Prabu Rao
Prabu Rao's Latest Posts
ஒரே ஒரு சந்திரன்
(பாகம் 3) 1952 ஆம் ஆண்டு ராமச்சந்திரனின் நடிப்பில் வெளிவந்த படங்கள் ‘அந்தமான் கைதி’, ‘ குமாரி’, மற்றும் ‘என் தங்கை’. அந்தமான் கைதி, இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, குடும்பத்துடன் இந்தியாவுக்கு வரும் இளைஞன், தன் தந்தை, சிலரால் கொலை செய்யப்பட்டதை அறிந்து, அவர்களைக் கொன்று விடுகிறான். இதற்காக அந்தமான் சிறையில் தண்டனை பெரும் அவன், விடுதலையாகித் திரும்ப வந்து, தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதோடு, கயவர்களால் கற்பழிக்கப்பட்ட ஒரு ஏழைப் பெண்ணை மணந்து கொள்வதான புரட்சிக் […]
சிந்திய சிந்து
காட்டிலும் மேட்டிலும் களைப்புடன் உழைத்திட்ட காளையும் கன்னியும் கண்ணயர்ந்து சுவைத்திட காதலும் கடவுளும் கருத்தினில் படைத்திட்ட, காரிருள் நீக்கியே கவிபுனைந்த கதிரோன்! சாவதின் பயமது சங்கடமாய்த் துரத்திட சாரமாய் வாழ்க்கையின் சங்கதி உணர்த்திட சாரதியாய் வந்திட்ட கண்ணனைப் பணிந்திட சாயுங்கால சொர்க்கமாய்க் குளிர்ந்திட்ட நிலவவன் !!! தாயகம் முழுவதும் தருக்கரால் பிடிபட தானமும் தவங்களும் தழைக்காது மிதிபட தாயவள் தளையறுக்கத் தலைமகனாய் உதித்திட்ட, தாங்கொணா வெப்பமாய்த் தகித்திட்ட தலைவனவன் !!! நாவினில் கலைமகளை நலமுறவே அமர்த்திட […]
காற்றினில் உலவும் கீதங்கள் – Top 5
கடந்த சில வாரங்களில் நிறைய படங்களின் பாடல்கள் வெளியாகிவுள்ளன. ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர், ட்ரெய்லர், ப்ரிமீயர் ஷோ, ரிலீஸ் என பட வெளியீட்டு ப்ராசஸ் மாறிப் போனதைப்போல், முன்பு, ஒருநாளில் நிகழும் பாடல் வெளியீட்டு ப்ரோட்டோக்கால், இன்று சிங்கிள் ரிலீஸ், டபுள் ரிலீஸ், பிஜிஎம் ரிலீஸ் என்று மாதக்கணக்கில், வருடக்கணக்கில் நிகழுகின்றது. அப்படி சமீபத்தில் வெளிவந்த பாடல்கள் பல குறிப்பிடத்தக்க வகையில் இருந்தாலும், நாம் இங்கு தொடர்ந்து பார்ப்பது வெளிவந்த படங்களை மட்டும் தான். […]
தற்கொலை தவிர்ப்போம்
இக்கட்டுரை வெளியாகும் செப்டம்பர் 10ஆம் நாள் ‘உலகத் தற்கொலைத் தடுப்புத் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நீட் (National Eligibility and Entrance Test) கடந்த சில தினங்களில் தமிழ் வாசிக்கத் தெரிந்த அனைவரையும் உணர்வு பூர்வமாகப் புரட்டி போட்ட செய்தி அனிதாவின் தற்கொலை. ‘கனவு காணுங்கள்’ என்ற கூற்றைக் கடந்து மருத்துவராகும் லட்சியத்தோடு மிகச் சிறந்த முறையில் தன்னைத் தயார்படுத்திக்கொண்டு, மருத்துவப் படிப்புக்கான விளிம்பில் நின்ற அவருக்கு, ‘நீட்’ நுழைவுத்தேர்வு பற்றி பரிச்சயமும், பயிற்சியும் இல்லாததால், அதில் வெற்றி […]
ஹார்வி பாதிப்புகளுக்கு உதவுங்கள்
ஆகஸ்ட் இறுதி வாரத்தில் அமெரிக்காவின் டெக்ஸாஸ், லூசியானா உள்ளிட்ட மாகாணங்களைத் தாக்கிய ஹார்வி சூறாவளியின் பாதிப்புகளை அறிந்திருப்பீர்கள். இதுவரை 70க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 13 மில்லியன் மக்கள் பல்வேறு வகைகளில் பாதிப்படைந்துள்ளனர். சுமார் 40000 மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்புக் கூடாரங்களில் தங்கும் நிலை. ஆகஸ்ட் மாத மத்தியில் ஆப்பிரிக்கக் கரையில் உருவாகிய வெப்ப மண்டலம், சூறாவளிப் புயலாக உருமாறி ஆகஸ்ட் 25 ஆம் தேதி டெக்ஸாஸில் உள்ள அரன்சாஸ் துறைமுகத்தைத் தாக்கிய போது, […]
மின்னியோப்பா நீர்வீழ்ச்சியும் மீன் குழம்பும்
கோடை வாரயிறுதி என்றால் இயற்கை விரும்பிகளுக்கு மின்னசோட்டாவில் ஜாலி தான். இருக்கவே இருக்கிறது, ஊர் முழுக்க ஏரிகள். அது போரடித்து விட்டால், அக்கம்பக்கம் உள்ள ஸ்டேட் பார்க், அருவி, நடைப்பயிற்சிப் பாதைகள் என உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. அப்படி ட்வின் சிட்டிஸில் இருந்து ஒன்றரை மணி நேரத்திற்குள் சென்று வரக் கூடிய தொலைவில் உள்ளது மின்னியோப்பா நீர்வீழ்ச்சி (Minneopa Falls). மின்னியோப்பா ஓடை, இங்கு இரு இடங்களில் நீர் வீழ்ச்சியாக விழுகிறது. அதுவே, மின்னியோப்பா என்ற காரணப் பெயராக […]
கொலு பொம்மை
”நீ ஆத்தப் பாத்துக்கோடா… நான் ஒரு இரண்டாத்துக்குப் போய், குங்குமம் வாங்கிண்டு வந்துடறேன்”…. அம்மா சொல்லிக் கொண்டு புறப்படத் தயாரானாள். “அம்மா, என்னம்மா.. என்னப்போய்… இது பொம்மனாட்டிகள் சமாச்சாரம்..யாராவது வந்தான்னாக்கா நான் என்ன பண்ணுவேன்??” என்று இழுத்த கணேஷைப் பார்த்து, “நான் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவேண்டா.. அதுக்குள்ள யாரும் வரமாட்டா.. அப்டியே வந்தாலும் உக்கார வை, நான் வந்துடறேண்டா” சொல்லிக்கொண்டே அவன் பதிலுக்கும் காத்திராமல் வெளியேறினாள் மங்களம் மாமி. ”அம்மா, அம்மா” என்று தான் கத்திக் கொண்டிருப்பதைக் […]