admin
admin's Latest Posts
கலைமாமணி நிர்மலா ராஜசேகருடன் உரையாடல் – பாகம் 2
தமிழ்நாடு அரசின் உயரிய விருதான கலைமாமணி விருது பெற்றுள்ள திருமதி. நிர்மலா ராஜசேகர் அவர்களுடன் திருமதி. லஷ்மி சுப்ரமணியன் நடத்திய உரையாடலின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம்.
தமிழ் கவிதாயினிகள்
உலக மகளிர் தினத்தையொட்டி தமிழ் கவிதாயினிகள் குறித்து மதுசூதனனும், சரவணகுமரனும் பேசிய பனிப்பூக்கள் அரட்டை.
கலைமாமணி நிர்மலா ராஜசேகருடன் உரையாடல் – பாகம் 1
தமிழ்நாடு அரசின் உயரிய விருதான கலைமாமணி விருது பெற்றுள்ள திருமதி. நிர்மலா ராஜசேகர் அவர்களுடன் திருமதி. லஷ்மி சுப்ரமணியன் நடத்திய உரையாடலின் முதல் பாகம்.
மீம் மியாவ் – Invitation for Meme creators
மீம் மியாவ் – உங்கள் கற்பனையை படத்தில் பதிவு செய்யுங்கள், சிறந்தவை நாங்கள் இணையத்தில் பப்லிஷ் செய்கிறோம். அனுப்பவேண்டிய முகவரி : vanakkam@panippookkal.com
தேசம் தெரிந்து கொள்ள விழைகிறது
“பதினெட்டாம்நூற்றாண்டில் வேண்டுமானால் பத்திரிகை மக்களாட்சியின் நான்காம் எஸ்டேட்டாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று அது மற்ற மூன்றையும் விழுங்கிவிட்டது. இன்று பத்திரிக்கை ஜனநாயகத்தை முழுமையாக ஆட்கொண்டுவிட்டது.” –பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த கவிஞரான ஆஸ்கார் ஒயில்ட் ஊடகத்துறையைப் பற்றிச் சொன்னது இது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. மக்கள் உரிமைகளைக் கண்காணித்துக் காக்கும் காவல் நாயாக (Watch dog)இருக்க வேண்டிய ஊடகத்துறை நிறுவனங்களில் சில, ஆள்பவர்களின் மடியில் அமரும் செல்ல நாயாக (Godi […]
இதயத்தில் முள் தோட்டம் (தொடர் கதை – பகுதி 3)
(பாகம் 2) மூன்று மாதங்கள் மிக வேகமாக ஓடிவிட்டது. டி.எஸ்.பி ராஜீவுக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. எந்தப் பக்கம் சென்றாலும் ஒரு முட்டுச் சுவர்! அவருக்கு மேலிடத்திலிருந்தும், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களிலிருந்தும் நிறைய பிரஷர் வர ஆரம்பித்தது. அதனால் சந்தேக நபர்களில் சிலரை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது. எந்த ஆதாயமும் இல்லை, அவர்கள் அவரை மேலும் குழப்பும் விதமாகப் புதிய “லீட்ஸ்” கொடுத்தனர். அவரது நேரத்தை மேலும் அது வீணடித்தது. அன்று புதன்கிழமை. […]
பெருந்தொற்றுக்கால இந்தியப் பயணம் – 2
(பாகம் 1) அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த பிறகு, சாதாரணமாக நிகழும் பல விஷயங்கள் முதல் பார்வையில் வித்தியாசமாகத் தெரிந்தன. அனைத்துக் கடைகளும் திறந்து இருக்க, கடைக்காரர்களும் சரி, வாடிக்கையாளர்களும் சரி, மாஸ்க் இல்லாமல், பயம் இல்லாமல் சென்று வந்து கொண்டிருந்தனர். கொரோனா லாக் டவுன் தொடங்கிய காலத்தில், மாஸ்க் போடாத மக்களைப் போலீஸ்காரர்கள் விரட்டி பிடித்து அபராதம் வசூலித்ததை டிவியில் பார்த்திருக்கிறேன். இப்போது போலீஸ்காரர்களே மாஸ்க் போடாமல் கேஷுவலாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது, கொரோனாவிற்கு […]
சந்தைப் பெறுமதி: உங்கள் பெறுமதி என்ன?
அது சரி நீங்கள் சம்பள வேலை செய்கிறீர்களா, அல்லது ஓய்வு பெற்று விட்டீர்களா? உங்கள் பெறுமதி என்ன? மேலும் நீங்கள் அமெரிக்காவில் வாழுகிறீர்களா? அப்போ நீங்கள் பொருளாதாரச் சந்தையில் பரிமாறப்படும் பண்டமா? இதென்ன கேள்வி அப்படியெல்லாம் கிடையாது என்று சொன்னீர்களானால் வாருங்கள் உங்கள் சனநாயக சுதந்திரம் பற்றி அலசுவோம். உலகின் பணக்கார நாடு என்று கருதப்படும் அமெரிக்க நாட்டில், சாதாரண மக்கள் வாழ்வு பொதுவாக நலமாக இல்லை என்பது அனைவரும் அறிந்த விடயமே. இது 245 ஆண்டுகள் […]
கவிக் காதல்
“ஏன்னா… என்ன பண்ணிண்ட்ருக்கேள்?” .. கேட்டுக் கொண்டே அடுக்களையிலிருந்து வெளியே வந்தாள் லக்ஷ்மி. இரவு உணவு முடித்து, டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு, ஆர்ட் புக்கில் எதையோ வரைந்து கொண்டிருந்த கணேஷ், “ஒண்ணுமில்லடி, ஏதோ படம் போட்டிண்டிருக்கேன்…” என்றான். அருகே வந்து என்னவென்று பார்க்க எத்தனித்தாள் லக்ஷ்மி. உடனடியாகப் புத்தகத்தை எடுத்து நெஞ்சோடு அணைத்து, அவளுக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டான். “என்ன.. என்ன அப்டி….. நேக்குக் காட்டக் கூடாதோ?” “இல்லடி… சர்ப்ரைஸ்…” கணேஷ். “சர்ப்ரைஸ் … ஓ… […]