admin
admin's Latest Posts
தார் மணலில் இருந்து எரிபொருள்
தார் மணலில் இருந்து எரிபொருள் நாம் வாகனங்களில் உபயோகிக்கும் பெற்றோலியம், கனேடிய தார் மணலில் இருந்து எவ்வாறு வருகிறது என்று பார்க்கலாம். தார் மணலில் இருந்து எரிபொருள் பிரிப்பது நிலத்தடி எண்ணெய் எடுப்பதை விட அதிக செலவுள்ளது. சுற்றுச்சூழலிற்கும் அதிக மாசு படுத்தும் செயலாகும் இது. தார் மணல் அகழ்வு இரு வகையில் நடைபெறலாம். மேற்தரை மணல் அகழ்வு. இது பாரிய பிரதேசத்தைப் பெரும் குழிகாளாக விட்டுச் செல்லும். இரண்டாவது முறை ஆழ் கிணறுகள் துளைத்து […]
உடல் மாறிய உறவுகள்
நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வாசுகியை, ஒலிப் பெட்டியில் இருந்து வந்த பைலட்டின் குரல் தட்டியெழுப்பியது. இன்னும் ஒரு மணி நேரத்தில் சியாட்டில் டோகோமோ ஏர்போர்ட்டை அடையப் போவதாக அவர் அறிவித்தார். வாசுகி தன் பக்கத்தில் இருந்த கணவன் மனோகரைத் தட்டியெழுப்பி. “மாமா, இன்னும் ஒரு மணி நேரத்துல லேண்ட் ஆகும் போல இருக்கு. நீங்க டாய்லெட் போகணும்னா போயிட்டு வாங்க” “ஐ அம் ஃபைன், நீ போகணுமா?” “இல்ல மாமா, இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும்” […]
விடைபெறும் 2020 ஆம் ஆண்டு
2020 ஆம் ஆண்டு முடிவடையப் போகிறது. முட்டி மோதி, தட்டுத் தடுமாறிக் கிட்டத்தட்ட அதனைக் கடந்து விட்டோம் நாம். ஆனால் நிறைய வடுக்கள், வலி, விரக்தி மற்றும் மனச்சோர்வு நம்மை ஆட்கொண்டுவிட்டன. இடையிடையே சின்னச் சின்னச் சந்தோஷங்கள். முந்தைய ஆண்டுகளை விட இந்தாண்டு குடும்பத்தினருடன் கூடுதல் நேரத்தைப் பகிர்ந்துகொண்டு, அவர்களை அதிகமாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் எனத் தோன்றுகிறது. ஒவ்வொரு ஆண்டு முடியும் தறுவாயில் நடப்பாண்டின் நன்மைகள் – தீமைகள், ஆச்சரியங்கள் – ஏமாற்றங்கள் , ஆக்கங்கள் – […]
இந்திய சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அரசியலில் உள்ளிடல்
பல கால வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமுகமாகப் பெரும் தென்னிந்தியத் தமிழ் நடிகர் ரஜனிகாந்த் அரசியலில் இறுதியாக உள்ளிடவிருக்கிறார். இவர் சனவரி மாதம் புதியதொரு கட்சியை ஆரம்பிக்கவுள்ளார், என்று டிசம்பர் 2020 ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார். இந்தியத் தென்மாநிலமான தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்காக இன்னும் சில மாதங்களில் வாக்களிக்கவிருக்கும் நிலையில், இப்போது நடக்காவிட்டால் எப்போதும் நடக்காது என்று அவர் கூறியுள்ளார். தமிழ்நாடு தற்பொழுது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் கட்சியால் ஆளப்பட்டு வருகிறது. இந்தக் […]
பனிக்காலச் சுகங்கள்
மீண்டும் மினசோட்டாவில் பனிக்காலம் வந்துவிட்டது. இந்த வருடம் பனி பிந்தினாலும், எம்மை குளிரும், இருளும் சூழ்ந்து வருகின்றன. இந்தக் குளிர் நாட்களில் சூரியன் பிந்தி உதித்து, முந்தி அத்தமிப்பது வழக்கம். எனவே முகில் கூடிய மந்தமான வானம், மங்கும் ஒளி இவ்விடத்தின் இயல்பான இயற்கை நிலையாகிப்போனது. இது சலிப்பான சூழலாக இருக்கும் என்று நாம் சிந்திக்கவும் செய்யலாம் அதன் ஒரு காரணம் பூமியின் மத்திய கோட்டுக்கு அருகாமையில் வெயில் வெளிச்சத்துடன் வெப்ப வலயத்தில் (Tropics) இருந்து வந்த […]
வெள்ளத்தால் ஆசியாவின் அபாயம் $8.5 டிரில்லியன்
சூழலியல் பேரிடர்களை இந்தியா, சீனா போன்ற பெரும் நாடுகளும் ஏனைய இதர நாடுகளும் ஆசியாவில் எதிர்நோக்குகின்றன. அதன் தாக்கத்தைக் குறைக்க பாரிய உள்நாட்டுக் கட்டமைப்பு முதலீடுகள் உடனே தேவைப்படுகின்றன. வளரும் பூகோள இயற்கை அழிவுகள் தொடர்ந்து ஆசியப் பொருளாதாரங்களுக்கு அபாயத்தை உண்டு செய்தவாறே உள்ளன. World Research Institute (WRI) தரவு தகவல்கள் படி 2030 இல் உலகளாவிய பொருளாதார உற்பத்தியில் ஆற்று வெள்ளப்பெருக்கு காரணமாக உருவாக உள்ள சேதம் $17 trillion என்று அனுமானிக்கப்படுகிறது. அதில் […]
சந்தித்த போராட்டம்
சூரியன் வழக்கம்போலத்தான் விடிந்தது, அவளை பொறுத்தவரை எல்லாமே வழக்கமாகத்தான் நடந்தது. காலையில் மகன் அருணுடன் சத்தமிட்டது, “பொறுப்பில்லாமல் தூங்கி கொண்டிருக்கிறான், கல்லூரியில் படிக்கும் இளைஞன் இப்படி எட்டு மணி வரைக்கும் தூங்கினால் எப்படி?” அவனைத் தட்டி எழுப்பியதற்குத் தான் அப்படி சண்டையிட்டான். “உனக்கு நேரமாச்சுன்னா கிளம்ப வேண்டியதுதானே, என்னை ஏன் எழுப்பி சிரமப்படுத்தறே?” எகிறினான். அவனுடன் கிளம்பும் அவசரத்தில் மல்லு கட்ட முடியவில்லை, மெல்ல பின் வாங்கினாள். “வேண்டாம், இவனோடு எதற்கு வம்பு” ஆனால் அவனோடு மட்டுமே […]
புது வடிவில் பழமொழிகள்
நாம் பலரும் அறிந்த பழமொழிகள் முகவடி (Emoji) தொடர்களாகத் தரப்பட்டுள்ளன. கண்டுபிடிக்க முயலுங்கள்!
FaceBook H1B தேர்வுக்கு எதிராக வழக்கு
வியாழக்கிழமை December 3, 2020 நீதி துறை Department of Justice (DOJ) Facebook வேலையாட்களைத் தேர்வு செய்யும் விதம் பற்றிய விடயங்களுக்கு எதிரணி வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த சட்ட வழக்கு தொழிற் தேர்வானது அனுபவம் உள்ள அமெரிக்காவின் குடிமக்களைத் தேர்வு செய்யாமல் நிரந்தரமற்ற வீசா உள்ள வெளிநாட்டவரைத் தேர்ந்தெடுக்கிறது என்கிறது. பொதுவாக அமெரிக்க கம்பனிகள் தமது தாபன வேலையாளர் தேவைகளுக்கு முதலில் அமெரிக்க குடிமக்களை வேலைவாய்ப்பு விளம்பரம் செய்தல் மூலம் அறிவிக்க வேண்டும் என்கிறது. […]
செல்வி விஜயாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்
வட அமெரிக்காவில், மினசோட்டா மாநிலத்தில் உள்ள மேபிள் குரோவ்லில் வசிக்கும் பாஸ்கர் மற்றும் பானு கோபாலனின் மகள் செல்வி விஜயாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஆகஸ்ட் 15ம் தேதி மினசோட்டாவில் மேபிள் குரோவ் நகரிலுள்ள ஹிந்து கோவிலில் நடைபெற்றது.அவரின் நடன ஆசிரியை திருமதி. சுஜாதா ஆகுறட்டி (Guru Smt.Sujatha Akurati) அவர்களிடம் கடந்த 12 வருடமாக நடனம் கற்று, இப்பொழுது அரங்கேற்றம் நடைபெற்றது. விழா நிகழ்ச்சியை பாஸ்கர், பானு கோபாலனின் குடும்பத்தினரும் மற்றும் அவரது நண்பர்களும் இணைந்து ஏற்பாடு […]