\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கட்டுரை

தேனீ அறியாத தேன்

தேனீ அறியாத தேன்

அமெரிக்க ஊத்தப்பமான பேன் கேக்கில் (Pan Cake) தொட்டுக்கொள்ள அமெரிக்கர்கள் பயன்படுத்துவது மேப்பிள் சிரப் (Maple Syrup) எனப்படும் ஒரு தேன் போன்ற சமாச்சாரத்தை. சுவையாக, தேன் போன்ற தித்திப்புடன் இருக்கும். இது தேனீயிடம் இருந்து பிடுங்கிய தேன் இல்லை. மேப்பிள் என்ற மரத்திடமிருந்து எடுக்கும் தேன். குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் மேப்பிள் மரத்தைப் பற்றி அறிந்திருப்பார்கள். மிகவும் அழகாக இலைகளைக் கொண்ட மரம். கனடா நாட்டின் சின்னமாக, அதிகாரப்பூர்வ அரசாங்கச் சின்னமாக மட்டுமில்லாமல், கனடா நாட்டின் […]

Continue Reading »

ஸ்ரீதேவி – சிவகாசி மத்தாப்பூ

ஸ்ரீதேவி – சிவகாசி மத்தாப்பூ

சினிமாவிலும் சரி, தினசரி பேச்சு வழக்கிலும் சரி அழகுக்கு உதாரணமாக அனைவரும் சொல்வது, ஸ்ரீதேவியைத்தான். இது ஏதோ அவர் கதாநாயகியாக நடித்துவரும் காலத்தில் சொல்லப்பட்டது அல்ல. இப்போது வரை அதுதான் நிலை. அப்படி அழகின் இலக்கணமாய்த் திகழ்ந்தவர். 1963 இல் சிவகாசியில் பிறந்த ஸ்ரீதேவி, கடந்த வாரம் துபாய்க்கு ஒரு திருமணத்திற்குச் சென்ற இடத்தில் தன்னுடைய 54 ஆம் வயதில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று மரணமடைந்த செய்தி, அவருடைய ரசிகர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஸ்ரீதேவி […]

Continue Reading »

ஜிடிபிஆருக்கு தயாரா?

ஜிடிபிஆருக்கு தயாரா?

தகவல் தொழில்நுட்பம் பல்வேறு  காலக்கட்டங்களைத் தாண்டி வந்துள்ளது. எந்தளவுக்குப் பயன்களைத் தருகிறதோ, அதே சமயம் இன்னொரு பக்கம் பிரச்சினைகளையும் உருவாக்கி வருகிறது. இன்றைய காலத்தில் வேண்டியோ வேண்டாமலோ நம்மைக் குறித்த தகவல்களை இணையத்தில் பல்வேறு இடங்களில் பதிய வேண்டியுள்ளது. நாம் அறிந்தோ அறியாமலோ இந்தத் தகவல்கள் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படுகின்றன. இத்தகவல்கள் அனைத்தும் ஒருவருடைய அந்தரங்கம் சார்ந்தது மட்டும் அல்ல. அது ஒரு நிறுவனத்திற்குப் பொருள் ஈட்டும் பயனைத் தரும் நிலையில் இருப்பதால், அது அவருடைய தகவல் […]

Continue Reading »

சூப்பர் போல் லைவ்

சூப்பர் போல் லைவ்

மின்னியாபொலிஸில் ஃபிப்ரவரி 4ஆம் தேதியன்று சூப்பர் போல் ஃபுட்பால் இறுதிப் போட்டி டௌன்டவுனில் இருக்கும் யூ.எஸ். பேங்க் ஸ்டேடியத்தில் நடைபெறுவதையொட்டி, சூப்பர் போல் ரசிகர்களுக்காக டௌன்டவுன் நிக்கலட் மால் சாலையில் ஜனவரி 26 ஆம் தேதியிலிருந்து, தொடர்ந்து பத்து நாட்களுக்கு “சூப்பர் போல் லைவ்“ என்னும் கண் கவர் கொண்டாட்ட நிகழ்வை மினசோட்டா சூப்பர் போல் பொறுப்பு அமைப்பின் நடத்துகின்றனர். தினமும் இசை நிகழ்ச்சிகள், பனிச் சறுக்கு விளையாட்டுகள், ஜஸ் கட்டிச் சிலைகள், பல வகை உணவுகள் […]

Continue Reading »

சூப்பர் பவுல் ஜோரில் மினசோட்டா

சூப்பர் பவுல் ஜோரில் மினசோட்டா

“ட்வின் சிட்டீஸில்” கண்கூடாகத் தெரிகிறது. மைனஸ் டிகிரி குளிரால், ஒரு பக்கம் வைரஸ் ஜூரம் இன்னொரு புறம் சூப்பர் பவுல் எனப்படும் ஃபுட்பால் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஜுரம். ஃபிப்ரவரி நான்காம் தேதியன்று நடக்கவிருக்கும் ஃபைனல் போட்டிக்காக இப்பொழுதே திருவிழாக் கோலமாகி விட்டது மின்னியாபொலிஸ் நகரம். பேருதான் அமெரிக்கக் கால்பந்து. ஆனால், அந்தப் பந்தைத் தூக்கிப் போட்டு விளையாடுவது கைகளால். என்ன தான் ஓடுவதற்குக் கால்கள் பயன்படுகிறது என்றாலும் இதைக் கால்பந்து என்று அழைப்பது வாழையடி வாழையாக அமெரிக்காவில் […]

Continue Reading »

2018 – நுகர்வோர் நம்பிக்கையும் சில்லறை வர்த்தகமும்

2018 – நுகர்வோர் நம்பிக்கையும் சில்லறை வர்த்தகமும்

அண்மையில் வெளியான அறிக்கை ஒன்றின்படி , அமெரிக்க விடுமுறைக் கால விற்பனை, சென்ற ஆண்டைக் காட்டிலும் 4.9 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு, சென்ற ஆண்டின் “வருடாந்திர வளர்ச்சி” (Year over year sales) கணிசமாக உயர்ந்துள்ளது.  ‘ஆ !! சூப்பர், இனிமே பொருளாதாரப் பிரச்சனை எதுவுமில்லை’ என நினைத்து மகிழ்ந்து சுயநினைவுக்கு வருவதற்குள் ‘பொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்த வளர்ச்சியை விட இது சற்றுக் குறைவு.’  என்று இன்னொரு அறிக்கை வந்து விழுந்தது. அதைப் […]

Continue Reading »

இலங்கையில் தைப் பொங்கல்

இலங்கையில் தைப் பொங்கல்

தைப் பொங்கல் என்பது தமிழர்களின் பெருவிழா என்றே பொதுவாக அர்த்தப்படுத்தப்பட்டாலும் சிறப்பாக இவ்விழா விவசாயத்தோடும் விவசாயிகளோடும் தொடர்புள்ள ஒரு பண்டிகையாகவே ஈழத்து தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. விவசாயத்தை மையப்படுத்திய பண்டிகையாக தைப் பொங்கல் அடையாளப்படுத்தப் பட்டாலும் சர்வதேச ரீதியாகவோ அல்லது இலங்கை, இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலோ தைப்பொங்கல் என்பது விவசாயம் சார்ந்த ஒரு பொது விழாவாகக் கொண்டாடப்படுவதில்லை. சங்க இலக்கிய காலத்தில் இருந்தே தைப்பொங்கல் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது. மழைக்கு அதிபதியாகிய இந்திரனைக் குறிக்கும் […]

Continue Reading »

குளிர் படுத்தும் பாடு

குளிர் படுத்தும் பாடு

இடம் – மின்னியாபொலிஸ் சென்ற வருடம் டிசம்பர் ஆரம்பத்தில் மக்கள் ஜாகிங் போய்க் கொண்டிருந்ததைக் கண்ட போது ஆச்சரியமாக இருந்தது. குளிர் காலம் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. சில நாட்களே குளிர் இறங்கி அடித்தது. இந்த வருடம் அப்படி இல்லை. டெம்ப்ரேச்சர் முள், ஃபாரன்ஹீட்டில் சைபருக்குக் கீழேயே காட்டிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவெங்கும் இந்த நிலைமையே. ஏன், இந்தியாவிலும் இதைத் தான் சொல்கிறார்கள். நூறாண்டு காலச் சரித்திரத்தில் இடம் பெறக் கூடிய பல குளிர்ந்த நாட்கள், கடந்த […]

Continue Reading »

பகுத்தறிவு – 9 – மாதமோ மார்கழி….

பகுத்தறிவு – 9  – மாதமோ மார்கழி….

( * பாகம் 8 * ) பகுத்தறிவு குறித்த நமது தொடரைச் சற்று, காலங்களுக்கொப்ப திருப்பிச் செல்லலாம் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட கட்டுரை இது. தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் மார்கழி மாதத்தைத் தொடர்புபடுத்தி எழுதலாம் என்று தோன்றியதன் விளைவே இந்த வாரப் பகுத்தறிவுக் கட்டுரை. தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பானது என்று போற்றப்படும் மார்கழி என்ற உடனே, அந்த அதிகாலைப் பொழுது நம் மனதை ஆக்கிரமித்து விடும். குழந்தைப் பருவத்தில், நம் கிராமத்து அக்கிரகாரத்து வாசலில் […]

Continue Reading »

‘உலகச் சாலைகளின் சந்திப்பு’ எதுவென்று தெரியுமா?

‘உலகச் சாலைகளின் சந்திப்பு’ எதுவென்று தெரியுமா?

அமெரிக்காவின் அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் நியூயார்க்கில் உள்ள ‘டைம்ஸ் ஸ்கொயர்’ தான் உலகச் சாலைகளின் சந்திப்பு (Cross Roads of the World) எனப்படுகிறது. புதுவருடம் பிறந்து விட்டது என்று அறிவிக்கும், உலகப் புகழ்பெற்ற  ‘பால் டிராப்’ நிகழ்வு நடைபெறுவது இங்கு தான். இன்று மன்ஹாட்டன் நகரின் பிராட்வே சாலையும், ஏழாவது அவென்யுவும் சந்திக்கும் இடம்1880 களில், வெட்ட வெளியாக, குதிரைகள் வாங்கி விற்கும் பெருஞ்சந்தையாக இருந்தது. அக்காலத்தில் இந்த இடம் லாங் ஏக்கர் சதுக்கம் (Long […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad