\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

காவல்துறை உங்கள் நண்பன் – திரைப்பார்வை

காவல்துறை உங்கள் நண்பன் –  திரைப்பார்வை

நடுத்தர வர்க்கத்தின் ஒட்டு மொத்தச் சாயலும்  படத்தின் கதாநாயகனான சுரேஷ் ரவியின் முகத்தில் திரையில் மிகைப்பு இல்லாமல் வலம் வருகிறது. ஒவ்வொருவருக்குள்ளும் மின்னலெனப் பளிச்சிடும் அச்சம் அவ்வப்போது நம் வாழ்ந்துவிடும் வாழ்க்கைக்கான தேடலின் குறுக்கே வந்து மறைவது தெரிந்து போகிறது.  இருவர் கொண்ட அழகான குடும்பம், ரவீனா ரவி உதிர்க்கும் காதலில் மேலும் அழகுடன் காட்டப்பட்டுள்ளது. எப்போதும் போல காதலை ஏற்றுக்கொள்ளாத ஒரு சமூகம் .  காதலியின் தோள்களில்  துயில் கொள்வதற்காகவே களைப்பின் சுமையை இரவில் களைந்துவிட்டு […]

Continue Reading »

பீஃப் வெலிங்டன் அகலடுப்புச் சமையல்

பீஃப் வெலிங்டன் அகலடுப்புச் சமையல்

குளிர்காலத்தில் அகலடுப்பு (Oven) மூலம் பார்க்கப் பொலிவாகவும், சற்று ஏளிதாகவும் செய்யக்கூடியது உரொட்டி தயாரிப்பது போன்ற, வெலிங்டன் வகை வாட்டி வேகவைக்கும் சமையல். பிரித்தானியர் பீஃப் எனும் மாட்டு இறைச்சியைப் பாவிப்பதை விரும்பினும், இதனைக் கோழி, ஏன் உருளைக்கிழங்கு மசாலாவுடனும் இலகுவாகத் தயாரிக்க முடியும். உரொட்டியில் மூடப்பட்ட மாமிசம் (filet de bœuf en croûte – fillet of beef in pastry)  என்ற பிரெஞ்சு சமையலை பிரித்தானியர் பின்பற்றி சமைக்க, காலப்போக்கில் அது பீஃப் […]

Continue Reading »

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா – கொண்டாட்டமா? குழப்பமா?

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா – கொண்டாட்டமா? குழப்பமா?

ஜனவரி 20ஆம் நாள், ஜோ பைடன் என அழைக்கப்படும் ஜோசப் ராபினெட் பைடன் அவர்கள், ஐக்கிய அமெரிக்காவின்46ஆவது அதிபராகப் பதவியேற்கவுள்ளார். கூடவே கமலா ஹாரிஸ் எனப்படும் கமலா தேவி ஹாரிஸ் அவர்கள், ஐக்கிய அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகப் பொறுப்பேற்றுக் கொள்வார். அமெரிக்க அரசியல் பாரம்பரியப்படி நடைபெறும் இந்த பதவியேற்கும் நிகழ்ச்சி புதிய அதிபரின் செயல்பாடுகளின் தொடக்கமாக அமையும். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக,அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் வெள்ளை மாளிகைக்குச் சென்று தற்போதைய அதிபரைச் சந்தித்து, இருவருமாக அமெரிக்காவின் […]

Continue Reading »

‘அந்த’ வைரஸ்

Filed in கதை, வார வெளியீடு by on January 18, 2021 0 Comments
‘அந்த’ வைரஸ்

காரில் ஏறி உட்கார்ந்ததும் எதோ ‘காக்பிட்டுக்குள்’ நுழைந்த மாதிரி இருந்தது ரகுவுக்கு.  ஏழெட்டு மாதங்களாகிவிட்டது சொந்தக் காரில் உட்கார்ந்து. லிவிங் ரூம் விட்டால், ஆஃபிஸ் ரூம்; அரை மணிக்கொருமுறை பாத்ரூம்; அசந்த வேளையில் பெட்ரூம் என்று மாறிப் போயிருந்தது வாழ்க்கை.   சில சமயங்களில்,’ஊபர் ஈட்ஸ்’ காரன் கொண்டு வந்து வைத்துவிட்டுச் செல்லும் உணவையும்,  சுலோவின் அமேசான் ஷாப்பிங் பெட்டிகளையும் அள்ளிக் கொண்டு வர ஒரு நாப்பது நாப்பத்தியைந்து நொடிகள் வாசல் ‘போர்ச்’க்குப் போவதுண்டு. அந்த நாப்பது நாப்பத்தியைந்து […]

Continue Reading »

கலாட்டா – 12

கலாட்டா – 12

Continue Reading »

இதயத்தில் முள் தோட்டம்

Filed in கதை, வார வெளியீடு by on January 13, 2021 0 Comments
இதயத்தில் முள் தோட்டம்

தென்னை மரங்களைத்  தழுவியபடி கடலிலுருந்து  சுகமான  காற்று வீசியது. காலைப்  பதினோரு மணி. இது அரையாண்டு பள்ளி விடுமுறை நேரம்.  முட்டுக்காடு ‘பேக்வாட்டர்ஸில்’  சுற்றுலாப் படகுகளுக்கு நடுவே கொஞ்சம் தண்ணீர் தெரிந்தது என்று கூடச் சொல்லலாம். குற்றப்பிரிவு சி.ஐ.டி. பிரிவைச் சேர்ந்த போலீஸ் ஜீப் சுழலும் விளக்குகளைப் போட்டபடி வேகமாக முட்டுக்காடு பாலத்தைத் தாண்டிச் சென்றது. மக்கள் அதை ஒரு  பொருட்டாக மதித்ததாகத்  தெரியவில்லை. அவர்கள் போலீஸ் ஜீப்பை விட வேகமாகப்  பயணிக்கவே முயற்சித்தனர். துணை போலீஸ் […]

Continue Reading »

சமையல் : ஸ்பானியப் பயேயா (Spanish Paella)

சமையல் : ஸ்பானியப் பயேயா (Spanish Paella)

இது என்ன வினோதமானப் பெயராக இருக்குதே என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் நீங்கள் கடலுணவுப் பிரியர் என்றால்  உங்களுக்காகக் காத்திருக்கிறது இந்த ஸ்பானியக் கடலுணவுப் பொக்கிஷம். இவ்விடம் நாம் தரும் ஸ்பானிய பயேயா சமையல் குறிப்பு,  தமிழ் சமையலறையில் எளிதாக உருவாக்கிக் கொள்ளக்கூடியது. மேலும் சைவம் மட்டுமே சாப்பிடக்கூடியவர்களும் இதை எவ்வாறு செய்யலாம் என்ற குறிப்பும் கீழே வழங்கப்பட்டுள்ளது. ஸ்பானிய பயேயா உண்மையில் இத்தாலி நாட்டு வெலேன்சியா கடல் சார்ந்த இடத்திலிருந்து உருவானது என்று கருதப்படுகிறது. இத்தாலியரும், […]

Continue Reading »

அமெரிக்காவிற்கு சனநாயக மறுமலர்ச்சி தேவை

அமெரிக்காவிற்கு சனநாயக மறுமலர்ச்சி தேவை

அமெரிக்காவிற்கு சனநாயக மறுமலர்ச்சி தேவை அமெரிக்காவின் வெளிநாட்டு விவகாரம் உள் நாட்டு சனநாயக மறுமலர்ச்சியைப் பொறுத்தே அமையும் என்று சொல்லியிருக்கிறார் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அதிபர் ஜோ பைடன்.. சென்ற சனவரி 6ம் திகதி வாஷிங்டன் டிசி யில் நடைபெற்ற விடயம் அமெரிக்கப் பொதுமக்களும், உலகும் இதுவரை காணாத, அதீத கற்பனையில் உருவாக்கப்பட்ட சினிமாப் படம் போன்று, அறநெறிக்கு மாறான, குரோதம் மிகுந்த வெறியாட்டம் போன்று காணப்பட்டது.  அமெரிக்க சனநாயத்தின் தேவாலயம் போன்றது  ‘கேப்பிட்டல்’ எனப்படும் அமெரிக்க மத்திய […]

Continue Reading »

சாலப் பெருங்களி யிஃதே – பாகம் 1

சாலப் பெருங்களி யிஃதே – பாகம் 1

எல்லோரா குடைவரைக் குகைகள் சிறு வயதில் வரலாற்றுப் பாடத்தில் குடைவரைக் கோயில்கள் பற்றிப் படித்ததுண்டு. அவற்றில் முக்கியமானவைகளாக, உலகப் பிரசித்தி பெற்ற அஜந்தா மற்றும் எல்லோராக் குகைகளைப் படித்ததுண்டு. அவற்றை நேரில் பார்த்து மகிழும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. அந்த அனுபவம் பனிப்பூக்கள் வாசகர்களுக்காக! மஹாராஷ்ட்டிர மாநிலத்தில், ஔரங்காபாத் நகரம் ஓரளவுக்குப் பிரபலமானது. பல வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நகரம், இந்தியாவில் அதிவேகமாக வளரும் இரண்டாம் / மூன்றாம் ரக நகரங்களில் ஒன்றாகும். 1610 ஆம் […]

Continue Reading »

ஜனவரி 2021 – தமிழ்ப் பாரம்பரிய மாதம்

ஜனவரி 2021 – தமிழ்ப் பாரம்பரிய மாதம்

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நடைபெறும் ஜனவரி மாதத்தை ‘தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாகப்’ பிரகடனப்படுத்தி தமிழ் மொழியின் தொன்மை, செழுமை, கலாச்சாரத்தைப் பெருமைப்படுத்தியுள்ளது மினசோட்டா மாநில அரசாங்கம்.   இதைப் பிரகடனப்படுத்தி, அறிவித்த ஆளுநர் திரு. டிம் வால்ட்ஸ் அவர்களுக்கு தமிழ்ச் சமூகம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறது பனிப்பூக்கள்.   ஆளுநரது அறிவிப்பின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது. உலகில் 2600 ஆண்டுகளை விஞ்சியிருக்கும் வரலாற்றைக் கொண்டிருக்கும் தொன்மையான செம்மொழியாகத் […]

Continue Reading »

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad