சரவணகுமரன் காசிலிங்கம்
சரவணகுமரன் காசிலிங்கம்'s Latest Posts
பனிப்பூக்கள் அகவை 13

உலகத் தாய்மொழி தினமான இன்று நமது பனிப்பூக்கள் சஞ்சிகைக்கு 13 அகவையாகிறது. வாசகர்கள் அனைவருக்கும் உலகத் தாய்மொழி தின வாழ்த்துகள். பனிப்பூக்கள் கடந்து வந்த பாதையை வெ.மதுசூதனன் அவர்கள் கவிதையாக எழுதி, வாசித்த காணொலியை இங்கு காணலாம். எமது பயணத்தில் உறுதுணையாக இருக்கும் வாசகர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் அனைவருக்கும் எங்களது உளமார்ந்த நன்றிகள்.
நவீனத் தமிழ் மேடை நாடக இயக்குனர் முனைவர் திரு. ராஜு நேர்காணல்

சமீபத்தில் மினசோட்டா வந்திருந்த நவீனத் தமிழ் மேடை நாடக உலகின் மூத்த இயக்குனர், முனைவர் திரு. ராஜு ராஜப்பன் அவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நேர்காணலில் அவரது நீண்ட நெடிய மேடை நாடக அனுபவம் மற்றும் திரைப்படங்களில் நடித்த அனுபவம் குறித்து கேட்டு தெரிந்து கொள்ள முடிந்தது. நேர்காணலின் முதல் பகுதி பேட்டி எடுத்தவர் – சரவணகுமரன் ஒளிப்படக்கலைஞர் – ராஜேஷ் கோவிந்தராஜ்
தமிழ் கலைகளைக் காக்கும் மினசோட்டா – திரு. பாவேந்தன் ராஜா

பன்முகத் தமிழ் மரபு கலை வித்தகர் திரு. பாவேந்தன் ராஜா பேட்டி பரதம், கரகம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறை, சிலம்பம் எனத் தமிழ் மரபு கலைகள் பலவற்றிலும் தேர்ச்சி பெற்று, ஆய்வுகள் செய்து, மாணவர்களுக்குக் கற்று கொடுத்து வரும் திரு. பாவேந்தன் ராஜா அவர்களுடன் ஓர் இனிய உரையாடல்.
கலைக்கு மயங்காதவர் மனிதரே அல்ல!! – வேலு ஆசான்

பறை கலைஞர் மற்றும் ஆசிரியர் திரு. வேலு ஆசான் அவர்களுடனான உரையாடலின் இப்பகுதியில் திரைத்துறையில் அவருக்குக் கிடைத்த வாய்ப்புகள் குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். இந்த உரையாடலின் காணொலியை இங்கு காணலாம்.
பறை கலைஞர் வேலு ஆசான் பேட்டி

சமீபத்தில் தமிழ்நாட்டில் இருந்து மினசோட்டா வந்திருந்த பறை கலைஞர் திரு. வேலு ஆசான் அவர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பறை கலைஞராகவும், பறை ஆசிரியராகவும் பல நாடுகளுக்கு சென்று வரும் அவருடன் பறை குறித்தும், அவருடைய பிற அனுபவங்கள் குறித்தும் இந்த உரையாடலில் பேசினோம். இந்த உரையாடலின் முதல் பகுதியை இங்கு காணலாம்.
விநாயகர் சதுர்த்தி | உரையாடல்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் குறித்தும், பண்டிகை குறித்தும் திரு. மதுசூதனன், திரு. சரவணகுமரன் அவர்கள் உரையாடிய பாகம்.
டி.எம்.எஸ். 100 – எஸ்.எம்.சுப்பையா முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை

நூற்றாண்டு பிறந்தநாளைத் தொடும் பாடகர் திலகம் திரு. டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் கலை வாழ்வு பயணத்தை நினைவுகூறும் ஒரு கலந்துரையாடல். இந்தப் பகுதியில் டி.எம்.எஸ். அவர்களின் ஆரம்பக் கால வாழ்வு குறித்தும், திரையுலகில் அவர் பணியாற்றிய பல்வேறு இசையமைப்பாளர்கள் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. உரையாடியவர்கள் – ரவிக்குமார், மதுசூதனன், செந்தில்குமார், சரவணகுமரன்.
25 ஆண்டுக் கால யுவனிசை

தமிழ் திரையுலகில் 25 ஆண்டுக் காலமாக இசையமைத்து வரும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்களின் நீண்ட நெடிய இசை பயணம் குறித்த ஒரு விரிவான இசை அலசல்.
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்

இன்று பிறந்தநாள் காணும் திரைப்பட இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களைப் பற்றிய, அவருடைய படங்கள், படத்தின் இசை மற்றும் பாடல்கள் குறித்த ஒரு உரையாடல். உரையாடியவர்கள் – செந்தில் & சரவணன். பிறந்தநாள் வாழ்த்துகள், கௌதம் வாசுதேவ் மேனன்.
பத்தாவது ஆண்டில் பனிப்பூக்கள்

பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பனிப்பூக்களின் பயணம் குறித்த ஒரு உரையாடல். உரையாடியவர்கள் – மதுசூதனன், ரவிக்குமார், யோகி தொகுப்பு – சரவணகுமரன் பயணம் குறித்த சிறு காணொலி.