கட்டுரை
ரஜினி Vs கமல் – யாருக்கு ஓட்டுப் போடலாம்?
கடந்த டிசம்பர் மாதம் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்த அதே சமயத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களும் தீவிர அரசியலில் இருந்து உடல் நிலை காரணமாக விலகினார். தமிழகத்தின் அசைக்க முடியாத ஆளுமைகளாக இருந்த இந்த இருவரும் விட்டுச் சென்ற வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் பலரும் முயலுகிறார்கள். ஏற்கனவே களத்தில் இருப்பவர்கள், களத்திற்கு வர நினைத்தவர்கள், எங்கிருந்தோ வந்தவர்கள் எனப் பல வகையினரை இப்போது காண முடிகிறது. அதில் முக்கியமாக ரஜினி, கமல் இருவரையும் […]
வீரத்துறவி சுப்பிரமணிய சிவா
Courtesy: Wikipedia.org அக்டோபர் மாதம் இந்திய சுதந்திரத்திற்கும், நாட்டின் மேம்பாட்டிற்கும் ஒரு பெரிய புண்ணிய காலம் என்றே சொல்ல வேண்டும். இந்திய நாட்டிற்காகச் சேவை புரிந்த ஒப்புயர்வற்ற பலர் உதித்த சிறந்த மாதம் இதுவென்றே தோன்றுகிறது. அண்ணல் காந்தியடிகள் அக்டோபர் இரண்டாம் நாள் உதித்தது உலகம் அறிந்த ஒன்று. பெருந்தலைவர் என்றும், கர்ம வீரர் என்றும் போற்றப்பட்ட காமாராஜரின் நினைவு நாளும் இந்த இரண்டாம் திகதியே. இவர்களிருவர் தவிர, சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பிரதமராகப் பதவி வகித்து, […]
பண்டிகைகள் – அங்கேயும் இங்கேயும்
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கலாச்சாரம் உள்ளது. அதற்கேற்ப வழிபாடுகள், தெய்வங்கள், பண்டிகைகள் போன்றவை வேறுபடும். ஆனால், யோசித்துப் பார்த்தால் இந்தப் பண்டிகைகளிடையே சில ஒற்றுமைகளைக் கவனிக்கலாம். ஹாலோவீன் (Halloween) – ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் கொண்டாடப்பட்டு வந்த இந்தப் பண்டிகை, தற்சமயம் உலகமெங்கும் பரவி வருகிறது. உலகமயமாக்கத்தால் இந்திய நகரங்களுக்கும் இது அறிமுகமாகி உள்ளது. இது குளிர்காலத்தை வரவேற்பதற்கான, இறந்தவர்களை நினைவுகூர்வதற்கான, குழந்தைகளிடம் பயத்தைப் போக்குவதற்கான ஒரு பண்டிகை. அக்காலத்தில் மக்கள் பழங்களை இத்தினத்தில் பரிமாறிக் கொள்வர். […]
கல்லூரி நுழைவுத் தேர்வுகள்
அமெரிக்காவில் கல்லூரி வாசலை மிதிக்கவிருக்கும் மாணவ, மாணவிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் தொக்கி நிற்கும் கேள்வி ‘சாட்’டா அல்லது ‘ஆக்டா’ என்பது தான். பல வருடங்களுக்கு முன்பு வரை கல்லூரித் தேர்வு முறைகள் அவரவர் சேரவிருக்கும் கல்லூரியைப் பொறுத்து வேறுபட்டு வந்தது. கிழக்கு, மேற்கு விரிகுடாப் பகுதிகளில் இருந்த கல்லூரிகள் சாட் தேர்வையும், மத்திய மேற்குப் பகுதியில் இருக்கும் கல்லூரிகள் ஆக்ட் தேர்வையும் ஏற்றுக் கொண்டன. ஆனால் சமீப காலங்களில் சாட் மற்றும் ஆக்ட் தேர்வு மதிப்பெண்கள் பெரும்பாலும் […]
எக்குவாஃபேக்ஸ்
ஒருபுறம் ஹார்வி, எர்மா, மரியா என சூறாவளிக் காற்று, பேய்மழை, வெள்ளம் என இயற்கை அன்னை, பல மில்லியன் அமெரிக்கக் குடிகளைப் பாதித்தாள். அதே சமயத்தில் நடந்த எக்குவாஃபேக்ஸ் நிறுவனத்தில் நடந்த கணினி ஊடுருவலில், பல கோடி மக்களின் தனிப்பட்ட, வர்த்தகத் தகவல் சூறையாடப்பட்டுள்ளது. தனிநபர்களின் கடன் வாங்கும் ஆற்றலைக் கணிக்கும் நிறுவனத்தின் தகவல் சூறையாடல் வருமாண்டுகளில் பல வகையிலும் சீரழிவுகளைக் கொண்டு வரலாம் இந்தச் தகவல் கொள்ளை, இதுவரை அமெரிக்க நாட்டில் ஏற்பட்ட சூறாவளிகள், நில […]
எட்டாக் கனியாகுமோ மருத்துவ நலன்?
அமெரிக்காவில் ஆண்டு தோறும் மருத்துவத்துக்காக மட்டும் செலவிடப்படும் தொகை $3.2 ட்ரில்லியன். அதாவது தனி நபர் ஒருவருக்குச் சராசரியாக $10 ஆயிரம் டாலர்கள்; நாட்டின் மொத்த உற்பத்தியில் இது 18%. உலகிலேயே மருத்துவத்துக்கு அதிகம் செலவிடும் நாடு அமெரிக்காதான். இருப்பினும், உலகச் சுகாதார நிறுவனத்தின் (World Health Organization) கணக்குப்படி மருத்துவ நலனைப் பொறுத்தவரையில் அமெரிக்கா 37 ஆவது இடத்தில் தான் உள்ளது. அதாவது மற்ற நாடுகளை விடவும் அதிகம் செலவழித்தும், உடல் / மருத்துவ நலனில் […]
ஒரே ஒரு சந்திரன்
(பாகம் 3) 1952 ஆம் ஆண்டு ராமச்சந்திரனின் நடிப்பில் வெளிவந்த படங்கள் ‘அந்தமான் கைதி’, ‘ குமாரி’, மற்றும் ‘என் தங்கை’. அந்தமான் கைதி, இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, குடும்பத்துடன் இந்தியாவுக்கு வரும் இளைஞன், தன் தந்தை, சிலரால் கொலை செய்யப்பட்டதை அறிந்து, அவர்களைக் கொன்று விடுகிறான். இதற்காக அந்தமான் சிறையில் தண்டனை பெரும் அவன், விடுதலையாகித் திரும்ப வந்து, தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதோடு, கயவர்களால் கற்பழிக்கப்பட்ட ஒரு ஏழைப் பெண்ணை மணந்து கொள்வதான புரட்சிக் […]
தற்கொலை தவிர்ப்போம்
இக்கட்டுரை வெளியாகும் செப்டம்பர் 10ஆம் நாள் ‘உலகத் தற்கொலைத் தடுப்புத் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நீட் (National Eligibility and Entrance Test) கடந்த சில தினங்களில் தமிழ் வாசிக்கத் தெரிந்த அனைவரையும் உணர்வு பூர்வமாகப் புரட்டி போட்ட செய்தி அனிதாவின் தற்கொலை. ‘கனவு காணுங்கள்’ என்ற கூற்றைக் கடந்து மருத்துவராகும் லட்சியத்தோடு மிகச் சிறந்த முறையில் தன்னைத் தயார்படுத்திக்கொண்டு, மருத்துவப் படிப்புக்கான விளிம்பில் நின்ற அவருக்கு, ‘நீட்’ நுழைவுத்தேர்வு பற்றி பரிச்சயமும், பயிற்சியும் இல்லாததால், அதில் வெற்றி […]
ஹார்வி பாதிப்புகளுக்கு உதவுங்கள்
ஆகஸ்ட் இறுதி வாரத்தில் அமெரிக்காவின் டெக்ஸாஸ், லூசியானா உள்ளிட்ட மாகாணங்களைத் தாக்கிய ஹார்வி சூறாவளியின் பாதிப்புகளை அறிந்திருப்பீர்கள். இதுவரை 70க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 13 மில்லியன் மக்கள் பல்வேறு வகைகளில் பாதிப்படைந்துள்ளனர். சுமார் 40000 மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்புக் கூடாரங்களில் தங்கும் நிலை. ஆகஸ்ட் மாத மத்தியில் ஆப்பிரிக்கக் கரையில் உருவாகிய வெப்ப மண்டலம், சூறாவளிப் புயலாக உருமாறி ஆகஸ்ட் 25 ஆம் தேதி டெக்ஸாஸில் உள்ள அரன்சாஸ் துறைமுகத்தைத் தாக்கிய போது, […]
பெஞ்சமின் ஃபிராங்கிளின்
பிரித்தானியப் பேரரசு காலனிகளிலிருந்து (colonies) அமெரிக்கா சுதந்திர நாடாக வந்தமைக்கு, பலதாபகத் தந்தைகள் காரணமாக இருந்தனர். இவர்களில் முதன்மையானவர்களில் பெஞ்சமின் ஃபிராங்கிளினும் ஒருவர். இவர் நாட்டின் தாபகர் மாத்திரம் அல்ல, எழுத்தாளர், பதிப்பாளர், பெரும் விஞ்ஞானி, கண்டுபிடிப்பாளர், இராஜதந்திரி , அரசியல்வாதி, ஆசிரியர், நூலகவியலாளர் என்று சகலகலா வல்லவர். அறிவாளர் ஃபிராங்கிளினின் ஆர்வமோ வரையறையற்றது இவர் மருத்துவத்தில் இருந்து, சங்கீதம், சிலேடை, விஞ்ஞானம், தொழில்நுட்பம், மெஞ்ஞானம் என பலவற்றையும் ஆவலுடன் தம் கருத்தில், சிந்தனையில் கொண்டவர். […]