admin
admin's Latest Posts
2021 ஆஸ்கார் விருதுகள்
உலககெங்கிலும் இருக்கும் திரைப்படக் கலைஞர்களாலும், ரசிகர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு, கவனிக்கப்படும் ஆஸ்கார் விருதுகளுக்கான விழா, கடந்த வாரயிறுதியில் ஏப்ரல் 25ஆம் தேதியன்று லாஸ் ஏஞ்சல்ஸில், யூனியன் ஸ்டேசன் மற்றும் டால்பி திரையரங்கில் நடைபெற்றது. பிப்ரவரி மாதம் நடைபெறவிருந்த 93 ஆம் ஆண்டிற்கான இந்த விழா, கோவிட் காரணமாக ஏப்ரலுக்குத் தள்ளி வைக்கப்பட்டது. திரையரங்கில் வெளியான படங்கள் மட்டுமின்றி, கடந்தாண்டும், இந்தாண்டும் கோவிட் காரணமாகத் திரையரங்கில் வெளியாகாமல், பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் இந்தாண்டு ஆஸ்கார் தேர்வில் […]
மீண்டும் சுவாசிக்க முடிகிறதா?
“இன்று நாங்கள் மீண்டும் சுவாசிக்கிறோம். நிறம், இனம் எனும் பாகுபாடுகளைக் கடந்து, கீழே வீழ்த்தப்பட்டு, கால்களுக்கடியில் நசுக்கப்பட்டு, மிதிக்கப்படும் ஓவ்வொருவருக்கும் இந்தத் தீர்ப்பு நம்பிக்கையளித்துள்ளது. ஜார்ஜ், டி-ஷர்ட்களில் பதிக்கப்பட்ட படமாக மட்டுமே இருந்துவிடக்கூடாது என்று ஒவ்வொரு நாளும் வேண்டிக்கொண்டதற்கு விடை கிடைத்துள்ளது. ஜார்ஜின் மரணம் எங்களுக்குப் பெரும் இழப்புதான்; ஆனால் அவர் மாற்றத்திற்கான வரலாற்றில் இடம் பிடித்தது மகிழ்ச்சியளிக்கிறது” – ஃப்ளாயிட் சகோதரர்களின் இந்த வார்த்தைகள், மினியாபொலிஸ் நீதிமன்றத்தின் முன் குழுமியிருந்த கூட்டத்தினரின் ஆரவாரத்தோடு நாடெங்கும் பரவியது, […]
தேர்தல் கூத்து 2021
தமிழ்நாட்டில் கொரோனாவை மிஞ்சியபடி தேர்தல் ஜூரம் அடிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்தின் 16வது சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஏப்ரல் 1 ஆம் தேதி கூட நடத்தி இருக்கலாம். அவ்வளவு வெளிப்படையாக இருக்கக் கூடாது என்பதற்காக 6ஆம் தேதி வைத்து இருப்பார்களோ, என்னமோ!!. அமெரிக்காவிலிருந்து கொண்டு இந்தியாவில் நடக்கும் தேர்தலைப் பற்றிக் கருத்து சொல்ல பயமாக இருக்கிறது. இந்திய இறையாண்மை என்று கடித்து வைத்து விடுவார்களோ என்று டெரராக இருக்கிறது. ஆளுங்கட்சியை ஒண்ணும் […]
ஒரு விசித்திரமான கனவு
அவள் கண்களால் அதை நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை ; அதை பார்த்த பின் நெஞ்சு படபடவென அடிக்க ஆரம்பித்து , மூச்சு வாங்கியது, ஆற்றில் வெள்ளம் பாய்ந்து ஓடுவது போல உடம்பிலுள்ள எல்லா நரம்புகளிலும் இரத்தம் ஓடியது , இரவு 10:00 மணியளவில் அந்த தூரத்து நடைபாதையில் ஒரு சிறு குழந்தை படுத்திருந்தது. தூத்துக்குடி – பேருக்குத்தான் மாநகரம் ஆனால் 10 மணிக்கு ஆள் நடமாட்டமே இல்லாத இந்தத் தெரு பகுதி . அவள் […]
உயரம்
“என்னை எதுக்கு காப்பி ஷாப்புக்கு வரச்சொன்ன.கௌதம் ……..” இருவருக்கென போடப்பட்ட நாற்காலியில் ப்ரீத்திக்கு நேர் எதிரில் அமர்ந்திருந்த கெளதம் காப்பியில் பறந்துகொண்டிருந்த ஆவியைப் பார்த்தவாறு இருந்தான். “வீட்டுல வேண்டான்னு சொல்றாங்க …..அ.. அதுதான் …” “ஓ…….. அப்ப பிரேக் அப்.. அப்படித்தானே …. நல்லாயிருக்கு கெளதம் “ ” ப்ரீத்தி……. புரிஞ்சுக்கோ அதுக்காக நான் உன்ன கூப்பிடுல ……..நம் இப்போ என்ன பண்றதுனு கேக்கத்தான் கூப்பிட்டேன் ………..” ” நீ ஆம்பள தான …….என்ன பண்ணறதுனு […]
தேர்தல் சத்தியங்களும் சாத்தியங்களும் – பாகம் 2
தேர்தலுக்குச் சில நாட்களே இருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதியையும் வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்து அறிந்து கொள்ள இந்த வலையொலி நிகழ்ச்சி உதவும். தேர்தலில் யாருக்கு வாக்களிக்கலாம் என்று முடிவெடுக்கவும் இது உதவும் என்று நம்புகிறோம். கேளுங்கள்.. பகிருங்கள்.. ஜனநாயகக் கடமையைச் சரிவரச் செய்திடுங்கள்.. நிகழ்ச்சியின் முதல் பகுதி. பங்கேற்றோர் – திரு. ரவிக்குமார் சண்முகம், திரு. சரவணகுமரன்.
முட்டாள்களின் தினமா ஏப்ரல் 1?
முட்டாள்களின் தினமாக ஏப்ரல் ஒன்றாம் தேதி கொண்டாடப்படுவதின் பின்னணி குறித்தும், ஏப்ரல் ஒன்றாம் தின அனுபவங்கள் குறித்தும் இந்த பனிப்பூக்கள் அரட்டையில் உரையாடுகிறார்கள் மதுசூதனன் & சரவணகுமரன். புகைப்படங்கள் – ராஜேஷ் கோவிந்தராஜ் தொகுப்பு – சரவணகுமரன்