கட்டுரை
காலம்
இறந்த காலம் முடிந்த கதை, திருத்த முடியாது, எதிர் காலம் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. நிகழ் காலம் மட்டும் தான் நம் கையில் உள்ளது. அதனால் தான் அதை ஆங்கிலத்தில் “Present ” என்று சொல்கிறோம் – ஞானி காலம் அறிவியல் வாயிலாக பல கோணங்களில் பலமுறை ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. காலத்தை துல்லியமாக கணிக்கக் கூடிய பல கருவிகள் இருக்கின்றன. நொடிப்பொழுதை கோடிப் பகுதியாகப் பிரித்து அளக்கக் கூடிய திறமையும் அறிவும் அறிவியல் மேதாவிகளுக்கு உண்டு. காலத்தைப் […]
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-8
(பகுதி-7) பிரிவுத்துயர் எண்ணற்ற சொந்தங்கள் இருந்தும் அவர்களைப் பிரிந்து யாருமற்ற அனாதைகள் போல தனிமையில் வாழ்வது தான் துயர்களில் கொடுந்துயர். புலம்பெயர்ந்த இளைஞர்கள் பலர் இன்று உலகின் பல பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாய், தந்தை, உடன் பிறப்புக்களைப் பிரிந்து உழைப்பு, உயிர்ப் பயம் போன்ற காரணங்களினால் புலம்பெயர்ந்தோர் சதா அதே நினைவுடன் தமது காலத்தைக் கடத்திக் கொண்டிருக்க மறுபுறம் மனைவி, பிள்ளைகளைப்பிரிந்து வெளிநாடுகளுக்குச் சென்று பல வருடங்களாகத் தனிமையில் வாடும் கணவன்மார் மற்றும் தந்தைமார்களின் நிலையோ […]
மூளையும் நனவு உணர்ச்சியும்
நீங்கள் வீதியீல் ”நடமாடும் பிரேதத்தை”க் (Zombie) கண்டீர்களானால் அது நனவு அற்றது என்று உங்களால் உறுதியாகக் கூறமுடியமா? முடிந்தால் உங்கள் பதில்களை யோசித்தவாறு படிக்க ஆரம்பியுங்கள் இந்தக் கட்டுரையை. தற்போது ஹாலிவுட்டில் இருந்து நமது தமிழ்ச் சினிமாக்களிலும் சரி பல நடமாடும் பிரேதங்கள், குருதி குடிக்கும் வாம்பயர்கள் (vampires) எனக் குரோதமான, திகிலான (Horror Thrillers) படங்கள் வெளிவந்தவாறுள்ளன. அந்தப் படங்களில் எல்லாம் நடமாடும் பிரேதங்களை ரசிகர்கள்பார்த்து அடையாளம் தெரிந்து கொள்ளத் தயாரிப்பாளர் பின்னிசை, நிறங்கள், நிழல்கள் […]
மினசோட்டா மாநில எல்லைக்குள் இருக்கும் பெரும் ஏரிகள்
எமது மாநிலமானது 10,000 க்கும் மேற்பட்ட ஏரிகள் கொண்டு செழிப்புற்றுக் காணப்படும் மாநிலம் என்று பெருமைப்படுவோம். உண்மையில் மாநில வனக்காப்புத் திணைக்களம் (Department of Natural Resouces – DNR) 2008ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நமது மாநிலம் 11,842 ஏரிகளை உள்ளடக்கியுள்ளது. எனினும் சில வரலாற்றுப் பத்திரங்கள் ஒரு காலத்தில் 15,291 ஏரிகள் நிலப்பரப்பளவில் 10 ஏக்கர்களிலும் பெரிதாக இருந்துள்ளன என்கின்றன. மினசோட்டா என்ற சொல்லே பூர்வீக வாசிகளால் சூட்டப்பட்ட சொல்லொன்றாகும். மினி Minni என்பது […]
மினசோட்டாவில் ஆன்மீகம் – பாகம் 2
பாகம் 1 இந்தியாவில் தோன்றிய மதங்களில் பலரால் பின்பற்றப் பட்டுவரும் மதங்களில் இந்து மதத்தை அடுத்து புத்த மதத்தை சொல்லலாம். மத்திய, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் புத்த மதத்தை பெரும்பான்மையோர் பின்பற்றி வருகிறார்கள். சீனாவில் ஜென் (Zen) புத்த வழியைப் பின்பற்றுகின்றனர். இந்துக்களும் புத்த பகவானை விஷ்ணுவின் அவதாரமாக கொண்டு வணங்கி வருகின்றனர். மிகப்பெரிய புத்த சிலைகள் கொண்ட கோயில் எல்லாப் பெரிய நகரங்களிலும் உள்ளது. புத்த மதத்தின் ஈர்ப்பு உலகம் முழுவதும் காணப்படுகிறது. மினசோட்டா மாகாணமும் […]
ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-7
(பகுதி-6) தாய்நாடு பற்றிய ஏக்கம் புலம்பெயர்ந்தோர் கவிதைகளில் ஆங்காங்கே தாய்நாடு பற்றிய ஏக்கவுணர்வு பிரதிபலிப்பதனைக் காணலாம். தனது வீடு, தனது ஊர், தனது நகரம், தனது தேசம் பற்றிய பிரதிபலிப்புக்களை மிகவும் அற்புதமான முறையில் கவிதைகளில் அமைத்தனர். “கனவு உன்னதமான எனதும் உனதுமான கனவு. ஆலமரங்களுக்கும் அஸ்க்க மரங்களுக்குமிடையிலான ஊஞ்சல் கட்டும் கனவு. பனைக்கும் கிறான் மரத்துமிடையே பாலமிடும் கனவு”18 எமது ஆழ்மனதில் உள்ள நிறைவேறாத ஆசைகளும் கற்பனைகளும் கனவுகளாக மேலெழுகின்றன. நீண்ட காலமாக ஊரைப் பிரிந்த […]
தந்தையர் தினம்
ஜேசன் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். பள்ளிப் பேருந்து தெரு முனையில் நின்றது. “பேருந்தை விட்டு இறங்க மனமில்லையா?” எனக் கிண்டலாகக் கேட்டார் பேருந்து ஓட்டுனர் மைக். “சாரி .. மிஸ்டர். மைக்..” சொல்லிக் கொண்டே இறங்கினான் ஜேசன். பேருந்தின் முன் பக்கமாகத் தெருவைக் கடந்து வீடு நோக்கி நடக்க துவங்கினான். ஜேசனுக்கு மிசஸ். வீலர் மீது கோபமாக வந்தது. பிராண்டன் மெமோரியல் எலிமெண்டரி பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிப்பவன் ஜேசன். மிசஸ். வீலர் அவனது […]
மல்லிகைப்பூ
எமது தமிழ்க் கலாச்சாரத்தில் பாண்டியர் காலத்தில் இருந்து இன்றுவரை பெண்கள் தலையில் சூடும் மல்லிகை பற்றி பலவித பாக்களும், பாடல்களும் இயற்றப்பட்டுள்ளன. இலங்கை, இந்திய, மலேசியா மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மல்லிகைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, அவர்கள் தினசரி வாழ்விலும், வழிபாடுகளிலும் மல்லிகைப்பூவை, தொடர்ந்து பாவிப்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மேலும் தமிழகத்தை எடுத்தோமானால் பல்லாயிரமாண்டு பழமைவாய்ந்த மதுரை மாநகர் தனக்கென உரிய பூவாக ‘மதுரை மல்லியைச்” (Jasmine சமபக்) சூடிக்கொள்ளுகிறது. மனத்தைச் சாந்திசெய்யும் மல்லிகையின் அற்புதமான மணம் […]
முத்தான பழைய திரைப்படங்கள் மற்றும் குறும் படங்கள் – 3
புகைரதம் (The Train) 1944 ஆம் ஆண்டில், ஒரு ஜெர்மன் கர்னல் ஃபிரெஞ்சு கலை பொக்கிஷங்களை ஒரு புகைரதத்தில் ஏற்றி ஜெர்மனிக்கு அனுப்புகிறார். அதையறிந்த ஃபிரெஞ்சு போராட்டக்கார புகைரத கண்காணிப்பாளர் ஒருவர் கலைப் பொருட்கள் சேதமாகாமல் புகைரதத்தை தடுத்து நிறுத்த பாடுபடுகிறார். இது 1964 ம் ஆண்டு கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட போர்காலத் திரைப்படமான இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. நூற்றிமுப்பத்து மூன்று நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம் 5.8 மில்லியன் அமெரிக்க வெள்ளி […]
நல் நுண்ணுயிர்களும் (Pro-Biotics) நாணயமான தமிழ் உணவுகளும்
பாக்டீரியா (Bacteria) எனப்படும் நுண்ணுயிரி என்ற சொல்லைக் கேட்டவுடனே சாதாரணமாக நமது மனதில் தோன்றுவது என்ன? அது ஒரு கிருமி, எனவே தொற்றாமல் உடன் விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதே. இதை வழிவகுத்தது சென்ற நூற்றாண்டுச் சுகாதாரக் கல்வி. சராசரி மக்களின் கண்ணோட்டத்தை அவதானித்தால் இது இலகுவில் தெளிவாகும். தமிழர் தாயகங்களில் வெளிவரும் விளம்பரத் தகவல்களை எடுத்துப் பார்த்தாலும் பொதுவாக இம்மனோநிலையே தொடர்ந்தும் பேணப்படுகிறது எனலாம். இன்றும் கிருமிகளை அழிக்க டெட்டால், ஃபினைல், லைசால் போன்ற விளம்பரங்கள் […]