\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கட்டுரை

மினசோட்டாவில் இனங்கள் குறித்த வரலாற்றுக் கல்வி தேவையானது

மினசோட்டாவில் இனங்கள் குறித்த வரலாற்றுக் கல்வி தேவையானது

1990களில் ஊர்ப்புற, விஸ்கொன்சின் மாநில பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது நான் உள்ளூர் பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் போய்ப் பார்ப்பதுண்டு. அதன் பொழுது கிழக்காசிய, பொதுவாக வியட்னாமிய, மொங் இன அடிக் கொடி, அல்லது சில சமயம் கறுப்பின விளையாட்டு வீரர்களை குறித்துக் கேவலமாக பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவர்கள் குரல் கொடுத்ததை அவதானித்திருக்கிறேன். இவ்வகையான எண்ணம், மினசோட்டா மாநில ஊர்ப்புறப் பகுதிகளிலும் பரவலாகயிருந்ததையும்  கண்டதுண்டு. 30 வருடங்களுக்குப் பின்னரும் இந்த இனத்துவேசம் மினசோட்டா பாடசாலைகளிலும் எழுச்சிபெறுவது சமூகத்திற்கு […]

Continue Reading »

முடிவுக்கு வருகிறதா பொருளாதார உலகமயமாக்கம்?

முடிவுக்கு வருகிறதா பொருளாதார உலகமயமாக்கம்?

இந்தக் கட்டுரையை நீங்கள் எந்தக் கருவியில் – கணினி, மடிக்கணினி, கைக்கணினி, கைப்பேசி – படிக்கிறீர்களோ தெரியாது, ஆனால் அந்தக் கருவியில் குறைந்தது ஐந்து நாடுகளின் உதிரிப் பாகங்களாவது கலந்திருக்கும். மிக நேர்த்தியான, இலகுவான, இன்றியமையாத பொருளாக மாறிவிட்ட கருவி, உங்கள் கைகளில் தவழ்வதற்குக் காரணமாக அமைந்தது உலகமயமாக்கல் சாத்தியப்படுத்திய பூகோள எல்லைகளைக் கடந்த விநியோகச் சங்கிலி எனலாம். இன்று நாம் அன்றாட வாழ்வில், காலையில் எழுந்ததும் பல்துலக்கும் ப்ரஷ், பேஸ்ட், குளிக்க சோப்பு, துடைக்கும் டவல், […]

Continue Reading »

இலங்கை நிலவரம்

இலங்கை நிலவரம்

-பொருளாதாரத்தை நிலைப்படுத்த பல மாதங்கள் ஆகலாம்- இலங்கைத்தீவின் கடன்களை மறுசீரமைக்கவும், உதவி நிதிகளை மீளளிக்க முடியாமையாலும் பல மில்லியன் கணக்கான குடிமக்கள் அன்றாட வாழ்விற்கே போராடிக்கொண்டிருக்கின்றனர். இதை நாம் சாதாரண இலங்கைக் குடிமகன் வாழ்வு நிலை பற்றி எடுத்துப்பார்த்தால் பல உண்மைகள் தெரியவரும். அந்தோனிப்பிள்ளை யோசெப்பு மூன்று ஆண் மகன்மாரை உடைய அப்பா. இவர் சராசரி இலங்கை வாழ்வில் சிறந்த ஒரு தந்தையும், தமது குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள கடினமாக உழைத்து வாழும் குடிமகனும் ஆவார். பகலில் […]

Continue Reading »

யூக்கிரேன் போரும் இந்தியாவின் போர்த்திறஞ் சார்ந்த சுயாதினமும்

யூக்கிரேன் போரும் இந்தியாவின் போர்த்திறஞ் சார்ந்த சுயாதினமும்

ருஷ்யாவின் திட்டமிட்ட யூக்கிரேன் நாட்டின் ஆக்கிரமிப்பு உலகையே திகைக்க வைத்தது. இது பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஆசிய நாடுகளுக்கும் அதிர்வைத் தந்தது. இதனை விவரிக்க கம்போடிய பிரதமர் ஹுன் சென், நாம் தொலைதூரம் தாண்டியுள்ள சிறிய நாடு எனினும், இப்பேர்பட்ட சர்வதேச நாடுகள் மத்தியில் ஆக்கிரமிப்பு மிகவும் கவலையைத் தருகிறது என்று 2022 பிப்ரவரி மாதம் 24ம் தேதியில் குறிப்பிட்டார். ஹுன் சென் மலேசியப் பிரதமர் இஸ்மையில் சப்ரி யாக்கப் உடன் வியட்நாமிய நொம் பென் […]

Continue Reading »

ரஷ்யப் போரும் உலகப் பொருளாதாரமும்

ரஷ்யப் போரும் உலகப் பொருளாதாரமும்

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை, போராக உருவெடுத்து, இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்; உக்ரைனில் குழந்தைகள், வயதானோர், உடல் நலம் குன்றியோர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக அனுப்பப்பட்டு, மற்ற மக்கள் அனைவரும் ரஷ்யாவுக்கு எதிராகப் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  தங்களுடன் எல்லையைப் பகிரும் உக்ரைன் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் (NATO) சேருவது ரஷ்யாவின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் என ரஷ்யா அஞ்சுகிறது. கிரிமியாவை ஆக்கிரமித்து சொந்தமாக்கிக் கொண்டதைப் […]

Continue Reading »

மதவெறிக்கு இரையாகிறதா நாடு?

மதவெறிக்கு இரையாகிறதா நாடு?

“நம்மில் 100 பேர் அவர்களில் இருபது இலட்சம் பேரைக் கொல்லத் தயாராக இருந்தால், நாம் வெற்றி பெறுவோம். கொலை செய்யவும், சிறைக்குச் செல்லவும் தயாராக இருங்கள்.” “நீங்கள் உங்கள் மதத்துக்கு உண்மையானவர்ளாக இருந்தால், உங்கள் மதத்தைப் பாதுகாப்பதாக சபதம் எடுங்கள். எனவே, புதிய மொபைல் வாங்குவதை விட, துப்பாக்கியை வாங்குங்கள். கடவுள்களுக்கு ஆயுதங்கள் இருப்பதைப் போல், நமக்கு ஆயுதங்களும் வெடிமருந்துகளும் கிடைத்தால் என்ன தவறு? இவை நம்மைத் தற்காத்துக் கொள்ளவே தவிர தாக்குதலுக்காக அல்ல.” முதல் முத்தை […]

Continue Reading »

அதிபராக ஜோ பைடனின் முதலாண்டு – ஒரு பார்வை

அதிபராக ஜோ பைடனின் முதலாண்டு – ஒரு பார்வை

அதிபர் ஜோ பைடன், ஜனவரி 20ஆம் தேதியன்று தனது பதவிக் காலத்தின் முதலாண்டை நிறைவு செய்துள்ளார். எண்பது மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பெற்ற முதல் அதிபர் என்ற பெருமை அவருக்காகக் காத்திருந்தது. பாரம்பரிய பதவியேற்பு விழாவே நடைபெறுமா என்ற கலவர அச்சம் சூழ்ந்திருந்த நிலையில், திறந்த வெளியில் பதவியேற்றுக் கொண்டு, “இது தனிமனித வெற்றியல்ல; ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்டுள்ள உங்களின் வெற்றி” என அவர் ஆற்றிய உரை புதியதொரு நம்பிக்கையைத் தந்தது. ஒவ்வொரு தினமும் பத்து இலட்சம் (1 […]

Continue Reading »

புஷ்பா – தி ரைஸ்

புஷ்பா – தி ரைஸ்

  சேல சேல சேல கட்டுனா… குறு குறு குறுன்னு பாப்பாங்க !!! குட்ட குட்ட கௌன போட்டா…  குறுக்கா மறுக்கா பாப்பாங்க !!!   சேல ப்ளௌஸோ, சின்ன கௌனோ… ட்ரெஸ்ல ஒண்ணும் இல்லங்க !!! ஆச வந்தா, சுத்திச் சுத்தி… அலையா அலையும் ஆம்பள புத்தி !!!  ம்ம் சொல்றியா மாமா… ம்ஹூம் சொல்றியா மாமா … ம்ம் சொல்றியா மாமா… ம்ஹூம் சொல்றியா மாமா ??  –    தமிழ் .   […]

Continue Reading »

வரிகள் குறைக்கும் வழிகள்

வரிகள் குறைக்கும் வழிகள்

 அமெரிக்காவில் வருமான வரி வழக்கம் தொடங்கி நூற்றி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. முதன்முதலில் 1913 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அச்சமயம் அதிகபட்ச வரியாக 7% மட்டுமே இருந்தது. பின்னர், இரண்டாம் உலகப் போரின் சமயம், அதிகப்பட்ச வரி 94% வரை சென்றது. 1960களில் இருந்து 1980களில் 70% ஆகக் குறைந்த உச்சபட்ச வரி, அடுத்த சில ஆண்டுகளில் 50% என்ற நிலைக்கு வந்து, கடந்த முப்பது வருடங்களாக 30-40% என்ற எல்லைக்குள் ஏறி […]

Continue Reading »

டெலிப்ராம்ப்டர்

டெலிப்ராம்ப்டர்

டெலிப்ராம்ப்டர் என்று தற்போது நாம் குறிப்பிடும் சாதனம், அந்தச் சாதனத்தை உருவாக்கிய நிறுவனத்தின் (TelePrompTer Corporation) பெயர் என்று உங்களுக்குத் தெரியுமா? எப்படிப் பிரதி எடுக்கும் சாதனத்தின் (Photo copier) பெயராக, அதை உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் (Xerox) உருவெடுத்ததோ, எப்படி இணையத்தில் தேடும் செயலை (Search), ஒரு தேடுபொறியின் (Google) பெயர் கொண்டு குறிப்பிடுகிறோமோ, அது போல, இங்கும் அந்த நிறுவனத்தின் பெயர் பிரபலமானது. தவிர, அச்சாதனத்திற்கு அப்பெயர் பொருத்தமாகவும் அமைந்தது. நாடகத்தில், திரைப்படத்தில் நடிப்பவர்கள் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad