கட்டுரை
பிக் பாஸ் சர்ச்சைகள்
‘பிக் பாஸ்’. தமிழ் தொலைக்காட்சியை, இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தை, உலகில் பல மூலைகளில் வாழ்ந்து வரும் தமிழரை ஆட்டி வைக்கும் சொல்லாகி விட்டது பிக் பாஸ். யூ டுயூபில் கிளிக் செய்யும் லிங்க்கில் எல்லாம் சுத்தமாகச் சவரஞ்செய்து கண்ணாடி போட்ட கமல் மேதாவித்தனம் காட்டி முறைக்கிறார். ஜூலியானா, கஞ்சா கருப்பு, ஆர்த்தி, சினேகன், காயத்ரி, ஓவியா எனப் பலரது பெயரைக் கேட்டு, படித்துக் காதுகளும், கண்களும் சிவந்து விட்டன. ஜி.எஸ்.டி. புண்ணியத்தால் புதுத் தமிழ்ப்படம் ஏதும் வராமல் […]
நாங்கெல்லாம் அப்பவே அப்படி …
“ஏங்க, வித்யா ஹஸ்பெண்ட் டெபுடேஷன்ல சிகாகோ போறாராம். அவர் கிட்ட ‘திவான் அவென்யுலேர்ந்து’ ரெண்டு கிலோ உளுந்தும், கார அரிசியும் வாங்கிட்டு வரச் சொல்லுங்க. அவரா சொமந்துகிட்டு வரப் போறார்.. கார் தானே சொமக்கப்போது”. “சொன்ன ஒடனே திரும்பிப் பாக்காதீங்கோ.. பின்னாடி ப்ளு கலர் டி-ஷர்ட் போட்டுண்டு வராரே .. பாக்க நம்மவா மாதிரி தெரியறது .. பேச்சுக் கொடுத்துப் பாருங்கோ.” “அவன் ‘Straight from Bangladesh’ ன்னு டி-ஷர்ட் போட்டுருக்கானேடி” “இருந்துட்டு போறது […]
ஒரே ஒரு சந்திரன் ..
மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன். எத்தனை பேருக்கு இந்தப் பெயரில் இவரைத் தெரியுமோ, அறியேன். ஆனால் அந்தப் பிரபலமான மூன்றெழுத்தைத் தெரியாத, ஐம்பதுகளுக்குப் பின்னர், எண்பதுகளுக்கு முன்னர் பிறந்த தமிழர் கிடையாது என அடித்துச் சொல்லலாம். இவர் இறந்து முப்பதாண்டுகள் நிறைவுறும் தருவாயில் சிலர் இவர் இன்னமும் உயிருடன் இருப்பதாக வாதிட, சிலர் இவரைத் தெய்வமாக எண்ணி பூஜித்து வணங்கி வருகிறார்கள். அரசியல், சினிமா போன்ற துறைகளில் பலரது ஏற்ற, இறக்கங்களுக்கு இவர் காரணமாய் இருந்த போதிலும் அனைவரும் […]
மினியாப்பொலிஸ் மாநாட்டு அரங்கு Minneapolis Convention Center
மாநில விருந்தாளிகளையும், உள்ளூரவரையும் பல கண்காட்சிகளுக்கும், கலைக்கூடங்களுக்கும், மாநாடுகளுக்கும் வரவேற்கிறது மினியாப்பொலிஸ் மாநாட்டு மண்டபம். மினியாப்பொலிஸ் நகரமும் இதன் அரங்குகளும் மற்ற பெரும் நகரங்கள் போன்றல்லாது, வருவோர் இலகு பாவனை கருதித் திட்டமிட்டு அமைக்கப்பட்டது. மினியாப்பொலிஸ் நகரத்தின் வர்த்தக மையம் நிக்கலெட் மால் (Nicollet Mall) ஆகும். இந்த மாலிற்கும் மினியாப்பொலிஸ் இசையரங்கிற்கும் (Orchestra Hall) அருகே அமைந்துள்ள அரங்கே மினியாப்பொலிஸ் மாநாட்டு மண்டபமாகும். முகவரி 1301 2nd Ave S, Minneapolis, […]
கிறீன்லைன் – சிறிய மீ-கொங் (Little Mekong)
மினசோட்டா மாநிலத்திற்கு வருகை தரும் விருந்தாளிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் கிழக்காசிய – முக்கியமாக தாய்லாந்து, வியட்னாம், கம்போடிய – மலையகவாசிகளாகிய மங் (Hmong) மக்களையும், சீனாவையும் இணைக்கும் மீ-கொங் ஆற்றோர உணவுகளைப் பரிமாற வரவேற்கிறது செயிண்ட் பால் நகர சிறிய மீ-கொங் பகுதி. இந்தப்பகுதி ஃப்ராக் டவுன் (Frogtown) என்றும் அபிமானிகளால் அழைக்கப்படுகிறது. எச்சில் ஊறும் பல்வகை கிழக்காசிய உணவகங்கள் பல்கலைக்கழக வீதி (University Avenue), குறுக்கு வீதிகள், வடக்கு டேல் (Dale North st.) […]
விஸ்கான்சின் ஸ்டேட் கேப்பிடல்(Wisconsin State Capitol)
விஸ்கான்சின் ஸ்டேட் கேப்பிடல் – தெரிந்துக்கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் நாட்டில் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் சட்டப்பேரவை கட்டிடம் இருந்தாலும், கட்டுமான அழகு அனைத்திலும் இருப்பதில்லை. குறிப்பிட்ட சில பேரவை மாமன்றங்களே, பார்வைக்கு அழகாக இருக்கின்றன. அதில், விஸ்கான்சின் (Wisconsin) மேடிசனில் (Madison) இருக்கும் பேரவை கட்டிடம், புகழ் பெற்ற ஒன்றாகும். பூசந்தி (Isthmas) எனப்படும் இரு நீர்பரப்புக்கு இடையேயான நிலப்பரப்பில் இருக்கும் ஒரே பேரவை இது தான். விஸ்கான்சின் மாநிலத்தின் தலைநகரான மேடிசனின் மத்திய புள்ளியில் […]
பணயத் தீம்பொருள் (Ransomware)
கடந்த சில வாரங்களாக, எந்த ஊடகச் செய்தியை எடுத்தாலும் பணயத் தீம்பொருள் (Ransomware) பணம் பறித்தல் பற்றி தகவல்கள் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன அசல் சுற்றாடலை விட்டுப் பெரும்பாலோனோர் நகல் சூழலாகிய மின்வலயம் என்னும் அடர்காட்டிலே சஞ்சரிக்கும் தருணத்தில் பணயத் தீம்பொருள் எனும் விலங்கு வதைத்து வருகிறது. பணயத் தீம்பொருள் என்றால் என்ன? பணயத் தீம்பொருளானது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மின்வலயத் திருடர், தமது துர்பிரயோகக் கலைகளைப் பரிசோதிக்கும் யுக்தியாக இருந்து வந்தது. ஆயினும் இன்று இணையத்தில் […]
மகரந்த மலர் வண்டுகளுக்கு உதவுவோம்
இளவேனிற் காலம் இதமாக சூடேற்றுகிறது புல்தரைகளும், தூங்கிய மரங்களும் விழித்தெழும்புகின்றன. நாம் கடித்துச் சுவைக்கும் ஆப்பிள் பழம், ஜஸ்கிரீம் மேல் வைக்கும் செரிப் பழம், காய்கறிகள் யாவும் பூத்துக் குலுங்க அவற்றின் மகரந்தங்களைக் காவிச் செல்லும் வண்டுகள், பூச்சிகள், தேன் குருவிகள் அவசியம். எனவே இளவேனிற் காலம் தொட்டு இலையுதிர் காலம் வரை புன்சிரிக்கும் பூக்களிலுள்ள தேனை அருந்தவரும் வண்டுகள் மகரந்தத் தூவல்களை (Pollen) எடுத்துச் செல்லும். இப்படிப் பரிமாறப்படும் மகரந்தத் தூவல்களே அடுத்து கொத்துக் கொத்தாய்க் […]
பாதுகாப்பான நீச்சல் முறைகள்
வட அமெரிக்காவில் கோடைகாலம் தொடங்கிவிட்டது. இனிக் குழந்தைகளும் பெரியவர்களும் குதூகலமாகப் பொழுது போக்கும் ஒரிடம் நீச்சல் குளங்கள். குறிப்பாக மினசோட்டா, மிச்சிகன், விஸ்கான்சின் மாநிலங்களிலும், ஒன்ராரியோ மாகாணத்திலும் ஏரிகள் ஆறுகள் பலவுண்டு. இங்கெல்லாம் விரைவில் கூட்டம் நிரம்பி வழியும். நீச்சல் சிறந்த பொழுதுபோக்கு மட்டுமல்லாது உடல் நலம் பேணும் சிறந்த பயிற்சியாகவும் அறியப்படுகிறது. எனினும் மற்ற விளையாட்டு, உடற்பயிற்சியை விட நீச்சல் சற்று அபாயகரமானது. எனவே நீச்சலில் பாதுகாப்பாக ஈடுபடுதல் அவசியம். குழந்தைகளும், சிறுவர்களும் குளத்து நீரில் […]
வயலின் மேதை திரு. வி.வி.முராரி அவர்களின் இசை மழை
கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள், மினசோட்டா மாநிலம், மெடினா நகரிலுள்ள தேவுலப்பள்ளி இல்லத்தில் வயலின் மேதை திரு. வி.வி. முராரி அவர்களின் வயலின் இசை மழை பொழிந்தது. கர்நாடக இசை மும்மூர்த்திகளின் ஒருவரான திரு. முத்துஸ்வாமி தீஷிதரின் “சித்தி விநாயகம்” கீர்த்தனையோடு களை கட்டியது கச்சேரி. தனது துரிதமான நடையினாலும் அபரிதமான மேல் கால ஸ்வரங்களுடன் கூடிய ஆலாபனையோடு “ஷண்முகப்ரியா” ராகத்தில் ரசிகர்களைக் குதூகலத்துடன் வரவேற்றார் வித்வான் முராரி, இதைத் தொடர்ந்து வந்தது நாத […]