இலக்கியம்
காதல் கிளை பரப்பிய மரம்
ஒற்றை சிவப்பு ரோஜா! உலர்ந்த மலர், சீரற்ற அளவில் அழுத்தியது கையை. உலர்ந்த சிவப்பு! திறந்த பழைய புத்தகம்! என் காலத்தை நினைவுபடுத்தியது. அது உன்னை இன்னும் எனக்கு, நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறது. நான் பொக்கிஷமாக வைத்திருக்கும் பரிசு நீ. அதை நீ எனக்கு வழங்கிய நாள், எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. உன் கருவிழி உருட்டி என்னை ஏறிட்டுப் பார்க்கையில் நீ அங்கேயே என்னை மையம் கொள்ள வைத்து விட்டாய். அன்று நீ என் இதயத்தில் தூவிய […]
ஃப்ளாஷ் பேக்
கல்லூரிக்குச் செல்வதற்குத் தயாரானான் கணேஷ். வெள்ளை நிறத் துணியில், உடலைச் சுற்றி கோடு போட்டது போல் ஊதா நிறத்தில் குதிரைப் படங்கள் பொறிக்கப்பட்டிருந்த சட்டை. குதிரைகள் பலவும் ஒன்றன்பின் ஒன்றாய் ஓடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. அவையும் பல வரிசைகளாக மேலிருந்து கீழாக வருமாறு தைக்கப்பட்டிருந்தது. ஒரு வரிசை மார்பைச் சுற்றிவர, மத்தியில் அமைந்திருந்தது சட்டைக்கான பட்டன். மேலிருந்து இரண்டு பட்டன்களைக் கழட்டி விட்டு, அப்பொழுதுதான் அரும்பத் தொடங்கியிருந்த பதின்பருவ ரோமங்களைக் காட்டிக் கொண்டிருந்தான் அவன். அதற்கு மேட்ச்சிங்க்காக […]
புஷ்பா – தி ரைஸ்
சேல சேல சேல கட்டுனா… குறு குறு குறுன்னு பாப்பாங்க !!! குட்ட குட்ட கௌன போட்டா… குறுக்கா மறுக்கா பாப்பாங்க !!! சேல ப்ளௌஸோ, சின்ன கௌனோ… ட்ரெஸ்ல ஒண்ணும் இல்லங்க !!! ஆச வந்தா, சுத்திச் சுத்தி… அலையா அலையும் ஆம்பள புத்தி !!! ம்ம் சொல்றியா மாமா… ம்ஹூம் சொல்றியா மாமா … ம்ம் சொல்றியா மாமா… ம்ஹூம் சொல்றியா மாமா ?? – தமிழ் . […]
வரிகள் குறைக்கும் வழிகள்
அமெரிக்காவில் வருமான வரி வழக்கம் தொடங்கி நூற்றி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. முதன்முதலில் 1913 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அச்சமயம் அதிகபட்ச வரியாக 7% மட்டுமே இருந்தது. பின்னர், இரண்டாம் உலகப் போரின் சமயம், அதிகப்பட்ச வரி 94% வரை சென்றது. 1960களில் இருந்து 1980களில் 70% ஆகக் குறைந்த உச்சபட்ச வரி, அடுத்த சில ஆண்டுகளில் 50% என்ற நிலைக்கு வந்து, கடந்த முப்பது வருடங்களாக 30-40% என்ற எல்லைக்குள் ஏறி […]
டெலிப்ராம்ப்டர்
டெலிப்ராம்ப்டர் என்று தற்போது நாம் குறிப்பிடும் சாதனம், அந்தச் சாதனத்தை உருவாக்கிய நிறுவனத்தின் (TelePrompTer Corporation) பெயர் என்று உங்களுக்குத் தெரியுமா? எப்படிப் பிரதி எடுக்கும் சாதனத்தின் (Photo copier) பெயராக, அதை உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் (Xerox) உருவெடுத்ததோ, எப்படி இணையத்தில் தேடும் செயலை (Search), ஒரு தேடுபொறியின் (Google) பெயர் கொண்டு குறிப்பிடுகிறோமோ, அது போல, இங்கும் அந்த நிறுவனத்தின் பெயர் பிரபலமானது. தவிர, அச்சாதனத்திற்கு அப்பெயர் பொருத்தமாகவும் அமைந்தது. நாடகத்தில், திரைப்படத்தில் நடிப்பவர்கள் […]
காணாமல் போன பாடலாசிரியர்கள்
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு பாடலாசிரியர்கள் கோலொச்சியிருக்கிறார்கள். தமிழ் திரையிசை பாடல் வடிவத்தை உருவாக்கிய சங்கரதாஸ் சுவாமிகள் தொடங்கி, பாடல் படைப்பாக்கத்தில் உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், மேத்தா, வைரமுத்து, கங்கை அமரன், பிறைசூடன், பழனிபாரதி, அறிவுமதி, நா.முத்துக்குமார், பா.விஜய், யுகபாரதி, தாமரை, சினேகன், விவேகா, மதன் கார்க்கி எனப் பலரும் பங்களித்துள்ளனர். ஒவ்வொருவரும் மொழியைத் தங்களது பாணியில் கையாண்டுள்ளனர். தங்களது மொழியில் அன்றைய காலக்கட்டத்து நாயகர்களைப் பாட வைத்துள்ளனர். […]
காதல் எப்படி பேசுகிறது
காதல் எப்படி பேசுகிறது கன்னக்குழி அழகில் மெல்லிய இதழ் விரிப்பின் சிவப்பில் மிரளும் கண் விழியின் தவிப்பில் பெருமூச்சுக்கு இடையில் வரும் மூச்சில் புன்னகையின் இதழவிழ்ப்பில் அன்பு தளும்பும் மென்மொழியில் சீரற்ற இதயத் துடிப்பில் தனிமையில், மௌனத்தில் மற்றும் கண்ணீரில் காதல் பேசுகிறது. மின்னும் கண் பயத்தில் இணை சேர்ந்த மகிழ்ச்சியில் பெருமிதத்தில், பெரும் இதயத்துள் காதல் பிரகாசத்துடன் நிரம்பி வழிகிறது. அன்பான முகத்தில் சிலிர்த்து நடுங்கும் உடலின் அசைவில் வெட்கத் தொடுதலில் மகிழ்ச்சி மற்றும் வலிகளின் […]
பனியில் கார்டினல் குருவி (Northern Cardinal)
அழகான பிரகாசமான சிவப்பு சிறகுகளும், சொண்டுகளையும் அதே சமயம் நிற வேறுபாடு தரும் கன்னங்கவரும் கறுப்பு நிற கண் பகுதிகளைக் கொண்ட பறவைதான் கார்டினல் குருவி. இது மினசோட்டா மற்றும் வட கிழக்கு அமெரிக்கக் கண்டத்தில் இலகுவாக அடையாளம் காணக்கூடிய பறவையாகும். குறிப்பாக வெள்ளைப் பனிப் பின்னணியில், இலையற்ற செடிகள், மரங்களில் இருந்து பாடுவது கண் குளிர் காட்சியாகும். இந்தக் குருவி இலத்தீன் பறவை வகைப் பிரித்தலில் Cardinalis cardinalis என்று அழைக்கப்படும். கார்டினல் பொதுவாக பத்தைக்காட்டு […]