\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கட்டுரை

சாட்ஜிபிடி ChatGPT தொழிலாளர் வேலையை சீர்குலைக்குமா?

சாட்ஜிபிடி ChatGPT தொழிலாளர் வேலையை சீர்குலைக்குமா?

வராலாற்று ரீதியில் தொழிநுட்பத்தை எடுத்துப் பார்த்தால், எந்த தொழில்நுட்பமும் ஓரளவுக்குப் படித்த தொழிலாளர்களிடையே பெருமளவிலான வேலை இழப்பை ஏற்படுத்தவில்லை என்பது புரியும். ஆயினும் ‘உருவாக்க செயற்கை நுண்ணறிவு’ (Generative AI) இதற்கு விதிவிலக்காக இருக்குமா என்பதே எமது கேள்வி. சாட்ஜிபிடி(ChatGPT) என்றால் தமிழில் நாம் ‘பயிற்றுவிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மொழி செயலாக்கக் கருவி’ என்று கூறிக்கொள்ளலாம். இந்த செயற்கை நுண்ணறிவு கருவி இரண்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் மிகவும் செல்வாக்கு மிக்க செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகங்களில் […]

Continue Reading »

பனி ஏரியில் மீன் பிடிக்கலாமா?

பனி ஏரியில் மீன் பிடிக்கலாமா?

மினசோட்டாவின் நிலப்பரப்பெங்கும் ஏரிகள் நிறைந்து இருக்கின்றன. இந்த நிலப்பரப்பிற்கேற்றாற்போல் இங்குள்ள மக்களின் முக்கியப் பொழுதுபோக்காக மீன் பிடித்தல் உள்ளது. மீன் பிடித்தல் என்றால் கோடைக்காலத்தில் நீர்நிலைகள் நிரம்பியிருக்கும் போது மட்டுமில்லாமல், குளிர்காலத்தில் நீர்நிலைகள் பனியாக உறைந்திருக்கும் போதும் அதைத் தொடர்வது தான் இங்குள்ள சிறப்பு. வெப்பமான நிலப்பரப்பிலிருந்து வந்திருக்கும் இந்தியர்களுக்கு, குளிர்காலத்தில் கடைகளுக்குச் சென்று வருவதே பெரிய சாகசமாக இருக்கும். அதுவே மினசோட்டாவின் கடுங்குளிருக்குப் பழகிய உள்ளூர்காரர்கள், பொழுது போகவில்லை என்று குளிரில் உறைந்திருக்கும் ஏரியில் மீன் […]

Continue Reading »

சிப்போட்லே

சிப்போட்லே

சில மெக்சிகன் படங்களைக் காணும்போது, அவர்களின் கலாச்சாரத்திற்கும் நமது கலாச்சாரத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறதே என்று தோன்றுவதுண்டு. உதாரணத்திற்கு, அனிமேஷன் படமான கோகோ (Coco) படத்தில் வரும் மூதாதையர் வழிபாட்டைக் குறிப்பிடலாம். அதேபோல், உணவிலும் நிறைய ஒற்றுமைகளைக் காணலாம். மல்லி, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, எள்ளு, மிளகாய் வற்றல், பூண்டு, வெங்காயம், தக்காளி, பீன்ஸ், அரிசி என நமது சமையலறையில் பயன்படுத்தும் பல உணவு பொருட்களை, மெக்சிகன் உணவுத் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள். அதனால், அமெரிக்காவில் வெளியே […]

Continue Reading »

இயந்திரங்களின் எழுச்சி: 2023 செயற்கை நுண்ணறிவு (AI) ஆண்டாக இருக்கலாம்

இயந்திரங்களின் எழுச்சி: 2023 செயற்கை நுண்ணறிவு (AI) ஆண்டாக இருக்கலாம்

அமெரிக்கா உட்பட உலகளாவிய நாடுகள் சென்ற மூன்றாண்டுகள் பலவீன பொருளாதாரச் சூழலில் இருந்து 2023ஆம் ஆண்டிற்கு நகர்கின்றன. பலவீனமான பொருளாதார நிலைமைகள் எப்பொழுதும் செலவுகளைக் குறைப்பதற்கும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதால், ஏற்கனவே வளர்ந்து வரும் பொருளாதார மந்தநிலை செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence AI) வர்த்தகங்கள், உற்பத்திச்சாலைகள் ஏற்றுக்கொள்வதில் பெரும் உந்துதலை அளிக்கலாம்.  2023 ஆம் ஆண்டைத் தொடங்குவதற்கு நாங்கள் தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில், நிறுவனங்கள் இன்னும் அதிகச் செலவுகளால் நசுக்கப்படுகையில், உலகப் பொருளாதாரம் […]

Continue Reading »

அமெரிக்காவில் வளரும் சகிப்பின்மை

அமெரிக்காவில் வளரும் சகிப்பின்மை

அமெரிக்காவில், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பல தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் நன்கொடை திரட்டும் நிகழ்வுகளை நடத்துவதுண்டு. இதன் முதன்மை நோக்கம், கிறிஸ்துமஸ், ஹனுக்கா பண்டிகைகளை, பொருளாதாரக் குறைபாடுகளால் கொண்டாட முடியாத நிலையிலிருக்கும் குடும்பங்களுக்கு உணவு மற்றும் பரிசுப் பொருட்களை ஒழுங்கமைத்துக் கொடுப்பதாகும். ஆனால் கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி, டெக்சாஸ் மாநிலம், ஃபிரிஸ்கோ நகரில் நடைபெற்ற நன்கொடை நிகழ்வின் செயல்நிரலில் குறிப்பிடப்பட்டிருந்த நோக்கங்களில் ஒன்று – ‘திருப்பதியில் முறையான அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருக்கும் தேவாலயங்களைத் தகர்ப்பது’. […]

Continue Reading »

உதிரும் இலைகள் கூறுவது என்ன?

உதிரும் இலைகள் கூறுவது என்ன?

மினசோட்டா மாநிலத்தில் வாழும் நீங்கள் வருடா வருடம் இலைகள் பசுமையான நிறத்திலிருந்து மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, ஊதா, மண்ணிறம் என மாறும் இலையுதிர்காலத்தை அவதானித்திருப்பீர்கள். ஏன் தான் இவ்விட இலைகள் நிறம் மாறி உதிர்கின்றன என்றும் மனதில் கேள்வி எழுந்திருக்கலாம். பிள்ளைகள் உங்களைக் கேட்டும் இருக்கலாம். மினசோட்டாவில் நீங்கள் வீட்டுக்குள் சிறு பூஞ்செடிகள் வளர்ப்பவராகவோ, கோடை காலத்தில் வெளியே காய்கறிகள், மற்றும் அலங்காரச் செடிகள் வளர்க்கும் சிறிய  பூந்தோட்டக்காரர் ஆகவோ இருக்கலாம். தோட்டம் மற்றும் செடி வளர்ப்பில் […]

Continue Reading »

டிவிட்டரின் (Twitter) வணிகம் ஏன் உடைகிறது?

டிவிட்டரின் (Twitter) வணிகம் ஏன் உடைகிறது?

புதிய உரிமையாளர் எலான் மஸ்க் (Elon Musk) விளம்பரத்தை வெறுக்கிறேன் என்று கூறுகிறார். இது ஒரு தலையாய பிரச்சனை. ஏனென்றால் விளம்பரம் சார்ந்த வருமானமே, கீச்சகம் எனப்படும் ‘டிவிட்டரின்’ சமூக ஊடகத் தளத்தின் வருவாயில் 90 சதவீதத்தை வழங்குகிறது. எலான் மஸ்க் டிவிட்டர் கீச்சகத்தினை வாங்குவதற்கான தனது ஒப்பந்தத்தை முடிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அவர் விளம்பரதாரர்களுக்கு ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டார். பெரு நிறுவனங்கள் பலவும், கீச்சகத் தளத்தில் உள்ளடக்க மிதவாதத்தின் (content moderation) […]

Continue Reading »

மருந்தாக்க நிறுவனங்களின் விளம்பர ஆதிக்கம்

மருந்தாக்க நிறுவனங்களின் விளம்பர ஆதிக்கம்

ஐக்கிய அமெரிக்காவில், சராசரியாக ஒரு மணி நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் ஒருவர், குறைந்தபட்சம் ஒன்பது மருந்துகள் தொடர்பான விளம்பரங்களைக் காண நேர்கிறது. இவை பொதுவாக கடைகளில் கிடைக்கும் (Over the counter – OTC) மருந்துகளுக்கானவை அல்ல. இவை நோயாளிகளைப் பரிசோதிக்கும்  மருத்துவர்கள் பரிந்துரைக்கும், மருந்துச் சீட்டு மூலமாக மட்டுமே பெறக்கூடிய மருந்துகளுக்கான விளம்பரங்கள். மருத்துவச் சோதனைகள், உபாதைகள், அவற்றின் மூல காரணங்கள் குறித்த போதுமான கல்வியும், அனுபவமும் இல்லாத சாமான்ய நுகர்வோருக்கு, நேரடியாக இவ்விளம்பரங்களைக் […]

Continue Reading »

புலால் வேற்றுமை தேசியம்

புலால் வேற்றுமை தேசியம்

தற்காலிக இறைச்சி வியாபாரத் தடைகள் இந்திய முஸ்லிம்களுக்கு அடையாள நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இது 2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் குருகிராமில் (Gurugram) அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.  இந்தியாவில் மூடப்பட்ட இறைச்சிக் கடைகள் விவகாரம் புலால் வேற்றுமை மனப்போக்கை எவ்வாறு இந்தியப் பொதுமக்கள் எதிர்கொள்வது என்ற நீண்ட கால கேள்வியை எழுப்புகிறது. இது போன்று சமீப காலங்களில் வலதுசாரி இந்துத் தீவிர குழுக்களால் திணிக்கப்பட்ட தொடர்ச்சியான தற்காலிக இறைச்சி வியாபாரத் தடைகள் பல்வேறு இடங்களிலும் பரவி வருகின்றன என்பது அவதானிக்கக் […]

Continue Reading »

கடினமான செய்திகளைப் பரிமாறுவது எப்படி?

Filed in கட்டுரை by on September 8, 2022 0 Comments
கடினமான செய்திகளைப் பரிமாறுவது எப்படி?

எமது வாழ்வில் அலுவல் காரணங்களிலும், பிற சந்தர்ப்பங்களிலும் நாம் கடினமான செய்திகளைப் பரிமாற வேண்டி வரலாம். இதை ஒரு வகையில் எடுத்துப் பார்த்தால, இது நல்ல முடிவுகளை எடுப்பதற்கும், நெறிமுறை நிறுவனங்களை வளர்ப்பதற்கும், நேர்மையான உறவுகளை உருவாக்குவதற்கும் முக்கியமானதொன்றாகும். அமெரிக்க உளவியல் சங்கத்தின் ஒரு ஆய்வின் முடிவும் இக்கருத்தை எதிரொலிக்கிறது. அசௌகரிய செய்திகளை எடுத்துச் செல்பவர்கள் விரும்பத்தகாதவர்களாகவும், குறைவான திறமைசாலிகளாகவும் அல்லது எதிர்மறையான நிகழ்வு நடக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் என்று கருதப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. இது […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad