கட்டுரை
மினசோட்டா ரயில் சுற்றுலா
![மினசோட்டா ரயில் சுற்றுலா மினசோட்டா ரயில் சுற்றுலா](https://www.panippookkal.com/ithazh/wp-content/uploads/2021/09/Oscealo-Train-Ride-AUG2021-11_620x413-240x180.jpg)
உள்ளூர் பயணங்களைத் தவிர்த்துவிட்டு பார்த்தால், ரயிலில் பயணம் என்பது அமெரிக்காவில் அரிதான விஷயம். கிட்டத்தட்ட அதே அளவு கட்டணத்திலோ, அல்லது சிறிது அதிகம் கொடுத்தாலோ, விமானப்பயணத்தில் விரைவாக எந்த இடத்திற்குச் சென்றுவிடலாம் என்பதால் வெளியூர் பயணங்களுக்குப் பொதுவாக ரயிலில் செல்ல பொதுமக்கள் விருப்பப்பட மாட்டார்கள். ரயிலில் செல்ல வேண்டும் என்பது தான் நோக்கமாக இருந்தாலொழிய, ரயிலில் செல்வது என்பது நமது திட்டத்தில் இடம் பெறாது. இதனால் அமெரிக்காவில் வளரும் குழந்தைகளுக்கு ரயில் பயணம் என்பது பரிச்சயமாயிருக்காது. அவ்வப்போது […]
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது…
![ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது… ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது…](https://www.panippookkal.com/ithazh/wp-content/uploads/2021/08/pegasys_spyware-240x180.jpg)
கடந்த சில நாட்களாக ஊடகங்களில் அதிகமாக அடிபட்ட சொல், ‘பெகாசஸ்’. 2012 ஆம் ஆண்டு சென்னையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்துக்கான அலங்கார வளைவு உருவாக்கப்பட்ட சமயத்தில் எதிர்க்கட்சியினர் அந்த வளைவு இரட்டை இலைபோல உள்ளது என்று ஆட்சேபிக்க, அப்போதைய அதிமுக அரசு, அது பறக்கும் குதிரையான ‘பெகாசஸின்’ இறக்கைகள் என்று ‘விளக்கம்’ தந்தபோது கேட்ட சொல். அதற்கு பின் அந்தச் சொல்லைக் கேட்க / உச்சரிக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது. ஆனால் இப்போது தமிழ்நாடு மட்டுமல்லாமல், உலகமெங்கும் உச்சரிக்கப்படும் […]
அலுவலகம் திரும்பல்
![அலுவலகம் திரும்பல் அலுவலகம் திரும்பல்](https://www.panippookkal.com/ithazh/wp-content/uploads/2021/08/pexels-thirdman-5684642-240x180.jpg)
சென்ற வருடம் மார்ச் மாதம், பல அலுவலகங்கள் மூடப்பட்டுப் பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்கத் தொடங்கினார்கள். இதோ ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டன. சில அலுவலகங்கள் முழுமையாக மீண்டும் திறந்துவிட்டன. சில அலுவலகங்களில், வாரத்தில் சில நாட்கள் பணியாளர்களை அலுவலகத்திற்கு வரச் சொல்கிறார்கள். பல அலுவலகங்கள் வரும் செப்டம்பர் மாதம் முதல் முழுமையாக அலுவலகத்திலிருந்து செயல்பட இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு. சில அலுவலகங்கள் அலுவலகங்களை மூடிவிட்டு முழுமையாகப் பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்க வைக்கப் போகிறார்களாம். மினியாப்பொலிஸ்-செயிண்ட் […]
ஒற்றைக் கட்சி – ஒற்றை ஆட்சி
![ஒற்றைக் கட்சி – ஒற்றை ஆட்சி ஒற்றைக் கட்சி – ஒற்றை ஆட்சி](https://www.panippookkal.com/ithazh/wp-content/uploads/2021/07/hong-kong-4639375_1280-240x180.jpg)
பண்டைய காலங்களில் கிழக்காசியப் பகுதியான சீனா, நாகரிகமடைந்த, பொருளாதாரத்தில் ‘பெருஞ்சக்தி’ பெற்ற நாடாக விளங்கியது. சியா வம்சம் தொடங்கி, வழிவழியாக வந்த சீன அரசகுல மன்னர்கள் கடற்பயனங்கள் மேற்கொண்டு, பல பகுதிகளை தங்கள் ஆளுமையின் கீழ் கொண்டுவந்தனர். திசைகாட்டி, காகிதம், அச்சுக்கலை என பலவற்றை உருவாக்கிய பெருமையும் சீனர்களுக்கே உண்டு. சீனாவுடன், அதன் அண்டை நாடான இந்தியாவின் வளங்களும் இணைந்து உலக வர்த்தகச் சந்தையின் மையமாக விளங்கியது இந்த ஆசியப்பகுதி. மன்னராட்சி பதினெட்டாம் நூற்றாண்டு இறுதியில் அமெரிக்கா […]
மெய்நிகர் செலாவணி
![மெய்நிகர் செலாவணி மெய்நிகர் செலாவணி](https://www.panippookkal.com/ithazh/wp-content/uploads/2021/07/mey-nihar-selaavani_600x600-240x180.jpg)
உலகப் பொருளாதாரத்தை நகர்த்திச் செல்லும் ‘கரென்சி’ எனும் செலாவணி பண்டைய காலந்தொட்டு பல மாற்றங்களைக் கண்டுவந்துள்ளது. பண்டமாற்று முறை, தோல் நாணயங்கள், உலோக நாணயம், காகித பத்திரங்கள், நோட்டுகள், காசோலைகள் என பல்வேறு வகைகளில் செலாவணி, வர்த்தகத்தை இயக்கி வந்தது. இந்த வகை செலாவணிகள் யாவும், தருபவர்-பெறுபவர் இருவராலும் தொட்டு உணரத்தக்க வடிவில், புலப்படும் உருப்படியாக இருந்து வந்தன. நவீன உலகின் அசுரத்தனமான தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்காலத்தில் செலாவணி, ‘டிஜிட்டல்’ எனப்படும் எண்ணியல் அல்லது இலக்கமுறை வடிவமெடுத்துள்ளது. […]
நம்பிக்கையெனும் சிறை
![நம்பிக்கையெனும் சிறை நம்பிக்கையெனும் சிறை](https://www.panippookkal.com/ithazh/wp-content/uploads/2021/07/scientology-105897_1280-240x180.jpg)
“75 மில்லியன் வருடங்களுக்கு முன்பு, பிரபஞ்சத்தில் 76 கிரகங்கள் இருந்தன. அவற்றில் ஒரு கிரகத்தின் அரசனாக இருந்தவன் ஜீனு எனும் கொடுங்கோலன். தன் கிரகத்தில் கோடிக்கணக்கில் தீயவர்கள் அதிகரித்து வருவதைக் கண்ட ஜீனு, அவர்களை அழிக்க முற்பட்டான். தீட்டன் என அழைக்கப்பட்ட அவர்கள் அனைவரையும் DC-8 போன்ற விமானங்களில் ஏற்றி பூமிக்கு அனுப்பி, பல்லாயிரம் எரிமலைகளுக்கு அடியில் அவர்களைப் புதைத்துவிட்டான். பின்னர் அந்த எரிமலைகள் மீது அணுகுண்டுகளை வீசி வெடிக்கச் செய்தான். அப்பொழுது தீட்டன்களின் உடல்கள் வெடித்து […]
காட்டுத்தீயின் வடு
![காட்டுத்தீயின் வடு காட்டுத்தீயின் வடு](https://www.panippookkal.com/ithazh/wp-content/uploads/2021/07/Hinckley-Fire-Museum-JUN2021-09_620x465-240x180.jpg)
சமீபத்தில் மினசோட்டாவின் வடக்கே உள்ள வனப்பகுதிக்குள் சென்று திரும்பி கொண்டிருந்தபோது, மழை நன்றாகப் பிடித்துக்கொள்ள, மழைக்கு ஒதுங்க இடம் தேடி, ஹிங்க்லே (Hinckley) என்ற ஊரில் உள்ள ஃபயர் மியூசியத்திற்குள் நுழைந்தோம். ஃபயர் மியூசியம் என்றவுடன் முதலில் ஏதோ தீயணைப்பு நிலையம் பற்றிய மியூசியம் என்று தான் நினைத்தேன். பிறகு அங்குச் சென்றபின்பு தான் தெரிந்தது, 125 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊரைச் சூறையாடி சென்ற காட்டுத்தீயின் நினைவுகளைப் பதிவு செய்து வைத்திருக்கும் காலப் பெட்டகம் என்று. […]
அதிகாலையில் பூமியில் ஒரு சொர்க்கம்….
![அதிகாலையில் பூமியில் ஒரு சொர்க்கம்…. அதிகாலையில் பூமியில் ஒரு சொர்க்கம்….](https://www.panippookkal.com/ithazh/wp-content/uploads/2021/07/walk-445272_1280-240x180.jpg)
அதிகாலையில் நடைப்பயிற்சிக்காக சென்ற போது ஏற்பட்ட ஒரு ஆனந்தமான அனுபவம். நடக்க ஆரம்பித்ததும், காற்று இதமாய்த் தழுவி உற்சாகப்படுத்தியது. அவ்வளவாக மனித நடமாட்டமோ, வண்டிகளின் சத்தமோ இல்லாததால், சின்னஞ்சிறிய உயிர்களின் ஓசைகளைக் கூட கேட்க முடிந்தது. விதவிதமான பறவைகளின் வித்தியாசமான ஒலிகள் ஆச்சரியப்படுத்தியது. உற்றுக் கவனித்ததில் அவைகளுக்குள் ஏதோ தகவல் பரிமாற்றம் நடப்பது போல் தோன்றியது. தலையிலும், வாலிலும் மட்டும் சிவப்பு நிறத்தைக் கொண்ட ஒரு கருங்குருவியின் கூவலுக்கு, சில விநாடிகள் கழித்து, அதே போன்று […]
2021 உழவர் சந்தை
![2021 உழவர் சந்தை 2021 உழவர் சந்தை](https://www.panippookkal.com/ithazh/wp-content/uploads/2021/06/FarmersMarket2021_600x600-240x180.jpg)
மீண்டும் கோடைக்கால உழவர் சந்தை மினசோட்டாவில் தொடங்கிவிட்டது. உள்ளூரில் விளைந்த காய்கறிகள், பழங்கள், செடிகள் வாங்க பல நகரங்களிலும் இச்சந்தைகள் திறக்கப்பட்டுள்ளன. இதோ உங்கள் அருகாமையில் உள்ள உள்ளூர் விவசாயச் சந்தைகள் கூடுமிடம், நாள், நேரம் குறித்த பட்டியல். நகரம் நாள் நேரம் இடம் Bloomington சனி 8-1 Bloomington Civic Center Burnsville வியாழன் 11:30-4:30 Mary, Mother of the Church/3333 Cliff Rd Chanhassen சனி 9-1 City Center Park Hopkins […]
கதை சொல்லும் ஓவியங்கள்
![கதை சொல்லும் ஓவியங்கள் கதை சொல்லும் ஓவியங்கள்](https://www.panippookkal.com/ithazh/wp-content/uploads/2021/06/elayaraja-swaminathan-paintings-wooarts-com-07-240x180.jpg)
© Copyright 2021 https://wooarts.com/elayaraja-swaminathan/ இளையராஜா சுவாமிநாதன், இந்தியாவில் யதார்த்த பாணி உருவப் பட ஓவியங்களில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். ஓவியங்களின் உணர்வுகளை ஓளிகீற்றுகளால் வெளிக் கொணர்ந்து உயிரூட்டியவர்; தமிழ்நாட்டு கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில் அமைந்த இவரது ஓவியங்களைப் பார்ப்பவர்கள் இது புகைப்படமா, ஓவியமா எனக் குழம்பும் வண்ணம் மிகத் தத்ரூபமான படைப்புகளை வழங்கியவர் – உலகரங்கில் பாராட்டுகளைப் பெற்று தனக்கென ரசிகர்களை உருவாக்கிக் கொண்ட இந்தக் கலைஞன் தனது 43 […]