admin
admin's Latest Posts
புஷ்பா – தி ரைஸ்
சேல சேல சேல கட்டுனா… குறு குறு குறுன்னு பாப்பாங்க !!! குட்ட குட்ட கௌன போட்டா… குறுக்கா மறுக்கா பாப்பாங்க !!! சேல ப்ளௌஸோ, சின்ன கௌனோ… ட்ரெஸ்ல ஒண்ணும் இல்லங்க !!! ஆச வந்தா, சுத்திச் சுத்தி… அலையா அலையும் ஆம்பள புத்தி !!! ம்ம் சொல்றியா மாமா… ம்ஹூம் சொல்றியா மாமா … ம்ம் சொல்றியா மாமா… ம்ஹூம் சொல்றியா மாமா ?? – தமிழ் . […]
வரிகள் குறைக்கும் வழிகள்
அமெரிக்காவில் வருமான வரி வழக்கம் தொடங்கி நூற்றி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. முதன்முதலில் 1913 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அச்சமயம் அதிகபட்ச வரியாக 7% மட்டுமே இருந்தது. பின்னர், இரண்டாம் உலகப் போரின் சமயம், அதிகப்பட்ச வரி 94% வரை சென்றது. 1960களில் இருந்து 1980களில் 70% ஆகக் குறைந்த உச்சபட்ச வரி, அடுத்த சில ஆண்டுகளில் 50% என்ற நிலைக்கு வந்து, கடந்த முப்பது வருடங்களாக 30-40% என்ற எல்லைக்குள் ஏறி […]
டெலிப்ராம்ப்டர்
டெலிப்ராம்ப்டர் என்று தற்போது நாம் குறிப்பிடும் சாதனம், அந்தச் சாதனத்தை உருவாக்கிய நிறுவனத்தின் (TelePrompTer Corporation) பெயர் என்று உங்களுக்குத் தெரியுமா? எப்படிப் பிரதி எடுக்கும் சாதனத்தின் (Photo copier) பெயராக, அதை உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் (Xerox) உருவெடுத்ததோ, எப்படி இணையத்தில் தேடும் செயலை (Search), ஒரு தேடுபொறியின் (Google) பெயர் கொண்டு குறிப்பிடுகிறோமோ, அது போல, இங்கும் அந்த நிறுவனத்தின் பெயர் பிரபலமானது. தவிர, அச்சாதனத்திற்கு அப்பெயர் பொருத்தமாகவும் அமைந்தது. நாடகத்தில், திரைப்படத்தில் நடிப்பவர்கள் […]
பட்டம் பறக்கும் விழா
மினசோட்டா மாநிலத்தில் உள்ள ஹாரியட் ஏரி பூங்கா (Harriet Lake) சுமார் 470 ஏக்கரில் அமைந்துள்ள இந்த ஏரியின் நடுவில் இந்தப் பட்டம் பறக்க விடும் திருவிழா கடந்த மாதம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. இந்த திருவிழாவில் மக்கள் பலவிதமான பட்டங்களைக் கொண்டு வந்து, அதை மேல் நோக்கிப் பறக்க விட்டனர். இப்பொழுது மினசோட்டாவில் குளிர்காலம் என்பதால் அனைத்து மக்களும் வெளியே செல்வதற்கு ஏதாவது பொழுதுபோக்கு வேண்டும் என்று இந்தத் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். இந்தத் திருவிழாவில் […]
பனிப்பூக்கள் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுகதைப் போட்டி
ஆங்கிலப் புத்தாண்டு, தைப் பொங்கல், உழவர் திருநாள், திருவள்ளுவராண்டு துவக்கம் என ஜனவரி மாதம் கொண்டாட்டங்கள் நிரம்பி வழியும் மகிழ்ச்சியான மாதமாகும். பெருந்தொற்றின் வீரியம் புதிதாய் உருவெடுத்து அச்சுறுத்துவதால், கொண்டாட்டங்கள் சுருங்கி ஒரு கட்டுக்குள் அடங்கிப்போனதென்னவோ உண்மை. ஆனாலும் இன்றைய இணையத் தொழில்நுட்பம் பெருந்தொற்றின் கட்டுப்பாடுகள், முழுமையாகக் கொண்டாட்டங்களை முடக்கிவிடாமல் பார்த்துக் கொண்டதெனலாம். பனிப்பூக்கள் சஞ்சிகையின் பயணத்தில் இந்தாண்டு ஒரு மைல்கல்லாக அமைகிறது. வரும் தாய்மொழி தினமான பிப்ரவரி 21 இல், பத்தாம் ஆண்டில் நுழையவுள்ளது பனிப்பூக்கள். […]
காணாமல் போன பாடலாசிரியர்கள்
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு பாடலாசிரியர்கள் கோலொச்சியிருக்கிறார்கள். தமிழ் திரையிசை பாடல் வடிவத்தை உருவாக்கிய சங்கரதாஸ் சுவாமிகள் தொடங்கி, பாடல் படைப்பாக்கத்தில் உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், மேத்தா, வைரமுத்து, கங்கை அமரன், பிறைசூடன், பழனிபாரதி, அறிவுமதி, நா.முத்துக்குமார், பா.விஜய், யுகபாரதி, தாமரை, சினேகன், விவேகா, மதன் கார்க்கி எனப் பலரும் பங்களித்துள்ளனர். ஒவ்வொருவரும் மொழியைத் தங்களது பாணியில் கையாண்டுள்ளனர். தங்களது மொழியில் அன்றைய காலக்கட்டத்து நாயகர்களைப் பாட வைத்துள்ளனர். […]
காதல் எப்படி பேசுகிறது
காதல் எப்படி பேசுகிறது கன்னக்குழி அழகில் மெல்லிய இதழ் விரிப்பின் சிவப்பில் மிரளும் கண் விழியின் தவிப்பில் பெருமூச்சுக்கு இடையில் வரும் மூச்சில் புன்னகையின் இதழவிழ்ப்பில் அன்பு தளும்பும் மென்மொழியில் சீரற்ற இதயத் துடிப்பில் தனிமையில், மௌனத்தில் மற்றும் கண்ணீரில் காதல் பேசுகிறது. மின்னும் கண் பயத்தில் இணை சேர்ந்த மகிழ்ச்சியில் பெருமிதத்தில், பெரும் இதயத்துள் காதல் பிரகாசத்துடன் நிரம்பி வழிகிறது. அன்பான முகத்தில் சிலிர்த்து நடுங்கும் உடலின் அசைவில் வெட்கத் தொடுதலில் மகிழ்ச்சி மற்றும் வலிகளின் […]
மார்கழி மாதங்களில் திருப்பாவை
இறை வழிபாட்டில் ஒவ்வொரு மதத்திலும் பல வகைகள் இருப்பினும், பக்தியில் உருகி பாக்கள் பாடி, இறை வழிபாடு செய்வது அனைத்து மதங்களுக்கும் பொதுவான ஒன்று. சங்க இலக்கியத்தில் பெருமளவு பக்தி இலக்கிய நூல்கள் உள்ளன. வேறு எம்மொழியிலும். தமிழ் மொழியில் தோன்றிய அளவு பக்தி இலக்கிய நூல்கள் தோன்றவில்லை. பக்தி இலக்கிய நூல்களில் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்கள் மிக முக்கியமானவை. பன்னிரு ஆழ்வார்களில் “ஒரு பெண்ணின் தமிழ்” என்று அழைக்கப்பட்ட திருப்பாவை எழுதிய ஆண்டாள் பல […]