admin
admin's Latest Posts
பனியில் கார்டினல் குருவி (Northern Cardinal)
அழகான பிரகாசமான சிவப்பு சிறகுகளும், சொண்டுகளையும் அதே சமயம் நிற வேறுபாடு தரும் கன்னங்கவரும் கறுப்பு நிற கண் பகுதிகளைக் கொண்ட பறவைதான் கார்டினல் குருவி. இது மினசோட்டா மற்றும் வட கிழக்கு அமெரிக்கக் கண்டத்தில் இலகுவாக அடையாளம் காணக்கூடிய பறவையாகும். குறிப்பாக வெள்ளைப் பனிப் பின்னணியில், இலையற்ற செடிகள், மரங்களில் இருந்து பாடுவது கண் குளிர் காட்சியாகும். இந்தக் குருவி இலத்தீன் பறவை வகைப் பிரித்தலில் Cardinalis cardinalis என்று அழைக்கப்படும். கார்டினல் பொதுவாக பத்தைக்காட்டு […]
உலகின் அவசர, அத்தியாவசிய தேவைகள்
புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். சமீப ஆண்டுகளைப் போல 2022 ஆம் ஆண்டும் கேள்விக்குறியாகவே தெரிகிறது. கோவிட்டின் திரிபுகள், ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையிலான போராட்டம், நாட்டுக்குள்ளும் நாடுகளுக்கிடையுமான பயங்கரவாதம், மனிதாபிமான நெருக்கடிகள், உலகப் பருவ நிலை மாற்றம், இயற்கை சீற்றங்கள் என எண்ணற்ற சவால்கள் எதிரே நிற்கின்றன. துரதிர்ஷ்டவசமாக அவை தானாக மறைந்துபோகும் சவால்கள் அல்ல. கொரோனா தொற்றால் பல இலட்சம் உயிர்களை இழந்துவிட்டோம்; மேலும் இழந்து வருகிறோம். . அதன் நீட்சியாக வறுமை, பஞ்சம், […]
ரசனை வசப்படுமா?
முன்பு எப்போதேனும் படம் பார்ப்போம். நமது அபிமான நடிகர் நடித்த படம் என்றால், எப்படி இருந்தாலும் பார்த்து விடுவோம். இல்லையென்றால், படம் நன்றாக இருக்கிறதென்று யாராவது சொன்னால் பார்த்துவிடுவோம். இல்லை, பொழுது போக்க வேண்டும் என்றிருந்து, படம் நல்லாயில்லை என்று சொன்னாலும், திரையரங்கு சென்று படம் பார்ப்போர் உண்டு. இருக்கும் திரையரங்குகளில் நான்கு படங்கள் ஓடும். அதில் ஏதேனும் ஒன்றைப் பார்த்துவிட்டு திரும்புவோம். செலவையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும். அதே போல், தொலைகாட்சியில் படம் பார்ப்பது என்றால், […]
சமையல்.. சமையல்.. சமையல்..
சில வருடங்களுக்கு முன்பு, ஒரு சர்வே எடுத்திருந்தார்கள். உலகெங்கிலும் உள்ள குடும்பங்கள் சமைப்பதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் குறித்து அந்த ஆய்வு நடத்தப்பட்டிருந்தது. உலகிலேயே சமையற்கட்டில் அதிக நேரம் செலவிடும் நாடு – இந்தியா, என்று ஆய்வு முடிவில் வந்திருந்தது. இதற்கு எதற்கு ஆய்வு, நமக்குத் தான் தெரியுமே!! என்கிறீர்களா? உண்மை தான். மற்ற நாடுகளுடான ஒப்பீடு, நமக்குப் பயனளிக்கும் தகவல்கள் தரும் வகையில் அந்த ஆய்வு முடிவில் தெரியவந்தன. நமக்குத் தெரிந்த விஷயமான, உலகிலேயே அதிகம் சமையலில் […]
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (James Webb Space Telescope)
அமெரிக்க தேசிய வானியல் மற்றும் விண்வெளி நிர்வாக அமைப்பின் (National Aeronautics and Space Administration NASA) மிகப் பாரிய விண்வெளி நோக்கும் இயந்திரம் ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியாகும். இது பூமியிலிருந்து 1 மில்லியன் மைல்களுக்கு (930,000 miles/1.5 million kilometers) அப்பால், விண்வெளியில் இயங்கும் இந்த தொலைநோக்கி அமெரிக்காவின் நாசா (NASA), ஐரோப்பிய விண்வெளி முகமை (European Space Agency ESA) மற்றும் கனேடிய விண்வெளி முகமை (Canadian Space Agency CSA) ஆகிய நிறுவனங்களின் கூட்டு […]
சர்தார் உத்தம்
சென்ற ஆண்டு 2021 அக்டோபரில் அமேசான் ப்ரைமில் வெளியான சர்தார் உத்தம் பற்றிய தாமதமான பதிவு இது. இந்தத் திரைப்படத்தை ஒரு சிட்டிங்கில் பார்த்து முடிப்பது என்பது சிரமமாகிப் போனது. ஆனால், ஒரு சிட்டிங்கில் பார்த்து முடிப்பது உசிதம். சில பேரின் வாழ்க்கை வரலாறு, கற்பனைக்கெட்டாதபடி இருக்கும். உத்தம் சிங்கின் வாழ்க்கையும் அப்படிபட்டது தான். நாம் அனைவரும் ஜாலியான்வாலா பாக் படுகொலை பற்றி அறிந்திருப்போம். பகத் சிங் குறித்து அறிந்திருப்போம். உத்தம் சிங் என்ற பெயர் தென்னிந்திய […]
பனிப்பூக்கள் Bouquet – ஓமிக்ரான் பொங்கல்
தமிழ் வருடங்களுக்கு விஷு, விளம்பி, பிலவ என்று பெயர் வைப்பது போல, இனி ஆங்கில வருடங்களை நினைவில் வைத்துக் கொள்ள, கோவிட்-19, டெல்டா, ஒமிக்ரான் போன்ற பெயர்கள் தேவைப்படும் போல இருக்கிறது. சூறாவளிக்கு விதவிதமாகப் பெயர் வைத்து கூப்பிடுவதைப் போல, வருடாவருடம் தொடர்ந்து வரும் கொரோனா வகைகளுக்கும் விதவிதமான பெயர்களைப் பல நாடுகளிலிருந்து பரிந்துரைக்கலாம். எப்படி 2005இல் வந்த சூறாவளியை கத்ரீனா என்ற பெயருக்காகவே நினைவில் வைத்திருக்கோம். அது போல, அழகான பெயர்களைச் சூட்டலாம். சூறாவளி […]
புத்தாண்டு வாழ்த்துக்கள் – 2022
கண் விழித்து நான் எழுந்தேன்…. கனவின் நங்கை கண் முன்னே! கிள்ளி எனை நான் உணர்ந்து காண்பது நனவென உறுதி செய்தேன்! கன்னியவள் அருகே கனிவுடனே வந்து கவனத்தை நெருடி காதலுடன் பருகி கள்ளமற்ற சிரிப்பை கரையின்றி வழங்கி குறும்புப் பார்வையில் குழப்பம் விலக்கினாள்! காலம் காட்டி நாட்களாய்க் கிழிக்கப்பட கருவிருந்து வெளி வந்தேன் என்றாள்! காலச் சக்கரம் ஓராண்டு சுழன்றிட கடமை மாறாது அடுத்ததாய் உதித்தேனென்றாள்! நானே ஆண்டு இரண்டாயிரத்து இருபத்தொன்று, நாசமிகு […]