கட்டுரை
இலங்கையில் சாதி, இன, வர்க்கப் பிரிவினைகளை ஒழித்தல்
மனித செழுமையையும் அமைதியான சமூகத்தையும் வளர்ப்பதற்கு இலங்கையில் சாதி, இனம் மற்றும் வர்க்கப் பிரிவினைகளை நீக்குவது மிகவும் முக்கியமானது. வெளிப்படையான பாகுபாட்டைக் குறைப்பதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருந்தாலும் , சமூக அடுக்குமுறையின் நுட்பமான வடிவங்கள் மக்களின் வாழ்க்கை மற்றும் வாய்ப்புகளைத் தொடர்ந்து பாதிக்கின்றன. இக்கட்டுரையானது, இலங்கையில் உள்ள இந்தப் பிரிவுகளின் தற்போதைய நிலை , அவற்றின் வரலாற்றுச் சூழலை ஆராய்வதோடு, சமத்துவம் மற்றும் இணக்கமான சமூகத்தை உருவாக்குவதற்கான உத்திகளை முன்வைக்கும். இலங்கையில் சாதி, இனம் […]
வேகமெடுக்கும் என்விடியா எக்ஸ்பிரஸ்
வந்தேறிகளின் பங்கு அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட பல தரவுகள் உள்ளன. சமீபத்தில் வெளிவந்திருந்த ஒரு புள்ளிவிபரத்தில் கூட, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வரவிருக்கும் மக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். இன்றைய தேதிக்கு உலகின் மிகப்பெரிய நிறுவனங்களான மைக்ரோசாப்ட் மற்றும் கூகிள் ஆகியவற்றின் தலைமை செயல் அதிகாரிகளாக இந்தியர்கள் இருக்கிறார்கள். மற்றொரு பெரிய நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் தந்தை […]
குத்தூசி மருத்துவம் (Acupuncture) மற்றும் அதன் நன்மைகள்: பக்கவாதத்திற்குப் பிந்தைய (Post stroke) மறுவாழ்வுக்கான கவனம்
குத்தூசி மருத்துவம்(Acupuncture) எனும் பண்டைய சீன மருத்துவ நடைமுறை, உடலில் குறிப்பிட்ட புள்ளிகளைத் தூண்டுவதன் மூலம் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முழுமையான சிகிச்சையானது உடலின் ஆற்றல் ஓட்டத்தை சமநிலைப்படுத்த குத்தூசி மருத்துவப் புள்ளிகள் அல்லது மெரிடியன்கள் எனப்படும் மூலோபாய இடங்களில் தோலில் நுண்ணிய ஊசிகளைச் செருகுவதை உள்ளடக்குகிறது. நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் பல்வேறு மருத்துவ நிலைகளில், குறிப்பாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வில், குத்தூசி மருத்துவத்தின் செயல்திறனை அதிகளவில் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தக் […]
தமிழ் அழகியல்
அழகியல் என்பது அழகு, கலை மற்றும் சுவை ஆகியவற்றைப் படிப்பதையும் நாம் இன்பமாக பாராட்டுவதையும் குறிக்கிறது. இது அழகின் இயல்பு, கலை வெளிப்பாடு மற்றும் பல்வேறு வடிவங்களில் அழகை உணர்ந்து ரசிக்கும் மனித திறன் ஆகியவற்றைக் கையாள்கிறது. அழகியல் பற்றிய சில விடயங்கள் அழகு, கலை மற்றும் சுவை ஆகியவற்றின் இயல்புடன் தொடர்புடைய தத்துவத்தின் ஒரு கிளையாகும். கலை, இயற்கை மற்றும் பிற பொருள்கள் அல்லது அனுபவங்களில் அழகைப் பற்றிய நமது கருத்து மற்றும் தீர்ப்புக்கு பங்களிக்கும் […]
ஒரு நல்ல வாழ்க்கையின் ஐந்து தூண்கள்
சிறந்த சுவிஸ் மனோதத்துவ ஆய்வாளர் கார்ல் ஜுங் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு வியக்கத்தக்க நடைமுறை வழிகாட்டியை விட்டுச் சென்றார். பிரபலமான உளவியல் உலகில், ஒரு மாபெரும் நபரின் வேலையைத் தவிர்ப்பது கடினம்: கார்ல் ஜுங், 60 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த சிக்மண்ட் ராய்டின் ஒரு காலத்தில் கூட்டாளி. உங்களுக்கு ஏதாவது சிக்கலானது இருப்பதாக நீங்கள் நினைத்தால், சுவிஸ் மனநல மருத்துவர் அந்த வார்த்தையை கண்டுபிடித்தார். நீங்கள் ஒரு வெளிப்போக்கு அல்லது உள்முக சிந்தனையாளரா? அதுவும் அவருடைய சிந்தனைகளே. […]
கலங்காதிரு மனமே!
“என்னிடம் என்ன தவறுள்ளது என்று எனக்குத் தெரியும், ஆனால் என்னைச் சுற்றியுள்ள யாரும் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. ஆதரவான கரங்கள் தேவைப்பட்டது. என் தலையில் நடக்கும் போராட்டத்தின் வேதனையையும் வலியையும் யாராவது புரிந்துகொள்வார்களா, உதவி செய்வார்களா என்று அழுததுண்டு. நான் கெட்டவள் இல்லை. எனது புதிய நிலைக்கு ஏற்ப என்னை சீராக்கிக்கொள்ள வேண்டுமென நினைத்தேன். அவநம்பிக்கை கொப்பளிக்க, கூர்மையான பற்கள் கொண்ட கத்தியுடனே எப்போதும் ஓடிக்கொண்டிருந்தேன்”. நம்மில் பெரும்பாலோனோர்க்குத் தெரிந்த மிகப் பிரபலமானவொருவர் […]
திரைக் கவிஞர்கள் பார்வையில் அழகு – 3
நமக்கு எது அழகாகத் தெரிகிறது? எது நமக்கு ஆனந்தத்தைத் தருகிறதோ அதைத்தான் அழகு என்கிறோம். நாம் திரும்பத் திரும்ப விரும்பிப் பார்க்கும்படியாக ஒன்று இருந்தால் அது அழகு என்று அர்த்தம். அதாவது, அழகு பார்வையில் மட்டுமே உள்ளதாக நினைக்கிறோம். கண்களின் வழியே நுகரப்படும் அனுபவம் இன்பமளித்தால் அதனை அழகு என வகைப்படுத்துகிறோம். ஆனால் அன்பு ஊற்றெடுக்கும் பட்சத்தில், புற ரூபத்தைக் கடந்த அழகை உணர்கிறோம். உலக அழகிகள் நிறைந்திருக்கும் மேடையில், அன்னை தெரசா வந்து நின்றால் மற்றவர்களைவிட […]
நானோ பிளாஸ்டிக் எனும் அசுரன்
சமீபத்தில் ‘நானோ பிளாஸ்டிக்குகள்’ மனித உடலுக்குள் நுழைந்திருப்பதைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. உண்ணும் உணவு, குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று வழியாக மனித உடலுக்குள் நுழையும் இவ்வகை மிக நுண்ணிய (மீநுண்) பிளாஸ்டிக் துகள்கள் செரிமானப் பாதை அல்லது நுரையீரலின் திசுக்கள் வழியாக இரத்த ஓட்டத்தில் கலந்து, உயிரணுக்களுக்கு தீங்கு உண்டாக்கும் செயற்கை இரசாயனங்களைப் பரப்புகின்றன என்று நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள். கொலம்பியா பல்கலை (நியு யார்க்) மற்றும் ரட்ஜர்ஸ் பல்கலை […]
சித்திரை வருடப் பிறப்பு
சூரியன் மேஷ இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு எனப்படும். தமிழில் சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் வரும் “ஏப்ரல்” மாதம் 14 ஆம் நாள் முதல் “மே” மாதம் 14 ஆம் நாள் வரை தமிழில் “சித்திரை” மாதமாகும். சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும் என்ற நம்பிக்கை காலங்காலமாக எம்மவரிடம் நிலவி வருவதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் […]
மனத்தை ஆண்ட லட்சுமி தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா (மார்ச் 2024)!
இரு நண்பர்கள் வலைச்செயலி மூலம் வெகு நாட்களுக்குப் பின்னர் உரையாடுகிறார்கள். தமிழகத்தில் ஒன்றாகப் படித்து, வேலை பார்த்துப் பின்னர் உலகத்தின் இரு வேறு பகுதிகளில் குடும்பத்துடன் வேரூன்றியவர்கள். பேச்சு அலுவலக வேலை, சினிமா, வீட்டுப் பராமரிப்பு முதலியவற்றைக் கடந்து குழந்தைகள், அவர்களுடைய படிப்பு ஆகியவற்றை நோக்கிச் செல்கிறது. “எல்லாம் நல்லாப் போயிட்டு இருக்கு, ஆனா, பசங்க மெதுவாத் தமிழை மறந்திடுவாங்களோனு தோணுது.” “ஏன், உங்க ஊர்ல தமிழ்ப் பள்ளியோ இல்ல தமிழ்ச் சங்கம் மாதிரி அமைப்புகளோ இல்லியா?” […]