admin
admin's Latest Posts
2021இல் தடம் பதித்த திரைப்படங்கள்
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை 2021 ஆம் ஆண்டு முக்கியமான ஆண்டு எனலாம். கோவிட் காரணமாகச் சென்ற வருடம் பெரும்பாலான நாட்கள் திரையரங்குகள் அடைபட்டு கிடக்க, புதிய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகும் கலாச்சாரம் தொடங்கியது. இந்தாண்டு திரையரங்குகள் முதலில் 50% பிறகு 100% என்று திறக்கத் தொடங்கினாலும், ஓடிடியில் படம் வெளியிடுவது தொடர்ந்தது. திரைப்படங்களுக்கான இன்னொரு வெளியீட்டுத் தளமாக ஓடிடி உருவானது. அது மட்டுமில்லாமல், திரையரங்கில் வெளியான பெரிய படங்களே, இரண்டு மூன்று வாரங்களில் ஓடிடியில் வெளியானது. ஓடிடியில் […]
2021இல் மின்னிய பாடல்கள்
2021 ஆம் ஆண்டு வெளியாகி பிரபலமாகிய பாடல்களைக் காணும்போது, பெரும்பாலும் ஆட்டம் போட வைக்கும் பாடல்களே அதிகம் இடம்பிடித்துள்ளன. அதற்கு என்ன காரணம் என்ற ஆய்வைத் தொடங்கினால், 2022 தொடங்கிவிடும் என்பதால், நாம் நேரே அந்தப் பாடல்களைக் காண சென்று விடலாம். வாத்தி கம்மிங் இந்தப் பாடலின் பிரபல்யத்தைச் சுருக்கமாகக் கூற வேண்டுமானால், யூ-ட்யூபில் பத்து வருடத்திற்கு முன்பு வெளியான ‘Why this kolaveri’ பாடலின் சாதனையை இந்தாண்டு வெளியான இப்பாடல் தாண்டிவிட்டது எனலாம். இவ்விரண்டு பாடல்களுமே […]
ஸ்பைடர்மேன்-நோ வே ஹோம்
நான் சிறுவயதில் கார்ட்டூன் நெட்வொர்கில் வரும் ‘ஸ்பைடர்மேன்’ பார்த்து ரசித்ததுண்டு. காமிக்ஸ் புத்தகம் வாங்கி படித்த அனுபவமில்லை. அமெரிக்காவில் 2002வில் முதன்முறையாக ‘ஸ்பைடர்மேன்’ படத்தைத் திரையரங்கில் பார்த்துப் பிரமித்துப்போனேன். என்ன ஒரு கற்பனை? சரி பழைய கதை எதற்கு, இப்பொழுது வந்துள்ள ‘ஸ்பைடர்மேன் – நோ வே ஹோம்’ படத்தைப் பற்றி பார்ப்போம். இந்தப் படம் ‘ஸ்பைடர்மேன்’ வரிசையில் வரும் மூன்றாவது படம். இரண்டாவது படம் ‘ஸ்பைடர்மேன் – ஃபார் ஃபிரம் ஹோம்’ படமுடிவில் ஸ்பைடர்மேன் தான் […]
எறிகணை புத்தக அறிமுக விழா
எழுத்தாளர் திரு. தியா காண்டீபன் அவர்கள் சமீபத்தில் எழுதிய ‘எறிகணை’ நூலின் அறிமுக விழா டிசம்பர் 11ஆம் தேதி அன்று பேஸ்புக் நேரலை வாயிலாக நடைபெற்றது. இவ்விழாவில் இப்புத்தகத்தைப் பதிப்பித்த டிஸ்கவரி புக் பேலஸ் திரு. வேடியப்பன், ஈழ எழுத்தாளர் கவிஞர் திரு. தீபச்செல்வன், பனிப்பூக்கள் பதிப்பாளர் திரு. யோகி அருமைநாயகம், முதன்மை ஆசிரியர் திரு. ரவிக்குமார் சண்முகம், பொறுப்பாசிரியர் திரு. மதுசூதனன் ஆகியோர் கலந்துக்கொண்டு நூலாசிரியரை வாழ்த்திப் பேசினர். சாகித்திய விருது பெற்ற மூத்த ஈழ […]
மாநாடு
அப்துல் காலிக் ஊட்டியில் நடக்கும் தனது தோழியின் திருமணத்திற்குத் துபாயிலிருந்து கோவைக்கு விமானத்தில் வருகிறான். அந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லாத தோழியை அவளுடைய காதலனுடன் சேர்த்து வைக்க, அங்கிருந்து கடத்தி வரும்போது, அவனும் நண்பர்களும் போலிஸ் அதிகாரி தனுஷ்கோடியிடம் மாட்டிக்கொள்கிறார்கள். கோவையில் நடக்கும் ஒரு மாநாட்டில் வைத்து, முதலமைச்சரைக் கொல்லும் திட்டத்தில் அப்துலை பலிகடாவாக்க முயலுகிறார் அந்தப் போலிஸ் அதிகாரி. அதன் மூலம் மதக்கலவரத்தையும் உருவாக்க சில அரசியல்வாதிகளுடன் இணைந்து திட்டமிடுகிறார் அவர். இதுவரை இது ஒரு […]
(பேச்சு) சுதந்திர இந்தியா
இந்தியா எந்த ஆண்டு சுதந்திரம் பெற்றது என்ற கேள்விக்கு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் என்று சொல்வீர்களானால் உங்கள் வரலாற்றைத் திருத்திக் கொள்வது நலம். 2014ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் நாள், அதாவது திரு. நரேந்திர மோதி பிரதமராகப் பதவியேற்ற தினத்தன்று தான், இந்தியா சுதந்திரம் பெற்றது. தாதாபாய் நெளரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, ராமசாமி முதலியார், ரோமேஷ் சந்தர் பட் , மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், அனி பெசண்ட், […]
தமிழ்நாட்டில் சிறார்கள் மீதான பாலியல் வன்முறை
குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. நாடு முழுவதும் ஏறத்தாழ 40,000 குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றுள்ளது. இவற்றில் 142 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இந்தாண்டு இதுவரையில் 2,000 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது இந்த அறிக்கை. சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில், உயர் பள்ளி மாணவிகள் 2 பேரின் தற்கொலைக்குப் பிறகு பள்ளிகளில் நடக்கும் பாலியல் தொடர்பான விவாதங்கள் மீண்டும் […]
இலங்கையில் அயல்நாடுகளின் ஆதிக்கம்
கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட நாளிலிருந்து உலகெங்கும் பல உயிர்கள் இந்த நோய்க்குப் பலியாகின. உயிர்ச் சேதங்கள் மட்டுமின்றி பல நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாயின. குறிப்பாக அன்னியச் செலாவணி, சுற்றுலா வருவாய்களைப் பிரதானமாகக் கொண்ட நாடுகளின் பொருளாதார நிலை முற்றிலுமாக நசிந்து விட்டது என்பதே உண்மை. அத்தகைய நாடுகளில் ஒன்றாக இலங்கையும் இடம் பெற்றிருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஏற்கனவே உள்நாட்டுப் போர், ஸ்திரமற்ற அரசுகள் என பல இன்னல்களைச் சந்திந்து மெதுவாக மீண்டு வந்து கொண்டிருந்த நாடு, […]
பெருகும் பாலியல் கொடூரங்கள்
“என்றைய தினம் நடு இரவில் பெண்கள் நகை அணிந்து தனியாகச் செல்ல முடிகின்றதோ அன்றுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக உணரப்படும்”. பெண்கள், ஆண்கள் விரும்புவதைச் செய்யும் அடிமைத்தன எண்ணங்களை விடுத்து, ஆண்களுக்குச் சமமான கல்வி, சமூக அந்தஸ்துப் பெற வேண்டும் என விரும்பினார் காந்தி. தன்னைச் சந்திக்க வரும் தலைவர்களிடம் கூட அவரவர் மனைவியரை, அரசியலில் ஈடுபட அழைத்து வருமாறு வற்புறுத்தினார் அவர். பெண்கள் தங்களின் அடிமைச் சங்கிலிகளை அணிகலன்களாகத் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது […]