\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கட்டுரை

தன்னகங்காரம் Narcissism

தன்னகங்காரம் Narcissism

தமிழர் பண்டைய இதிகாசங்களிலிருந்து இன்று வரை முருகன் கோவில் வழிபாடுகளில்   தன்னகங்காரம் (தன் அகங்காரம்) அழித்தல் என்பது முக்கியமானதொன்றாகும். ஆயினும் நடைமுறையில் நமது சமூகம், இதர அமெரிக்க, உலக சமூகங்கள் போன்று சுய நலத்தன்மை, தற்பெருமை போன்ற மாசுக்களால் மனநிலை மாறி நிற்பதைக் கடந்த முப்பது ஆண்டுகளில் அவதானிக்க முடிகிறது. இன்றைய பல நவீன அன்றாட விடயங்களிற்கு விடையாக அமைவது   எமது சான்றோர் எமக்குத் தெளிவாக வகுத்து தந்த கலாச்சாரம் எனலாம்.    குறிப்பாக முருகன் […]

Continue Reading »

சிங்கப்பூர் வாடிக்கையாளர் அமேசானை ஆதரிக்கவில்லை

சிங்கப்பூர் வாடிக்கையாளர் அமேசானை ஆதரிக்கவில்லை

மேல் நாடுகளில் வாழும் எம்மில் பலர் மின்னக பெரும் வர்த்தகம் என்றால் அமேசான் (Amazon), இ-பே (e-Bay) என்று சிந்திக்கும் போது, ஆசியா எவ்வளவு மாறியுள்ளது என்பதை அறியாதுள்ளோம். மேற்கில் பெரும் வெற்றி பெறும் அமேசான், கிழக்காசியாவில் சீன மின் வர்த்தகத் தாபனங்களை விட  பின்தங்கியுள்ளது. அமேசான் சென்ற ஆக்டோபர் 2019 கோலாகலமாக தனது வர்த்தகத்தை சிங்கப்பூரில் ஆரம்பித்தது. ஆயினும் அந்நாட்டின் வழமையான மின் வர்த்தக நுகர்வோர் அமேசானை வரவேற்கவில்லை. ஏறத்தாழ சென்ற இரண்டு வருடங்களாக ஆசியாவிலும் […]

Continue Reading »

பனிப்பூக்கள் Bouquet – தேங்க்ஸ் கிவிங்

பனிப்பூக்கள் Bouquet – தேங்க்ஸ் கிவிங்

தேங்க்ஸ் கிவிங் தினத்தை முன்னிட்டுக் கடைகளில் விற்பனை எப்படிக் கொட்டப் போகிறதோ தெரியாது. வரும் வாரம் சாலைகளில் பனி கொட்டப் போவது நிச்சயம் என்கிறார்கள். அதனால் தேங்க்ஸ் கிவிங் நிமித்தம் ஏற்படும் பயணங்களைக் கவனமாக முடிவு செய்யவும் என்று மினசோட்டா  போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதனால், எச்சரிக்கையுடன் பயணிக்கவும். டீல் பிடிக்கிறேன் என்று வேகமாகச் சென்று சில்லறையைச் சிதற விட்டுவிடாதீர்கள்!! — ஒவ்வொரு ஆண்டும் தேங்க்ஸ் கிவிங் விற்பனையில் இணையம் மூலம் நடக்கும் பரிவர்த்தனை கூடிக்கொண்டே செல்கிறது. […]

Continue Reading »

அங்கோர் வாட் – நூல் விமர்சனம்

அங்கோர் வாட் – நூல் விமர்சனம்

ஒரு பயண நூலைப் படித்தால், பயணம் சென்ற அனுபவம் கிடைக்க வேண்டும். அது போன்ற பயணம் செல்ல நம்மைத் தூண்ட வேண்டும். புத்தகத்தில் பார்த்த இடத்தை, நேரில் பார்த்தாற்போன்ற ஒரு திருப்தி கிடைக்க வேண்டும். இது அனைத்தும் திரு. பொன் மகாலிங்கம் எழுதிய ‘அங்கோர் வாட்’ புத்தகம் படித்த போது கிடைத்தது. முதலில் நூலாசிரியரைப் பற்றிச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம். திரு. பொன் மகாலிங்கம் அவர்கள் சிங்கப்பூரில் ஊடகத்துறையில் பணிபுரிகிறார். பயணங்களில், சிற்பக்கலையில் பெரிதும் ஆர்வமுடையவர் என்பது அவரது […]

Continue Reading »

பச்சையட்டைப் போட்டி

பச்சையட்டைப் போட்டி

தற்காலிக அடிப்படையில் பணி நிமித்தம் நுழைவுச்சான்று (H1 VISA) பெற்ற ஆசியர்களுக்கு  அமெரிக்கக் குடிவரவுச் சட்டம் ஏற்கனவே மிகத் தலையிடித் தரும் விடயம். 2019 ஆம் கொணரப்பட்ட நிரந்தர வதிவிட உரிமைத் திருத்தங்கள், அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியைக் கொண்டுவந்துள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட விண்ணப்ப பரிசீலனை தாமதங்கள் பலரை, குறிப்பாக அரை மில்லியன் இந்தியர்களையும், பல நூறாயிரம் சீனர்களையும் பாதித்துள்ளன. நிரந்தர வதிவிட விண்ணப்ப பின்தங்கல்களை நிவர்த்தி செய்ய பல்வேறு அமெரிக்கத் தொழில்நுட்ப […]

Continue Reading »

மினசோட்டாவினுள் கம்போடியா

மினசோட்டாவினுள் கம்போடியா

உலகின் மிகப் பெரிய இந்து கோவில் கம்போடியாவில் இருக்கிறது என்பார்கள். வைணவக் கோவிலாகக் கட்டப்பட்ட அந்தக் கோவில், பிறகு பௌத்தக் கோவிலாக மாற்றப்பட்டது. சரி, இப்ப அமெரிக்காவிற்கு வரலாம். கம்போடியர்களின் மிகப் பெரிய பௌத்தக் கோவில் வட அமெரிக்காவில் எங்கிருக்கிறது தெரியுமா? மினசோட்டாவில் தான். செயிண்ட் பாலில் (St. Paul) இருந்து தெற்கே 30 மைல்கள் தொலைவில் ஹாம்டன் (Hampton) என்ற பகுதியில் சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. எழுபதுகளின் இறுதியில் கம்போடியாவில் […]

Continue Reading »

இருளில் இரகசிய ஏழில் ஆந்தைகள்

இருளில் இரகசிய ஏழில் ஆந்தைகள்

வட அமெரிக்காவில் இலையுதிர்காலம் படிப்படியாகப் பனிகாலத்தை நோக்கி நகர்கிறது. இதன் போது சூழலில் பல உயிரினங்களும் அம்பலமாகின்றன. இவற்றில் ஒரு வகைதான் ஆந்தைகள். வடஅமெரிக்காவில் குறிப்பாக மினசோட்டா, ஒன்ராரியோ நிலங்களில் எமக்கருகில் ஏறத்தாழ பத்து வகை ஆந்தைகள் வசித்து வருகின்றன. ஆந்தைகளை சிலர் மதித்துப் போற்றினாலும், விவரம் புரியாமல் அருவருப்புடன் பார்ப்பவர்களே அதிகம். அடர்ந்த வட அமெரிக்க ஊசிமரக் காட்டுப் பகுதிகளாக இருக்கட்டும், இல்லை நகர்ப்புறச் சந்து பொந்துகளாக இருக்கட்டும் தமது அயலிற்கேறப்ப அமைந்து வாழும் தன்மையுள்ள […]

Continue Reading »

ரிச் ஃபீல்ட் நகர பூர்வீக மக்கள் தினம்

ரிச் ஃபீல்ட் நகர பூர்வீக மக்கள் தினம்

மினசோட்டா மாநிலத்தினதும், பல்வேறு அமெரிக்க நகரங்களின் பூர்வீக வாசிகள் தினப் பிரகடனங்களையும் ஒட்டி,  ரிச் ஃபீல்ட் நகரமும் ஆக்டோபர் இரண்டாம் திங்களை, பூர்வீக மக்கள் தினமாக அறிவித்துள்ளத்து. ரிச் ஃபீல்ட் நகரமானது மினியாப்பொலிஸ் பெருநகரின் தென்புற எல்லையில் உள்ளது. அந்த அறிவிப்பானது ஆக்டோபர் 8, 2019 அதிகாரப்பூர்வ நகர சபைக்கூட்டத்தின் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்தப் பிரகடனத்தின் படி கொலம்பஸ் டே எனப்படும் தினம் அகற்றுப்பட்டு ஆக்டோபர் இரண்டாம் திங்கள் பூர்விக மக்கள் தினமாக கௌரவிக்கப்பட்டுக் கொண்டாடப்படும். இத்தினத்தில் […]

Continue Reading »

உத்திரகோசமங்கை – உலகின் முதல் சிவாலயம்

உத்திரகோசமங்கை – உலகின் முதல் சிவாலயம்

“இந்தக் கோவிலுக்குத் திட்டமிட்டெல்லாம் வர முடியாது. தற்செயலா வந்தா தான் உண்டு” என்று அந்தக் கோவிலின் அர்ச்சகர் சொன்னது போல் தான் எங்களது அந்தப் பயணமும் அமைந்திருந்தது. கோவில் -இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் திருக்கோவில். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நீண்டு செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் இராமநாதபுரம் பக்கம் உள்ளே பத்து கிலோமீட்டர் இறங்கிச் சென்றால், உயர்ந்த கோபுரங்கள் கொண்ட இந்தக் கோவிலைக் காணலாம். சிறிய ஊர் தான். அதற்குப் பெரிய கம்பீரத்தைக் […]

Continue Reading »

இம்பீச்மெண்ட்

இம்பீச்மெண்ட்

இரண்டு வாரங்களாக, அமெரிக்கத் தொலைகாட்சிகளிலும், ஊடகங்களிலும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட, பயன்படுத்தப்படும் சொல் ‘இம்பீச்மெண்ட்’. அமெரிக்க அதிபர் டானல்ட் ட்ரம்ப் ‘இம்பீச்’ செய்யப்படுவாரா என்ற கேள்வி  அனைத்துலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றால் அது மிகையில்லை. தன்னை இம்பீச் செய்தால் உலகப் பொருளாதாரம் வீழும்; உலக அரசியல் ஸ்தம்பிக்கும் என அவரே எச்சரித்துள்ளது எந்தளவு நிதர்சனம்? அப்படி என்ன செய்துவிட்டார் ட்ரம்ப்? கட்டுரைக்குள் செல்லும் முன்னர் “இம்பீச்மென்ட்” என்ற பதத்துக்குப் பொருளறிந்து கொள்வது அவசியம். அகராதிப்படி “இம்பீச்மென்ட்” […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad