admin
admin's Latest Posts
திரைப்பட பார்வை – மகான்
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான விக்ரம் நடித்த ‘மகான்’ திரைப்படம் அமேசான் ப்ரைமில் பிப்ரவரி 10ஆம் தேதியன்று வெளியானது. கடந்த சில வருடங்களாகவே விக்ரமின் படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெறாமலிருந்த நிலையில், மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. விக்ரம் நடிக்க வந்து, அவருடைய முதல் படம் வெளியாகி 32 வருடங்கள் ஆகின்றன. ஸ்ரீதர், பி.சி.ஸ்ரீராம், விக்ரமன், பார்த்திபன் என்று பிரபல இயக்குனர்களின் படங்களில் நடித்தாலும், முதல் பத்து வருடங்கள் […]
ஃப்ளாஷ் பேக்
கல்லூரிக்குச் செல்வதற்குத் தயாரானான் கணேஷ். வெள்ளை நிறத் துணியில், உடலைச் சுற்றி கோடு போட்டது போல் ஊதா நிறத்தில் குதிரைப் படங்கள் பொறிக்கப்பட்டிருந்த சட்டை. குதிரைகள் பலவும் ஒன்றன்பின் ஒன்றாய் ஓடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. அவையும் பல வரிசைகளாக மேலிருந்து கீழாக வருமாறு தைக்கப்பட்டிருந்தது. ஒரு வரிசை மார்பைச் சுற்றிவர, மத்தியில் அமைந்திருந்தது சட்டைக்கான பட்டன். மேலிருந்து இரண்டு பட்டன்களைக் கழட்டி விட்டு, அப்பொழுதுதான் அரும்பத் தொடங்கியிருந்த பதின்பருவ ரோமங்களைக் காட்டிக் கொண்டிருந்தான் அவன். அதற்கு மேட்ச்சிங்க்காக […]
புஷ்பா – தி ரைஸ்
சேல சேல சேல கட்டுனா… குறு குறு குறுன்னு பாப்பாங்க !!! குட்ட குட்ட கௌன போட்டா… குறுக்கா மறுக்கா பாப்பாங்க !!! சேல ப்ளௌஸோ, சின்ன கௌனோ… ட்ரெஸ்ல ஒண்ணும் இல்லங்க !!! ஆச வந்தா, சுத்திச் சுத்தி… அலையா அலையும் ஆம்பள புத்தி !!! ம்ம் சொல்றியா மாமா… ம்ஹூம் சொல்றியா மாமா … ம்ம் சொல்றியா மாமா… ம்ஹூம் சொல்றியா மாமா ?? – தமிழ் . […]
வரிகள் குறைக்கும் வழிகள்
அமெரிக்காவில் வருமான வரி வழக்கம் தொடங்கி நூற்றி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. முதன்முதலில் 1913 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அச்சமயம் அதிகபட்ச வரியாக 7% மட்டுமே இருந்தது. பின்னர், இரண்டாம் உலகப் போரின் சமயம், அதிகப்பட்ச வரி 94% வரை சென்றது. 1960களில் இருந்து 1980களில் 70% ஆகக் குறைந்த உச்சபட்ச வரி, அடுத்த சில ஆண்டுகளில் 50% என்ற நிலைக்கு வந்து, கடந்த முப்பது வருடங்களாக 30-40% என்ற எல்லைக்குள் ஏறி […]
டெலிப்ராம்ப்டர்
டெலிப்ராம்ப்டர் என்று தற்போது நாம் குறிப்பிடும் சாதனம், அந்தச் சாதனத்தை உருவாக்கிய நிறுவனத்தின் (TelePrompTer Corporation) பெயர் என்று உங்களுக்குத் தெரியுமா? எப்படிப் பிரதி எடுக்கும் சாதனத்தின் (Photo copier) பெயராக, அதை உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் (Xerox) உருவெடுத்ததோ, எப்படி இணையத்தில் தேடும் செயலை (Search), ஒரு தேடுபொறியின் (Google) பெயர் கொண்டு குறிப்பிடுகிறோமோ, அது போல, இங்கும் அந்த நிறுவனத்தின் பெயர் பிரபலமானது. தவிர, அச்சாதனத்திற்கு அப்பெயர் பொருத்தமாகவும் அமைந்தது. நாடகத்தில், திரைப்படத்தில் நடிப்பவர்கள் […]
பட்டம் பறக்கும் விழா
மினசோட்டா மாநிலத்தில் உள்ள ஹாரியட் ஏரி பூங்கா (Harriet Lake) சுமார் 470 ஏக்கரில் அமைந்துள்ள இந்த ஏரியின் நடுவில் இந்தப் பட்டம் பறக்க விடும் திருவிழா கடந்த மாதம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. இந்த திருவிழாவில் மக்கள் பலவிதமான பட்டங்களைக் கொண்டு வந்து, அதை மேல் நோக்கிப் பறக்க விட்டனர். இப்பொழுது மினசோட்டாவில் குளிர்காலம் என்பதால் அனைத்து மக்களும் வெளியே செல்வதற்கு ஏதாவது பொழுதுபோக்கு வேண்டும் என்று இந்தத் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். இந்தத் திருவிழாவில் […]
பனிப்பூக்கள் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுகதைப் போட்டி
ஆங்கிலப் புத்தாண்டு, தைப் பொங்கல், உழவர் திருநாள், திருவள்ளுவராண்டு துவக்கம் என ஜனவரி மாதம் கொண்டாட்டங்கள் நிரம்பி வழியும் மகிழ்ச்சியான மாதமாகும். பெருந்தொற்றின் வீரியம் புதிதாய் உருவெடுத்து அச்சுறுத்துவதால், கொண்டாட்டங்கள் சுருங்கி ஒரு கட்டுக்குள் அடங்கிப்போனதென்னவோ உண்மை. ஆனாலும் இன்றைய இணையத் தொழில்நுட்பம் பெருந்தொற்றின் கட்டுப்பாடுகள், முழுமையாகக் கொண்டாட்டங்களை முடக்கிவிடாமல் பார்த்துக் கொண்டதெனலாம். பனிப்பூக்கள் சஞ்சிகையின் பயணத்தில் இந்தாண்டு ஒரு மைல்கல்லாக அமைகிறது. வரும் தாய்மொழி தினமான பிப்ரவரி 21 இல், பத்தாம் ஆண்டில் நுழையவுள்ளது பனிப்பூக்கள். […]