\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கட்டுரை

கம்பனடிப்பொடி

கம்பனடிப்பொடி

கம்பன்ன்ன்ன்ன் வாஆஆஆஆஆஅழ்க………. கம்பன்ன்ன்ன்ன் புகழ் வாஆஆஆஆஆஆழ்க…… கன்னித் தமிழ் வாஆஆஆஆஆஆழ்ழ்க……… தென் தமிழகத்தில், குறிப்பாகச் செட்டிநாட்டு ஊர்களில், பிறந்த நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேற்சொன்ன பாட்டும், அது பாடப்படும் ராகமும் காதுக்குள் உடனடியாக ரீங்காரமிடத் தொடங்கும். அந்த ரீங்காரத்துடன் கூடவே, சட்டையணியாத மார்புடன் ஸ்படிக மணிமாலை, மூக்குக் கண்ணாடி, நெற்றி நிறைய விபூதி அணிந்த வழுக்கைத் தலையுடன் சாமுத்ரிகா லக்‌ஷணம் நிரம்பப் பெற்ற அந்தக் கண்டிப்பு முகம் கண்களுக்குள் தோன்றும். அந்த முகத்துக்குச் சொந்தக்காரர் கம்பனடிப்பொடி என […]

Continue Reading »

நான்மணிக்கடிகை காட்டும் நீர் மேலாண்மை

நான்மணிக்கடிகை  காட்டும்  நீர்  மேலாண்மை

உலக வரலாற்றினை நோக்குமிடத்து, தமிழரின் வரலாறும் பண்பாடும் தனித்துவம் வாய்ந்தது. மனிதகுல நாகரிக வளர்ச்சிக்கும் இன்றைய அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் முன்னோடிகள் தமிழர்களே! இதனை நம் பழந்தமிழ் இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. இவ்விலக்கியங்கள் மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய அறத்தையும் நீதியையும் எடுத்துரைப்பதோடு, அவன் உயிர் வாழ்வதற்குரிய அடிப்படை ஆதாரமாகிய நீர் சேகரிப்பின் இன்றியமையாமையையும் கூறுகின்றன. அவ்வகையில், நீதி இலக்கியமென்று போற்றப்படும் நான்மணிக்கடிகை நீர் சேகரிப்பின் மகத்துவத்தையும் அதன் அவசியத்தையும் முன் வைக்கிறது. இதனை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. […]

Continue Reading »

விண்வெளியில் ஒரு அமெரிக்கச் சாதனை

விண்வெளியில் ஒரு அமெரிக்கச் சாதனை

வருகிற புதன்கிழமை மே 27 ஆம் தேதியன்று, சாதனை புரிவதற்கு, அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவும் (NASA), தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸும் (SpaceX) தயாராகி வருகின்றன. 9 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவிலிருந்து முதல்முறையாக விண்வெளிக்கு மனிதர்களைக் கொண்டு செல்லும் க்ரு ட்ராகன் (Crew Dragon) சீறிக்கொண்டு கிளம்ப இருக்கிறது. வரும் புதன் மாலை 4:33 மணிக்கு இரு விண்வெளி வீரர்கள், ராபர்ட் மற்றும் டக்ளஸ் இருவரையும் ப்ளோரிடா மாகாணத்தில் இருக்கும் நாசா விண்வெளி நிலையத்திலிருந்து சர்வதேச […]

Continue Reading »

வளரும் வணிகங்கள்

வளரும் வணிகங்கள்

உலகெங்கும் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வரும் இக்காலகட்டத்தில் சில வணிகங்கள் பெரிதும் வளர்ந்து வருகின்றன. கொரோனாவினால் பலவகைப் பிரச்சினைகள் உருவாகி, பல வணிகங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளானாலும், பல வணிகங்களுக்குப் புதுப் பிறப்பாக இக்காலகட்டம் அமைந்துள்ளதையும் காணமுடிகிறது. மக்களின் முன்னுரிமையில் உருவாகியுள்ள மாற்றம், இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. பல நாடுகள் லாக்-டவுன் எனப்படும் ஊரடங்கு முறையில் பல்வேறு நிலைகளில் உள்ளன. பொதுவாக, மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது. பயணங்கள் குறைந்துள்ளன. வீட்டில் இருந்தே பல்வேறு பணிகளைச் செய்யத் […]

Continue Reading »

நாகரீகம்..!!!

நாகரீகம்..!!!

“இந்தியாவிடம் மருந்து அனுப்ப வேண்டுமாய்க் கேட்டுள்ளோம். அவர்கள் தரவில்லை என்றால் பரவாயில்லை .. ஆனால் அதற்குத் தக்க பதிலடி கொடுப்போம்.. There may be a retaliation, why wouldn’t there be?”  – உலகத்தின் வளர்ந்த நாடான அமெரிக்காவின் அதிபர் மேதகு டிரம்ப் அவர்கள். — ஆகா என்ன ஒரு நாகரீகம், நட்புணர்வு, தலைவனுக்கான பேச்சு பாருங்கள். ஊரில் பொறுக்கித் தனம் செய்து கொண்டு திரியும் மூன்றாந்தர குடிமகனைப் போல பேசியுள்ளார் .. இந்தப் பைத்தியக்காரப் […]

Continue Reading »

அமெரிக்காவின் முறையின்மையால் வந்த முறிவு – Systematic Breakdown

அமெரிக்காவின் முறையின்மையால் வந்த முறிவு – Systematic Breakdown

பொதுநலம் பொதுவாகப் பார்க்காத பாரிய அமெரிக்கப் பொருளாதாரம் பற்றி இன்று அலசுவோம். இந்த நூற்றாண்டின் முதல் மூன்று முதலாளித்துவ சிந்தனை பொருளாதார வீழ்ச்சிகளின் அடிப்படைகளில் ஒன்று தான், பொதுநலம் விட்டு இலாப தாரிகள் சிறு நலம் பார்த்து ஏமாந்தமை எனலாம். Dotcom Crash – 2000-2001 Mortgage Backed Security Crash – 2008-2019 Corona Crash -2020-2021 நாம் மேலே உள்ள யாவற்றிற்கும் பிரத்தியோகமான பெயர்களைத் தருகிறோம், காரணம் எமது அடிப்படை பொருளாதாரக் கையாளல்கள், மற்றும் […]

Continue Reading »

உலகைப் புரட்டிப் போட்ட கொரோனா

உலகைப் புரட்டிப் போட்ட கொரோனா

கொரோனா வைரஸ் குறித்த நமது முந்தைய கட்டுரை (கொடூர கொரோனா) வெளிவந்து இரு மாதங்கள் ஆகின்றன. அதற்குள் எவ்வளவு மாற்றங்கள்? அச்சமயம் அமெரிக்காவில் 8 பேருக்குத் தான் இந்தப் பாதிப்பு இருந்தது. இன்றைய நிலையில் இரண்டு லட்சம் என்ற எண்ணிக்கையை நோக்கி மீட்டர் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இடையில் ஈரான், இத்தாலி எனப் பல நாடுகள் ஆயிரக்கணக்கான மக்களை இழந்திருக்கின்றன. இந்தியா இழப்புக் கணக்கைத் தொடங்கி, மொத்த நாடும் வீட்டிற்குள் முடங்க முயன்றுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நேற்றைய செய்தி […]

Continue Reading »

உயிலுடன் வாழ்வோம்

உயிலுடன் வாழ்வோம்

ஊர் இருக்கிற நிலைமையில யாருக்கு எப்ப உயிரு போகும்’ன்னு தெரியல. இந்த நிலவரத்துலயாவது நாம உயிலு பத்தி யோசிக்கணும் இல்ல? எல்லாருக்கும் உயில்’ன்னா என்ன’ன்னு தெரிஞ்சிருக்கும். ஆனா, எல்லோரும் அது நமக்குச் சம்பந்தம் இல்லாத விஷயம்’ன்னே டீல் பண்ணியிருப்போம். கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து, மரணப் படுக்கையில் இருக்கிற வயசானவங்களுக்குத் தேவையான விஷயம் அது அப்படி’ன்னு தான் நம்ம நினைப்பு இருக்கும். உண்மை அப்படி இல்லை. உயில் பத்தி நாம எல்லோருமே தெரிஞ்சிக்கணும். ஏன்னா… உயில் இல்லாத நிலையில் […]

Continue Reading »

2020 மக்கட்தொகை கணக்கெடுப்பு

2020 மக்கட்தொகை கணக்கெடுப்பு

  நீங்கள் கடைதெருவுக்குச் சென்று அரிசி, பருப்பு, காய்கறி வாங்குகிறீர்கள் என்றாலே உங்கள் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்களது விருப்பம் என்னென்ன போன்றவை தெரிந்து, அதற்கேற்ப தான் நீங்கள் பொருட்கள் வாங்குவீர்கள். அந்தத் தேவைக்கேற்ப உங்களது உழைப்பு இருக்கும், சம்பாத்தியம் இருக்கும், செலவினங்கள் இருக்கும். இது போலவே, ஒரு நாட்டின் நிர்வாகமும் அந்த நாட்டு மக்கட்தொகையைப் பொறுத்தே அமையும். அதற்காக, அந்த நாட்டு மக்கள் குறித்த தகவல்கள் அந்நாட்டின் அரசிற்கு அவசியமாகிறது. அந்தத் தகவல்களைச் சேகரிக்கச் […]

Continue Reading »

அமெரிக்க அதிபர் தேர்தல் – 2020

அமெரிக்க அதிபர் தேர்தல் – 2020

‘தூங்கு மூஞ்சி ஜோ’, ‘குட்டி மைக்’, ‘கிறுக்கு பெர்னி’, ‘போக்கொஹாண்டஸ் வாரன்’, ‘பூட்டட்ஜீட்ஜ்’ – இவையெல்லாம் எதோ சிறுவர் காமிக் புத்தகங்களில் வரும் கதாபாத்திரங்கள் அல்ல. வல்லரசு நாடான அமெரிக்காவின், வருங்கால அதிபராக வர ஆசைப்படும், ஆசைப்பட்ட எதிர்க்கட்சியினருக்குத் தற்போதைய அதிபர் திருவாளர் ட்ரம்ப் வைத்த செல்லப் பெயர்கள். ‘பத்துப் பேர் ஒண்ணாச் சேந்து, ஒருத்தர எதுக்கறாங்கன்னா, அந்தப் பத்து பேர் பலசாலியா இல்ல அவங்க  எதிர்க்குற அந்த ஒருத்தர் பலசாலியான்னு நீங்களே முடிவு செஞ்சுக்கறளவுக்கு’ அமெரிக்க […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad