழுப்புகிறது. இது போன்று சமீப காலங்களில் வலதுசாரி இந்துத் தீவிர குழுக்களால் திணிக்கப்பட்ட தொடர்ச்சியான தற்காலிக இறைச்சி வியாபாரத் தடைகள் பல்வேறு இடங்களிலும் பரவி வருகின்றன என்பது அவதானிக்கக் […]
#பாய்காட்
அண்மைக்காலங்களில், இந்திய வட்டாரச் சமூக வலைத்தளங்களில் பரவலாகக் காணப்படும் சொல் ‘புறக்கணிப்பு’. இந்த புறக்கணிப்பு அழைப்புகள் அரசியல் கொள்கை, கட்சி, தலைவர் அல்லது வன்முறை இயக்கங்கள் குறித்தவை அல்ல; சமூகத்தைப் பாதிக்கும் வியாபாரப் பொருட்கள், போதை வஸ்துகள் சம்பந்தப்பட்டவை அல்ல; சுற்றுச் சூழலைப் பாதிக்கும் மாசுப் பரவல், பசுங்குடில் வாயுக்கள் பற்றியவை அல்ல; திரைப்படங்கள் குறித்தவை – அதிலும் புராணத்தை இழிவுப்படுத்தி, வரலாற்றைத் திரித்து சமூகத்தில் கிளர்ச்சியைத் தூண்டும் திரைப்படங்கள் குறித்து அல்ல; இந்தியத் திரைப்படங்களின் வழக்கமான […]
இலகுவான ஆப்பிள் பை (Apple Pie)
இந்த எளிதான ஆப்பிள் பை விஸ்கொன்சின் மாநில பல்கலைக்கழக தோழியின் தாய் அளித்த சமையற்குறிப்பு. ஆப்பிள் அறுவடை ஆரம்பிக்கும் செப்டெம்பர் மாதத்தில், இந்த இலகு முறை ஆப்பிள் பையை செய்ய விரும்புவதுண்டு. நான் பெரும்பாலும் நறுமணத்திற்கு ஜாதிக்காய் (nutmeg) சிறிதளவு சேர்க்கிறேன்; நீங்கள் விரும்பினால் சேர்த்துக்கொள்ளலாம். தேவையானவை 9 அங்குல இரட்டை மேலோடு ஆப்பிள் பைக்கு, 1 தொகுப்பு (14.1 அவுன்ஸ்) பேஸ்ட்ரி தேவை. உள்ளூர் மளிகைக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். […]
உட்பெரி டேஸ் 2022 (Woodbury Days)
வட அமெரிக்காவில் கோடை காலம் வந்து விட்டால் போதும் மக்கள் தங்களுக்கும் சிறப்பான கொண்டாட்டங்கள், விழாக்கள் என பலவிதமான விழாக்களை சிறப்பாக கொண்டாடுவார்கள். வடஅமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள உட்பரி நகரில் ஆண்டு தோறும் உட்பெரி டேஸ் என்ற பெயரில் பெரிய திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாவில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளுக்கு மத்தியில், பொழுதுபோக்கு விளையாட்டுக்கள், […]
மினியாபொலிஸில் ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான் கச்சேரியை நேரில் பார்க்க வேண்டும் என்பது ஒரு பெரும் ஆசையாக ஒரு காலத்தில் இருந்தது. 2015 ஆம் ஆண்டு, சிகாகோ சென்று அந்த ஆசையைப் பூர்த்திச் செய்தாகிவிட்டது. 2020 ஆம் ஆண்டுத் திட்டமிடப்பட்டிருந்த ஏ.ஆர். ரஹ்மானின் அமெரிக்கா இசை பயணத்தில் மினியாபொலிஸ் இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சியை அளித்தது. கச்சேரிக்கு என்று வேறு ஊருக்குப் பயணம் செல்ல வேண்டாம் என்பது இதிலுள்ள உபரி மகிழ்ச்சி செய்தி. கொரோனா காரணமாக அப்பயணம் ரத்துச் செய்யப்பட்டது. இப்போது கொரோனா நிலைமை […]
விழிப்புறுவோம்
அமெரிக்கப் பிரதேசங்களில் இலையுதிர் காலத்துக்கான ஆயத்தங்கள் தொடங்கிவிட்டன. செப்டம்பர் முதல் வாரத்தில் பள்ளி, கல்லூரிகள் திறந்து சாலைகளில் பள்ளிச் சிறுவர்கள், பள்ளிப் பேருந்துகளைப் பார்க்க முடிகிறது; கடைகளில் ஆரஞ்சு நிற சட்டைகள், அலங்காரப் பொருட்கள், பரங்கிக்காய், ஹாலோவீன் சமாச்சாரங்கள் அடுக்கப்பட்டு கட்டியம் கூறி வரவேற்கின்றன; நீண்ட பயணத்துக்குத் தயாராகும் பெருந்தாரா வாத்துகள் (Geese) கூட்டமாகப் பயிற்சியெடுத்து வருகின்றன; வீட்டின் பின்கட்டில் அணில்கள் சுறுசுறுப்புடன் குளிர்காலத்துக்குத் தேவையான உணவுகளைச் சேகரிப்பதில் மும்முரமாகவுள்ளன; பகல்நேரம் சுருங்கி, சில்லென்ற காற்றுடன் இருளின் ஆட்சி மேலோங்கி […]
கடினமான செய்திகளைப் பரிமாறுவது எப்படி?
எமது வாழ்வில் அலுவல் காரணங்களிலும், பிற சந்தர்ப்பங்களிலும் நாம் கடினமான செய்திகளைப் பரிமாற வேண்டி வரலாம். இதை ஒரு வகையில் எடுத்துப் பார்த்தால, இது நல்ல முடிவுகளை எடுப்பதற்கும், நெறிமுறை நிறுவனங்களை வளர்ப்பதற்கும், நேர்மையான உறவுகளை உருவாக்குவதற்கும் முக்கியமானதொன்றாகும். அமெரிக்க உளவியல் சங்கத்தின் ஒரு ஆய்வின் முடிவும் இக்கருத்தை எதிரொலிக்கிறது. அசௌகரிய செய்திகளை எடுத்துச் செல்பவர்கள் விரும்பத்தகாதவர்களாகவும், குறைவான திறமைசாலிகளாகவும் அல்லது எதிர்மறையான நிகழ்வு நடக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் என்று கருதப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. இது […]