இராஜேஷ் கோவிந்தராஜ்
இராஜேஷ் கோவிந்தராஜ்'s Latest Posts
ஹோலி 2019

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத பௌர்ணமி தினத்தில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும், மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதைக் குறிக்கோளாக் கொண்டும் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகையன்று ஒருவரை ஒருவர் சந்தித்து, வாழ்த்துக்களைத் தெரிவித்து, கலர்ப் பொடிகளைத் தூவியும், வண்ண நீரைப் பீய்ச்சி அடித்தும், திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இந்தப் பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம். வட மாநிலங்களில் இந்தப் பண்டிகையை வண்ண மயமாக, மிகவும் விமரிசையாக் […]
கயமைக்குக் கல்லடி

கடவுளரைப் பழித்திடும் கருங்காலிக் கூட்டமது கண்ணியம் இன்றியே குரைப்பதும் தொடர்ந்திடுது கைகளில் ஒலிப்பெருக்கி கைதட்டச் சிறுகூட்டம் கண்ணனின் லீலைகளைக் காலித்தனமாய்ப் பேசியது! கருத்துத் தெளிவாய்க் கைகுவித்துக் கேட்டிட்டால் கருணை பலகொண்டு கனிவாய் விளக்கிட கடுந்தவம் புரிந்து கைங்கரியம் பலசெய்த கடவுள்நிகர்ப் பெரியோர் கண்டம் முழுதுமுண்டு!! கலகம் விளைவித்தால் கல்லா நிறையுமென்றும் கண்மூடித் தாக்கிட்டால் கனகம் கிடைக்குமென்றும் கடவுளரை ஏசிட்டால் கணக்கின்றிக் கொட்டுமென்றும் காசொன்றே குறிக்கோளான கயவர்களை நிராகரிப்போம்! கயவான சொல்லதற்குக் கருத்தாய் மறுப்புண்டோ கதிகலங்கி நின்று கண்ணீர்விடும் […]