admin
admin's Latest Posts
வெறுப்பு சூழ் உலகு
‘சங்கி’, ‘திராவிடியா’, ‘கோட்டா ஜாதி’, ‘கிராஸ்பெல்ட்’, ‘பாவாடை’, ‘அரிசி மூட்டை’, ‘மூத்திர குடிக்கி’, ‘கூலிபான்’, ‘நூலாண்டி’, ‘முக்கா’, ‘அந்நிய கைக்கூலி’, ‘கிரிப்டோ கைக்கூலி’, ‘ஆண்ட பரம்பரை’, ‘வந்தேறி’, ‘சொம்பு தூக்கி’, ‘கொத்தடிமை’, ‘சொறியன்’ – நீங்கள் எந்தவொரு சமூக ஊடகத்தையும் பாவிப்பவராக இருப்பீர்களென்றால், ஊடக அகராதியில் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் மேற்கண்ட சொற்கள் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருக்கும். மேலும், ‘கதறுடா’, ‘கக்கூஸ் கழுவு’, ‘பர்னால் தடவிக்கோ’, ‘உண்டகட்டி வாங்கித் தின்னு’, ‘தொங்கிடு’ போன்ற சில அறிவுரைகள் வழங்கப்படுவதையும் காதுகள், […]
வாசனை நுகர்வுகள்
வாசனைக்கும் காட்சிக் கலைக்கும் இடையிலான இடைவினை ஒரு கவர்ச்சிகரமான விஷயமாகும், குறிப்பாக மற்ற புலன்களை விட பார்வைக்கு முன்னுரிமை அளிக்கும் வரலாற்றுப் போக்கைக் கொடுக்கிறது. “வாசனைப் பார்வைகள்: கலையில் மணம், நான் இந்தக் கருப்பொருளை ஆராய்ந்து வருகிறேன், குறிப்பாக கம்பர் மற்றும் அழகியல் இயக்கங்களின் போது, கலையில் வாசனை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது மற்றும் விளக்கப்பட்டது என்பதை எடுத்துக்காட்டுகிறது. வரலாற்று சூழல் 19 ஆம் நூற்றாண்டில், வாசனையைப் பற்றிய புரிதல் வளர்ந்தது. ஆயினும் தமிழ் அமைப்புக்கள் முழுமையாக புரிந்து […]
2024 இல் ஜனநாயகம்
இந்த ஆண்டு 80 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள், அதாவது உலக மக்கட்தொகையில் ஏறத்தாழ 50 சதவிகிதத்தினர் தங்கள் நாட்டின் தலைவரைத் தேர்ந்தெடுக்க வாக்களித்துள்ளனர். ஏதோவொரு வகையில், தாங்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்கள், தங்கள் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பளித்து, நலம் புரிவார்கள் என்ற நம்புகிறார்கள். அதே நேரத்தில் இந்த தலைவர்கள் அனைவரும் நியாயமான முறையில், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்களா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. அல்ஜீரியா, வெனிசுவேலா, துனிசியா உட்பட சில நாடுகளில் தேர்தலுக்கு முன்பே […]
நவராத்திரி நிகழ்வுகள்
“சிதக்னி குண்ட ஸம்பூதா தேவ கார்ய சமுத்தியதா” என்ற வரிகளுடன் தொடங்கும் லலிதா சஹஸ்ரநாமத்தை முக்கிய சாரமாக கொண்டாடும் பண்டிகை சரத் நவராத்திரி. மனதின் உள் அகந்தை சொரூபத்தில் இருக்கும் மகிஷாசுரன் என்ற அரக்கனை அழிக்க அம்பிகை செய்யும் ஒரு யுத்தமே இந்த நவராத்திரி பண்டிகை. பத்து நாட்களின் முடிவில் சித்தத்தில் இருந்து எழும்பிய அம்பிகை மகிஷாசுரனை அழித்து பின் ராஜராஜேஸ்வரி சொரூபத்தில் மகிழ்வுடன் கொலுவேறும் நாளே விஜய தசமி என்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த […]
நவராத்திரி திருவிழா 2024
முப்பெருந்தேவியரான லட்சுமி, சக்தி, சரஸ்வதி ஆகிய மூவரையும் போற்றும் விதமாகக் கொண்டாடப்படுவது நவராத்திரி. நவம் என்ற சொல்லுக்கு வட மொழியில் ஒன்பது என்று பொருள். ஒன்பது நாட்கள் நடைபெறும் இவ்விழாவை இந்தியாவின் பல பகுதிகளில் பலவிதமாகக் கொண்டாடுகிறார்கள். குஜராத் மாநிலத்தில் இவ்விழா நடனத் திருவிழாவாக அனுசரிக்கப்படுகிறது. ஓவ்வொரு இரவும் மக்கள் ஒன்று கூடி நடனமாடுவார்கள். இந்த வகையான நடனத்தை கார்பா (garba) அல்லது தாண்டிய (dandiya) என்று அழைப்பார்கள். இந்த ஆண்டு மினசோட்டா மாநிலத்தில் உள்ள குஜராத் […]
யுவல் நோவா ஹராரியின் ஆபத்தான பார்வை
கணினி நுண்ணியல் AI இன் ஆபத்துகள் பற்றிய அவரது எச்சரிக்கை ஆபத்தானது, ஆனால் அவற்றைத் தவிர்க்க இது நமக்கு உதவுகிறதா? “சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பொருள், ஆற்றல், நேரம் மற்றும் இடம் தோன்றியது.” இஸ்ரேலிய வரலாற்றாசிரியர் யுவல் நோவா ஹராரியின் Sapiens: A Brief History of Humankind (2011) தொடங்குகிறது, மேலும் 21 ஆம் நூற்றாண்டின் மிகவும் வியக்க வைக்கும் கல்விப் பணிகளில் ஒன்றாக இது தொடங்கியது. Sapiens பல்வேறு மொழிகளில் 25 […]
வேட்டையன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படத்தை ”ஜெய் பீம்” படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் அவர்கள் இயக்கப்போகிறார் என்ற செய்தி வந்தபோதே ஒரு ஆர்வம் கிளம்பியது. ரஜினி அவர்களின் கமர்ஷியல் படங்கள் தான் நம்மை விசிலடித்து, கைத்தட்டி, ஆட்டம் போட்டுப் படத்தைப் பார்க்க வைக்கும் என்றாலும், புதிய இயக்குனர்களின் வித்தியாசமான கதைக்களங்களில் அவர் நடித்தால் நல்லாயிருக்குமே என அவ்வப்போது எண்ணத் தோன்றும். கபாலி, காலா ஆகிய படங்களில் இயக்குனர் ரஞ்சித் அவர்கள் அப்படி வேறுபட்ட கதையில் ரஜினியைக் காட்டினார். […]
‘டிரிக்கிள் டவுன்’ பொருளாதாரம்
உலக நாடுகள் பலவும், தங்களது நில அமைப்பு, வளங்கள், மக்களமைப்பு போன்ற பல காரணிகளை மனதில் கொண்டு தங்களுக்கு தேவையான பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றுகின்றனர். அடிப்படையில் முதலாளித்துவம், சோஷியலிசம், கலப்பு பொருளாதாரம் என மூன்று முக்கிய கோட்பாடுகள் இருந்தாலும், அவற்றை செயல்படுத்துவதில் பல நாடுகள் வெவ்வேறு வழிமுறைகளைக் கையாள்கின்றன. உதாரணமாக முதலாளித்துவ பொருளாதாரக் கோட்பாடு இலாபத்தை இலக்காக வைத்து செயல்படக்கூடிய தனியார் நிறுவனங்களை சுதந்திரத்துடன், எந்தப் பொருளையும், எந்த விலையிலும் விற்க அனுமதிப்பது என்பதாகும். ஆனால் இந்த […]